Basant Maheswari- மணி மொழிகள்- 2

Basant Maheswari- மணி மொழிகள்- 2


1. Unlike a fixed deposit, stocks don't hit all time highs every second.


நிரந்தர வைப்பு நிதிகளைப் போல, பங்குகள், ஒவ்வொரு வினாடியும் அதன் உயர்ந்த பட்ச அளவை எட்டாது.


2. Most investors chase stocks that will make them money rather than sit with the ones that will create wealth.


பெரும்பாலான முதலீட்டாளர்கள் பங்குகளுடன் அடங்கி அமர்ந்து செல்வத்தை உருவாக்குவதை விடுத்து பணத்தை அடைவதற்காகப் பங்குகளைத் துரத்திய வண்ணம் இருக்கிறார்கள்.


3. Investing is about making less and retaining more rather than making more and retaining less.


அதிகமாக சம்பாதித்து குறைவாக தக்கவைத்துக் கொள்வதை விட குறைவாக சம்பாதித்து அதிகமாகத் தக்கவைத்துக் கொள்வதே முதலீடு எனப்படுவது.


4. The purchase price has nothing to do with what the stock will do from today.


பங்குகளை வாங்கிய விலைக்கும், வாங்கிய பின்னர், வாங்கிய விலையிலிருந்து அது கூடுமா அல்லது குறையுமா என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 


5. What a company does in its market matters more than what the participants do to the market price of the company. 


சந்தை பங்கேற்பாளர்கள் பங்கின் விலையில் என்ன செய்கிறார்கள் என்பதை விட நிறுவனம் அதன் சந்தையில் என்ன செய்கிறது என்பதே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.


6. Knowing what not to do in the stock market is more important than knowing what to do.


பங்குச்சந்தையில் என்ன செய்யக்கூடாது என்பது என்ன செய்ய வேண்டும் என்பதை விட முக்கியமானது.


7. Market pays for companies that put cash to work and not for the ones that put cash in the bank. 


பணத்தை வங்கியில் வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு அல்லாது, அதனை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, சந்தை, அதற்குரிய மதிப்பை வழங்கும்.  


8. A leveraged portfolio in a falling market is like a hand grenade with its pin pulled out.


கடன் மூலமான பங்குத்தொகுப்பு, ஒரு சரியும் சந்தையில், வெடிக்கக் காத்திருக்கும் கையெறி குண்டைப் போன்றது.


9. Stock markets don't work on timelines.


பங்குச்சந்தை கால அட்டவணைப்படி இயங்காது.


10. It is not what you make that counts but how much you can keep. 


எதனை ஆக்குகிறீர்கள் என்பது இங்கே கணக்கில் வராது. எதனைக் காக்கிறீர்கள் என்பதே கணக்கில் வரும்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

Daniel Crosby - மணி மொழிகள்

பங்குச்சந்தை பதில்கள் - 14