எதிர் எதிர் மனம்

எதிர் எதிர் மனம்

The Opposable Mind

இயற்கை, மனிதனுக்கு மட்டும் எதிர் விரலாக கட்டை விரலைக் கொடுத்திருக்கிறது. கட்டை விரல் மட்டும் இல்லாவிட்டால் எழுதுவது, வரைவது, ஊசியில் நூல் கோர்ப்பு உள்ளிட்ட நுட்பமான வேலைகளை நம்மால் செய்ய இயலாது.  

இயற்கை மனிதனுக்கு எதிர் எதிர் விரல்களை மட்டும் கொடுக்கவில்லை. எதிர் எதிர் மனத்தையும் கொடுத்திருக்கிறது. அது என்ன எதிர் எதிர் மனம்? ஒன்றுக்கொன்று முரணான சிந்தனைகளை மனதில் தேக்கி அவற்றிலிருந்து புதிய தீர்வை நோக்கி முன்னேறிச் செல்வது. ஒன்றிரண்டு உதாரணங்கள் சொன்னால் உங்களுக்கு எளிமையாகப் புரியும்.

பொதுவாக ஒரு பொருளை வாங்குபவர் தான் பணம் தர வேண்டும். விற்பவர் பணம் தந்தால்? கூகுள் தேடுபொறியின் வியாபார அடிப்படையே இந்த எதிர் சிந்தனை தான். கூகுள் தேடுபொறியில் நீங்கள் தேடுதல்களை உள்ளீடு செய்யும் போது உங்கள் தேடுதலை ஒட்டி விளம்பரங்கள் வரும். விளம்பரங்களைத் தரும் அந்த நிறுவனங்கள் கொடுக்கும் பணம் தான் கூகுளின் வருமானம்.

பொதுவாக வளர்ச்சி என்பதை நாம் பெரியது என்ற பதத்துடன் தான் இணைத்துப் பார்க்கப் பழகியிருக்கிறோம். சிறியதாவதன் மூலமாகவும் வளரலாம். குழப்பமாக இருக்கிறதா? பங்குச்சந்தையில், நிறுவனங்கள், தங்கள் நிறுவனப்பங்குகளைத் திரும்ப வாங்குதல் என்ற நிகழ்வைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்போது என்ன நடக்கிறது? ஒரு நிறுவனத்திற்கு 1000 பங்குகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். 500 பங்குகளை நிறுவனம் திரும்ப வாங்கிக் கொள்கிறது. பங்குச்சந்தையில் அதன் மதிப்பு இரட்டிப்பாகி விடும். அதாவது  சிறியதே பெரியது என்று ஆகி விடுகிறது . இவ்வாறாக சிறியதாவதன் மூலமாகவும் வளரலாம்.

இயற்கை இப்பூவுலகில் நமக்கு மட்டுமே அளித்திருக்கும் இந்த அரிதினும் அரிதான அருட்கொடையைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுவோம்.

Inspiration from the book The Opposable Mind by Roger Martin

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14