முதுமை நகை மொழிகள்

முதுமை நகை மொழிகள்

Funny Old Age Quotes


1. Middle age is when a guy starts turning of lights for economic rather than romantic reasons - Eli Cass

நடுத்தர வயது : காதல் காரணங்களுக்காக அல்லாமல் பொருளாதாரக் காரணங்களுக்காக விளக்கை அணைக்கும் பருவம் .


2. Middle age is your smart phone rings and you hope it's not for you , it's just an advertisement or wrong number .

உங்கள் திறன் பேசி ஒலிக்கும் போது அது எனக்கானதில்லை , ஏதாவது விளம்பரம் அல்லது தவறான அழைப்பு என்று நம்பிக்கை கொண்டால் நடுத்தர வயதை நீங்கள் எட்டி விட்டதாக அர்த்தம் .


3. Growing old is mandatory but growing up is optional - Walt Disney

வளர்ந்து முதிர்தல் என்பது கட்டாயமானது . வளர்ந்து அறிதல் என்பது விருப்பத்திற்கு உட்பட்டது .


4. Time may be a great healer but it's a lousy beautician - Dorothy Parker

காலம் என்பது எல்லாவற்றையும் குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவர் . ஆனால் அது ஒரு மோசமான ஒப்பனையாளர் .


5. At least you're not as old as you will be next year .

குறைந்த பட்சம் அடுத்த ஆண்டை விட ஒரு ஆண்டு இளையவராகவே நீங்கள் எப்போதும் இருப்பீர்கள் .


6. If I had known I was going to live this long , I'd have taken better care of myself .

இத்தனைக் காலம் நான் உயிரோடு இருப்பேன் என்பது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் என்னை நன்றாகக் கவனித்திருப்பேன் .


7. As you get older three things happen . The first is your memory goes and I can't remember the other two .

நீங்கள் முதுமையடைந்த பின்னர் மூன்று விஷயங்கள் நிகழும் . ஒன்று உங்கள் நினைவுகள் தவறும் . மற்ற இரண்டும் எனக்கு மறந்து விட்டது .


8. Childhood is the time of life when you make funny faces in the mirror . Middle age is the time when the mirror gets even .

குழந்தைப் பருவம் என்பது கண்ணாடியின் முன் நின்று முகத்தை அஷ்ட கோணல் செய்து விளையாடும் பருவம் . நடுத்தர வயது என்பது கண்ணாடி கணக்குத் தீர்க்கும் தருணம் .


9. Middle age is when work is a lot less fun and fun is a lot more work .

நடுத்தர வயதில் வேலை குறைந்த அளவே வேடிக்கையாக இருக்கும் . வேடிக்கை கடினமான வேலையாக இருக்கும் .


10 . Inside every old person is a young person wondering what the hell happened ? - Terry Pratchett

ஒவ்வொரு முதியவருக்குள்ளும் என்னவாயிற்று எனக்கு என்று வியப்புறும் ஒரு இளைஞன் இருக்கிறான் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14