Posts

கட்டற்ற தோட்டம்

  கட்டற்ற தோட்டம் " நூற்றுக்கணக்கான நிறுவனப்பங்குகளை வாங்கி வைத்திருப்பதான உத்தி சிறந்த ஒன்று தானா? முதலில் இத்தனை பங்குகளையும் அடித்தொடர (tracking) வேண்டும். ஒவ்வொரு பங்கும் பங்குத்தொகுப்பில் சிறிய இடத்தை வகித்தால் மொத்த வருமானத்தில் அதன் தாக்கம் குறைவாக மட்டும் தானே இருக்கும்? மேலும், ஒரு பங்கு, பங்குத்தொகுப்பின் மொத்த மதிப்பில் 5 சதவீதத்திற்கும் அதிகமானால் அத்தகைய பங்குகளை விற்று அதனை மீண்டும் 5 சதவீதம் என்ற அளவிற்குக் கொண்டு வர வேண்டாமா? " இந்தக் கேள்விக்குப் பதிலாக உங்களுக்கு இரண்டு கதைகள் சொல்ல விரும்புகிறேன்.  ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தனர். மனைவி, முதலீட்டு ஆலோசகர் ஒருவரின் வழிகாட்டுதலில் முதலீட்டை மேற்கொண்டார். ஆலோசகர் அவ்வப்போது இந்தப் பங்குகளை வாங்குங்கள் என்றால் மனைவியின் கணக்கில் கணவர் அந்தப் பங்குகளை வாங்குவார். இந்தப் பங்குகளை விற்று விடுங்கள் என்று ஆலோசகர் சொன்னால் அந்தப் பங்குகளை விற்று விடுவார். இவ்வாறு காலச்சக்கரம் உருண்டோடியது. ஒரு நாள் துரதிருஷ்டவசமாகக் கணவர் இறந்து விடுகிறார். இறந்து போன கணவர் தனிப்பட்ட முறையில் பங்குகளில் முதலீடு செய்து வந்தது மனைவ...

Raamdeo Agrawal- மணி மொழிகள்

Raamdeo Agrawal- மணி மொழிகள் Raamdeo Agrawal Quotes  1. If you invest for the long term, you'll pass through phases of very high return, meager return, a phase of no return and also negative return. People want only the high return phase. They don't want the other three. You will never have a long-term return like that. நீங்கள் நீண்ட கால அளவில் முதலீடு செய்யும் போது மீமிகை வருமானம், குறை வருமானம், பூஜ்ய வருமானம் மற்றும் எதிர்ம வருமானம் ஆகிய நிலைகளைக் கடந்து செல்வீர்கள். மாந்தர்கள் மீமிகை வருமானத்தை மட்டுமே விரும்புகிறார்கள். மற்ற மூன்றையும் அவர்கள் விரும்புவதில்லை. இந்த மாதிரியான நீங்கள் விரும்பும் நீண்டகால வருமானத்தை உங்களால் ஒருபோதும் பெற இயலாது. 2. An investor looks for change in value, where as a speculator looks for change in price only. ஒரு முதலீட்டாளர் நிறுவனங்களின் மதிப்பு உயர்வில் கவனம் கொள்கிறார். ஒரு ஊக வணிகர் நிறுவனங்களின் விலை உயர்வில் கவனம் கொள்கிறார். 3. Don't consume your energy in trying to figure out the market movements; use that all the energy to figure ...

கதைகளின் கதை- 2

கதைகளின் கதை - 2 Narrative Fallacy - 2 'வாரன் பஃபெட், Berkshire Hathaway என்கிற நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஒரு ஜவுளி நிறுவனமாகத் தொடங்கப்பட்டது, இன்று, பல்வேறு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வெற்றிகரமான ஒரு முதலீட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. அதன் சந்தை மதிப்பு 95.353 டிரில்லியன் அமெரிக்க டாலர். அது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பஃபெட், அதன் பங்குகள் மூலமாக உலகப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்' Berkshire Hathaway நிறுவனத்தைக் குறித்து இவ்வாறு விளக்குவது narrative fallacy ன் பாற்பட்டது. எந்த ஒரு நிறுவனமும் இவ்வாறு நேர் கோட்டில் பயணித்திருக்காது. நாம் Berkshire Hathaway நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்து அதன் இன்று வரையிலான கதையை ஒரு பருந்துப் பார்வையாகப் பார்க்கலாம்.  பஃபெட், அவர் முதலீட்டாளர்களுக்கு வருடாவருடம் எழுதும் கடிதத்தில் அவருடைய தவறுகளை முதலில் பட்டியலிடுவது வழக்கம். அந்த வகையில் பஃபெட்டின் முக்கியமான சில தவறுகளை முதலில் பார்க்கலாம்.   Berkshire Hathaway ஜவுளி ஆலையை...

Basant Maheswari- மணி மொழிகள்- 2

Ba sant Maheswari- மணி மொழிகள்- 2 1. Unlike a fixed deposit, stocks don't hit all time highs every second. நிரந்தர வைப்பு நிதிகளைப் போல, பங்குகள், ஒவ்வொரு வினாடியும் அதன் உயர்ந்த பட்ச அளவை எட்டாது. 2. Most investors chase stocks that will make them money rather than sit with the ones that will create wealth. பெரும்பாலான முதலீட்டாளர்கள் பங்குகளுடன் அடங்கி அமர்ந்து செல்வத்தை உருவாக்குவதை விடுத்து பணத்தை அடைவதற்காகப் பங்குகளைத் துரத்திய வண்ணம் இருக்கிறார்கள். 3. Investing is about making less and retaining more rather than making more and retaining less. அதிகமாக சம்பாதித்து குறைவாக தக்கவைத்துக் கொள்வதை விட குறைவாக சம்பாதித்து அதிகமாகத் தக்கவைத்துக் கொள்வதே முதலீடு எனப்படுவது. 4. The purchase price has nothing to do with what the stock will do from today. பங்குகளை வாங்கிய விலைக்கும், வாங்கிய பின்னர், வாங்கிய விலையிலிருந்து அது கூடுமா அல்லது குறையுமா என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  5. What a company does in its market matters more than what the participants do to the market price o...

புதிய 52 வாரக் குறைவு உத்தி

புதிய 52 வாரக் குறைவு உத்தி New 52 week low strategy  52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகளில் முதலீடு செய்யலாமா? 52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகள், பெரும்பாலான சமயங்களில், நியாயமான காரணங்களுக்காக அவ்விதம் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும். இத்தகைய நிறுவனங்கள் அடிக்கடி சந்தைக்கு வந்து நிதியைத் திரட்டி அவற்றின் பங்கு முதலை (equity capital) நீர்த்துப்போகும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். இவற்றின் கடன்-முதல் விகிதம் (debt-equity ratio) கட்டுக்கடங்காமல் இருக்கும். இவை ஒருபோதும் வளர்ச்சியின் மீதான வளர்ச்சியை எட்டாது. இவற்றுக்கு எந்த அகழியும் (moat) இருக்காது. இவற்றில் நிறுவனர் பங்கு ஒரு சதவீதமாகவும் சிறு முதலீட்டாளர்கள் பங்கு 99 சதவீதமாகவும் இருக்கும். அறம் என்பது அறவே இருக்காது. ஆனால் இந்த 52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகளின் வரிசையில் புதிய நிறுவனம் ஒன்று இடம் பெற்றால் (new 52 week low) அது கவனத்திற்குரிய ஒன்றாகிறது.  சமீபத்தில் Natco Pharma பங்கு, புதிய 52 வாரக் குறைவு வரிசையில் இடம் பெற்றது. இந்த மாதிரி பங்குகளைப் பகுப்பாய்வுக்கு உட்படு...

அழியாத செல்வம் கல்வி

அழியாத செல்வம் கல்வி 1. That is what learning is. You suddenly understand something you've understand all your life, but in a new way- Doris Lessing கற்றல் என்பது இது தான். நீங்கள் ஏற்கெனவே புரிந்து கொண்டதைப் புதிய முறையில் தெரிந்து தெளிவது. 2. Live as if you were to die tomorrow.  Learn as if you were to live forever. நாளை இறப்பது போல் வாழுங்கள். என்றென்றும் வாழ்வது போல் கற்றுக்கொள்ளுங்கள். 3. Books increase by rule of compound interest: one interest leads to another interest and this compounds into third- Tom Rachman புத்தகங்கள் கூட்டுப்பெருக்க விதியின் படி செயல்படும்: ஒன்றின் மீதான ஆர்வம் மற்றொன்றுக்கு இட்டுச் செல்லும். அது பிறிதொன்றுக்கு அழைத்துச் செல்லும். 4. The only thing that compounds faster than interest is learning- Orrin Woodward வட்டி வருமானத்தை விட அதிகமாகக் கூட்டுப்பெருக்கத்திற்கு உள்ளாவது கற்றல் மட்டுமே. 5. Read 500 pages everyday. That's how knowledge works. It builds up like compound interest- Warren Buffett தினமும் 500 பக்கங்களைப் படியுங்கள். அது கூட்டு வட்டி...

பணத்திற்கு அப்பால்

பணத்திற்கு அப்பால் Beyond Money 1. Profit for a company is like oxygen for a person. If you don’t have enough of it, you are out of the game. But if you think your life is about breathing you're really missing something- Peter Drucker மாந்தர்களுக்கு ஆக்சிஜன் எவ்வளவு அத்தியாவசியமோ அதே மாதிரி நிறுவனங்கள் இலாபமீட்ட வேண்டியதும் அவசியம். தேவையான அளவில் அது கிடைக்காவிட்டால் ஆட்டம் முடிந்து விடும். ஆனால் உங்கள் வாழ்க்கையே மூச்சு விடுதலில் கவனம் கொண்டிருக்குமானால் நீங்கள் உண்மையிலேயே ஏதொவொன்றை இழப்பதாக அர்த்தம். 2. Chase the vision not the money. The money will end up following you- Tony Hsieh பணத்தை அல்ல தொலை நோக்கில் கவனம் கொள்ளுங்கள். பணம் தானாக வரும். 3. We don't make movies for money. We make money to make more movies- Walt Disney நாங்கள் பணம் ஈட்டுவதற்காக படம் எடுக்கவில்லை. மேலும் படம் எடுப்பதற்காகப் பணம் ஈட்டுகிறோம். 4. The person who starts simply with the idea of getting rich won't succeed. You must have a larger ambition- John D Rockefeller உங்களின் ஒரே இலட்சியம் பணக்காரர...