Raamdeo Agrawal- மணி மொழிகள்

Raamdeo Agrawal- மணி மொழிகள்

Raamdeo Agrawal Quotes 


1. If you invest for the long term, you'll pass through phases of very high return, meager return, a phase of no return and also negative return. People want only the high return phase. They don't want the other three. You will never have a long-term return like that.


நீங்கள் நீண்ட கால அளவில் முதலீடு செய்யும் போது மீமிகை வருமானம், குறை வருமானம், பூஜ்ய வருமானம் மற்றும் எதிர்ம வருமானம் ஆகிய நிலைகளைக் கடந்து செல்வீர்கள். மாந்தர்கள் மீமிகை வருமானத்தை மட்டுமே விரும்புகிறார்கள். மற்ற மூன்றையும் அவர்கள் விரும்புவதில்லை. இந்த மாதிரியான நீங்கள் விரும்பும் நீண்டகால வருமானத்தை உங்களால் ஒருபோதும் பெற இயலாது.


2. An investor looks for change in value, where as a speculator looks for change in price only.


ஒரு முதலீட்டாளர் நிறுவனங்களின் மதிப்பு உயர்வில் கவனம் கொள்கிறார். ஒரு ஊக வணிகர் நிறுவனங்களின் விலை உயர்வில் கவனம் கொள்கிறார்.


3. Don't consume your energy in trying to figure out the market movements; use that all the energy to figure out which stocks to buy.


சந்தை நகர்வுகளைக் கணிப்பதில் உங்கள் சக்தியைச் செலவழிக்காதீர்கள். மாறாக எந்தப் பங்குகளை வாங்குவது என்பதில் அதனைச் செலவிடுங்கள்.


4. Be ready to pay the tuition fee. It's losses from the mistakes one makes at the beginning of investing journey. It's the cheapest tuition fee.


பங்குச்சந்தையில் முதலீட்டை நீங்கள் மேற்கொள்ளத் தொடங்கும் போது வரும் நஷ்டங்கள் உங்களுக்கான பங்குச்சந்தை பயிற்சிக் கட்டணமாகும். சந்தைக்கான குறைந்த பட்ச பயிற்சிக் கட்டணமும் அதுவே ஆகும்.


5. Market never grows in a straight line. Market will take you from 1 lakh to 10 lakh and then it will bring down to 3 lakh. At that moment, don't think the market bought you down to 3 lakh from 10 lakh. The reality is that you have grown to 3 lakh from 1 lakh.

 

சந்தை எப்போதுமே ஒரே நேர்கோட்டில் வளர்ந்து செல்லாது. சந்தை, உங்கள் பங்குத்தொகுப்பை ஒரு இலட்சத்திலிருந்து பத்து இலட்சத்திற்குக் கொண்டு சென்று பின்னர் அதனை மூன்று இலட்சத்திற்கு இறக்குவதாகக் கொள்ளலாம். அந்த நிலையில், சந்தை, பத்து இலட்சத்திலிருந்து மூன்று இலட்சத்திற்கு உங்களை இறக்குவதாகக் கருதாதீர்கள். உண்மையில் அது உங்களை ஒரு இலட்சத்திலிருந்து மூன்று இலட்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.


6. You are not going to make money from the market because of your brilliance of intelligence. You are going to make money only because of your patience.


பங்குச்சந்தையில் உங்கள் அறிவுக்கூர்மையைக் கொண்டு பணம் பண்ண முடியாது. உங்கள் பொறுமையைக் கொண்டு மட்டுமே பணம் பண்ண முடியும்.


7. Everybody in the market knows the price by nanoseconds. But not even 0.1 percent know the value.


ஒவ்வொருவரும், பங்குகளின் விலையை, வினாடிகளின் பகுதிகளில் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் பங்குகளின் மதிப்பை ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் கூட தெரிந்து வைத்திருப்பதில்லை.


8. It takes decades for a company to grow and we want the stock prices to grow in few months.


நிறுவனம் ஒன்று வளர்வதற்கு தசாப்தங்கள் பிடிக்கும். ஆனால் நிறுவனப்பங்குகள் மாதங்களில் வளர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.


9. No one can get the bottom, absolutely ... staggering your bets is the only way you can get some kind of a sensible entry into the market.


பங்குச்சந்தையின் அடிமுடியை யாராலும் பிடிக்க முடியாது. தொடர்ந்தவாக்கிலான முதலீடுகளே ஓரளவு பலன் தரும்.


10. Market doubles every 5 to 6 years- stay invested, stay patient. 


சந்தை, 5 முதல் 6 ஆறு ஆண்டு கால அளவில் இரட்டிப்பாகிறது. ஆக, சந்தையில் இருங்கள். பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். 


Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

Daniel Crosby - மணி மொழிகள்

பங்குச்சந்தை பதில்கள் - 14