கரடிச்சந்தை முதலீட்டு மொழிகள்
கரடிச்சந்தை முதலீட்டு மொழிகள்
1. எப்போதுமே காளைச்சந்தை இருக்கிறது ... அதைத் தொடர்ந்து கரடிச்சந்தை ... அதைத் தொடர்ந்து காளைச்சந்தை ... அதைத் தொடர்ந்து ...
- Templeton
2. முதலீட்டில் எது சௌகரியமாக இருக்கிறதோ (காளைச்சந்தை) அது பெரும்பாலும் இலாபகரமாக இருப்பதில்லை
- Robert Arnott
3. பங்குகளை பலசரக்கு மாதிரி வாங்குங்கள். வாசனைத் திரவியம் மாதிரி வாங்காதீர்கள்
- Benjamin Graham
4. தெருவில் இரத்த ஆறு ஓடும் தருணம் தான் பங்குகளை வாங்க உகந்த நேரம்
- John D Rockefeller
5. பங்குகளை நன்னம்பிக்கை (optimism) அடிப்படையில் வாங்காதீர்கள். எண்கணித (arithmetic) அடிப்படையில் வாங்குங்கள்
- Benjamin Graham
6. கரடிச்சந்தையில் காளைச்சந்தையை விட பன்மடங்கு சம்பாதிப்பதற்கான மூன்று வழிகள். ஏற்கனவே உள்ள பங்குத்தொகுப்பை அடிமாட்டு விலைக்கு விற்று விடாதீர்கள். பணம் கையிருப்பாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யுங்கள். பங்காதாய மறுமுதலீட்டை மேற்கொள்ளுங்கள் .
7. மதிப்பு முதலீட்டாளர்களால் கரடிச்சந்தையை உணர முடியாது. அவர்களைப் பொறுத்தவரை கரடிச்சந்தை தான் காளைச்சந்தை
- Irving Khan
8. கரடிக்கு எந்த விலையும் குறைந்த விலை கிடையாது. காளைக்கு எந்த விலையும் அதிக விலை கிடையாது .
9. மனதளவிலும் பண அளவிலும் தயார் நிலையில் உள்ளவர்களுக்கு கரடிச்சந்தை பேரிழப்பு அல்ல அது ஒரு பெரிய வாய்ப்பு
- Templeton
10.சில நேரங்களில் சில சந்தைகள். சில சமயம் காளைச்சந்தை. சில சமயம் கரடிச்சந்தை. நாம் சரியான மனோபாவத்தில் (temperament) இருந்தால் இரண்டு சந்தைகளிலும் இலாபம் ஈட்டலாம் .
11.காளைச்சந்தை அவநம்பிக்கையில் (pessimism) பிறக்கிறது. சந்தேகத்தில் (skepticism) வளர்கிறது. நன்னம்பிக்கையில் (optimism) முதிர்கிறது. பரவசத்தில் (euphoria) இறக்கிறது. அவநம்பிக்கையின் உச்சம் வாங்குவதற்கான தருணம். பரவசத்தின் உச்சம் விற்பதற்கான நேரம்
- Templeton
12.மீமிகை கரடிச்சந்தையில் தான் நாம் நிறையப் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அதனைக் கரடிச் சந்தையின் போது உணர மாட்டோம்
- வாரன் பஃபெட்
13.பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை உங்கள் எதிரியாகப் பார்க்காமல் நண்பனாகப் பாவியுங்கள். மற்றவர்களின் முட்டாள்தனத்தில் பங்கேற்காமல் அதிலிருந்து இலாபம் அடையப் பாருங்கள்
- வாரன் பஃபெட்
14.வெற்றிக்கான உத்திகளில் இழப்பதும் ஒன்று .
15.கரடிச்சந்தையில் பங்குகளைக் குறை மதிப்பில் வாங்குவது காலத்தை வாங்குவது போன்றது .
16. பங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானம் பங்குகளை விற்கும் போது தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக பங்குகளை எவ்வளவு குறை மதிப்பில் வாங்குகிறீர்கள் என்னும் புள்ளியில் தீர்மானிக்கப்படுகிறது .
17.தற்காலிக மதிப்பிழப்பு (quotational loss) என்பது வேறு. நிரந்தர மதிப்பிழப்பு (permanent loss) என்பது வேறு. கரடிச்சந்தையில் பங்குகள் தற்காலிக மதிப்பிழப்பிற்கு உள்ளாகும். அந்தப் பங்குகளை அச்சத்தில் விற்பது (panic selling) அந்தத் தற்காலிக மதிப்பிழப்பை நிரந்தரமாக்குவதற்கு ஒப்பானதாகும் .
18. கரடிச் சந்தையில் பங்குகளை தற்காலிக மதிப்பிழப்பில் வாங்குவது மீண்டும் வரவிருக்கும் காளைச் சந்தையின் மூலமான மதிப்புப் பெருக்கத்திற்குப் பெரிதும் உதவும் .
19. பங்குச்சந்தையில் இழந்த பணத்தைப் பங்குச்சந்தையின் மூலமாக மட்டுமே மீட்டெடுக்க முடியும் .
20.காளைச்சந்தைக்கு ஒரு கரடிச்சந்தை கட்டாயம் தேவை .
21.எல்லோரும் கரடிச்சந்தையில் பங்குகளை வாங்கி காளைச்சந்தையில் விற்றால் கரடிச்சந்தை காளைச்சந்தையாகவும் காளைச்சந்தை கரடிச்சந்தையாகவும் மாறி விடும் .
22.பன்மடங்காளர் பங்குகளின் பிறப்பிடம் கரடிச் சந்தை மட்டுமே .
23.காளைச் சந்தையிலும் கரடிச்சந்தையிலும் ஏறியிறங்கும் பங்கு விலைகள் வெற்றுக் கூச்சல் (noise) அதிகரித்து வரும் பங்காதாயங்கள் ஒரு குறியீடு (signal) கூச்சலைப் புறக்கணித்து குறியீட்டில் கவனம் கொள்ளுங்கள் .
24.ஒவ்வொரு துரதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டத்தின் வேர்கள் ஒளிந்திருக்கின்றன .
25.பங்குச்சந்தை மூச்சு விடக்கூடிய, தனக்கென தனிப்பட்ட மனத்தைக் கொண்ட ஒரு மிருகம். முதலீட்டு குருக்களின் சட்ட திட்டங்களுக்குள் அதனை அடைக்க முடியாது .
Comments
Post a Comment