Posts

கணிதம் உங்களை எவ்விதம் காப்பாற்றும் ?

கணிதம் உங்களை எவ்விதம் காப்பாற்றும் ? பங்குச்சந்தையில் முதலீடு செய்ய algebra என்று அழைக்கப்படும் சாதாரண இயற்கணிதம் மட்டும் தெரிந்திருந்தால் சிறப்பு . சிக்கலான டெரிவேடிவ் கணக்குகள் தெரியாமல் இருப்பது இன்னும் சிறப்பு . நிறையப் பேர் பங்குச்சந்தை குறித்துப் பாராமுகமாக இருப்பதற்கான அடிப்படையான காரணம் கூட்டுப் பெருக்கம் குறித்த சரியான புரிதல் இல்லாமையே என்பதாகத் தோன்றுகிறது . 0.1 சதவீத CAGR வேறுபாடு கூட ஆண்டாண்டுகளின் கணக்கில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தவல்லது . அதே மாதிரி பணவீக்கம் குறித்த புரிதல் . முதலீட்டில் பணவீக்கத்தைக் கழித்த கணக்கீடுகள் மிகவும் அடிப்படையானவை . அதற்கான சமன்பாடு : உண்மையான வருமானம் = வருமானம் - பணவீக்கம் . வருமானம் 7 சதவீதம் . பணவீக்கம் 7 சதவீதம் . எனில் உண்மையான வருமானம் பூஜ்யம் . உங்கள் முதலீடுகள் உண்மையான வருமானம் ஈட்ட பணவீக்கத்தை வெல்வதாக அவை இருக்கவேண்டும் . வெறுமனே வென்றால் மட்டும் போதாது . பணவீக்கத்தின் மடங்குகளில் வெல்ல வேண்டும் . அதற்குப் பங்குச்சந்தை முதலீடுகள் தான் ஒரே வழி . சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு என்பதாகத் தொலைக்காட்சியில் breaking news போடு...

இயற்கை எவ்விதம் இறுதியில் வெல்கிறது ?

இயற்கை எவ்விதம் இறுதியில் வெல்கிறது ? உலகம் முழுவதுமான அனைத்துக் கலாச்சாரங்களிலும் இயற்கையை வழிபடும் ஒரு போக்கு இயல்பாக இருக்கிறது . தன் வாழ்நாளில் பாதியைக் கழித்து விட்ட சூரியன் ஒரு மகா சக்தியாக வழிபடப்படுகிறது . அனாதி காலந்தொட்டு உங்கள் முன்னோர்களின் முன்னோர்கள் சூரியனை வணங்கியிருக்கலாம் . நீங்களும் ஆயிரமாயிரம் கரங்கள் கொண்டு இந்தப் பூவுலகை அணைக்கும் சூரியனை வணங்கும் போது தொடர்ச்சியின் ஒரு கண்ணி உருவாக்கம் பெறுகிறது .  வாழ்நாள் முழுமையையும் ஒரே இடத்தில் ஒற்றைக் காலில் தவநிலையில் கழிக்கும் மரங்கள் தெய்வமாக வழிபடப்படுகின்றன .  ஒற்றைச் செல் உயிரினமான அமீபாவில் இருந்து மனித இனம் வரை இயற்கையின் கூட்டுப் பெருக்கமேயன்றி வேறென்ன ? ஆனால் இயற்கையின் கூட்டுப் பெருக்க விகிதம் (CAGR) 0.00000004 சதவீதம் என்ற குறை அளவுகளில் இருப்பதால் குறுகிய கால அளவுகளில் நம்மால் அதனை உணர முடியாது . உணர முடியாதது என்பதற்காக அது இல்லை என்பதாக ஆகி விடாது . முதலீட்டிலும் இயற்கை வழி என்பதாக ஒரு கருத்தாக்கம் இருக்கிறது . கடன் வழி முதலீடு என்றால் அதற்கான வருமானத்திற்கென்று ஒரு வரையறை இருக்கிறது . அந்த முதலீட்...

Ayn Rand - மணி மொழிகள்

Ayn Rand - மணி மொழிகள் Ayn Rand Quotes 1. A creative man is motivated by the desire to achieve not by the desire to beat others . படைப்பாற்றல் மிக்க ஒரு மனிதன் சாதிக்க வேண்டும் என்ற அவாவினால் ஊக்கம் கொள்வானேயன்றி மற்றவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல . 2. The man who does not value himself , cannot value anything or anyone . தன்னை மதிப்பீடு செய்ய இயலாத மனிதனால் யாரையும் எதனையும் மதிப்பீடு செய்ய இயலாது . 3. My happiness is not the means to any end . It is the end . It is it's own goal . It is it's own purpose . எனது மகிழ்ச்சி என்பது அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல . அதுவே இலக்கு . அதுவே அதன் நோக்கம் . 4. The smallest minority on earth is the individual . Those who deny individual rights cannot claim to be defenders of minorities . இந்தப் பூவுலகின் மிகச்சிறிய சிறுபான்மையினர் தனியொரு மனிதன் மட்டுமே . தனி மனித உரிமைகளை மதிக்காதோர் சிறுபான்மையினரின் பாதுகாவலராக இருக்க முடியாது . 5. If it's worth doing , it's worth overdoing. ஒன்றைச் செய்வது நலம் தரும் என்ற...

எளிமையே வெல்லும் - 2

எளிமையே வெல்லும் - 2 புதிய பரஸ்பர நிதி வெளியீடுகளில் (New Fund Offer) முதலீடு செய்வது சிறந்ததா அல்லது சந்தையில் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிதிகளில் முதலீடு செய்வது சிறந்ததா ? பரஸ்பர நிதி நிறுவனங்கள் அவர்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பை (Assets Under Management சுருக்கமாக AUM ) அதிகரிக்க அவ்வப்போது புதிய நிதிகளை வித்தியாசமான பெயர்களில் வெளியிடும் . TIGER என்ற பெயரில் ஒரு பரஸ்பர நிதி வெளிவந்தது . பங்குச்சந்தையில் காளை கரடி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் . இந்தப் புலி எங்கிருந்து வந்தது ? TIGER என்றால் The Infrastructure Growth and Economic Reforms என்பதன் சுருக்கம் . விட்டேனா பார் என்று இன்னொரு பரஸ்பர நிதி நிறுவனம் LION என்ற பெயரில் ஒரு நிதியை வெளியிட்டது . Large cap Intermediate cap Opportunities New offerings என்பதன் சுருக்கம் LION . பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த மாதிரி வித்தியாசமான பெயர்களிலும் சேர்க்கைகளிலும் புதிய புதிய மிருகங்களைச் சந்தையில் உலாவ விட்டு மன்னிக்கவும் புதிய புதிய நிதிகளை வெளியிட்டு பத்து ரூபாய் யூனிட் பத்து ரூபாய்க்கே என்று கூவிக் கூவி விற்கும் . முதலீட்ட...

கூகுள் கேட்ட கேள்விகள் - 2

கூகுள் கேட்ட கேள்விகள் - 2 Questions by Google - 2 (Ideas panel questions) 1. What would have happened to stock market if Harshad mehta did not get caught ? ஹர்ஷத் மேத்தா பிடிபடவில்லை என்றால் பங்குச்சந்தை என்னவாகியிருக்கும் ? சந்தை இன்னும் உயரங்களுக்குச் சென்றிருக்கும் . விழும் போது அடியும் பலமாக இருந்திருக்கும் . 2. Impact of mutual funds investment growth on equity markets performance ? பரஸ்பர நிதி முதலீடுகள் அதிகரித்து வருவது பங்குச் சந்தைக்கு எவ்விதம் உதவும் ? முன்பெல்லாம் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளைக் கொஞ்சமே கொஞ்சம் விற்றாலும் சந்தை சரிந்து விடும் . இப்போது சந்தை சரியாமல் எதிர்த்து நிற்கிறது . இதற்கு முழுமுதற்காரணம் நாளும் அதிகரித்து வரும் பரஸ்பர நிதி முதலீடுகள் மட்டுமே . சந்தையின் மதிப்பைத் தக்க வைக்க பரஸ்பர நிதி முதலீடுகள் பேருதவி புரிகின்றன . முதலீட்டாளர்களும் இதனால் வளமை அடைகின்றனர் . 3. I want to invest in stock market but I am not from commerce background where should I start from ? நான் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறேன் . ஆனால் வர்த்தகப் பின்புலம் ...

ஞான மொழிகள்

ஞான மொழிகள் Wisdom Quotes 1. We don't receive wisdom ; we must discover it for ourselves after a journey that no one can take us or spare us - Marcel Proust நாம் ஞானத்தைப் பெற முடியாது . அது நீண்ட நெடிய பயணத்தின் பின்னர் நாம் கண்டறிய வேண்டியது . அதனை யாரும் நம்மிடமிருந்து எடுக்கவோ அல்லது கொடுக்கவோ இயலாது . 2. The whole problem with the world is that fools and fanatics are always so certain of themselves , but wiser people so full of doubts - Bertrand Russell உலகத்துடனான பெரும் பிரச்னை என்னவென்றால் முட்டாள்களும் வெறியர்களும் தங்களைக் குறித்த நிச்சயம் கொண்டவர்களாகவும் புத்திசாலிகள் தங்களைக் குறித்த ஐயம் கொண்டவர்களாகவும் இருப்பது தான் .  3. Age doesn't always bring wisdom . Sometimes age comes alone . வயது , ஞானத்தை எப்போதும் கொண்டு வராது . சில சமயங்களில் வயது தனியே வரும் .  4. The wisest mind has something yet to learn - George Santayana புத்திசாலி மனதிற்கு கற்றுக் கொள்ள வேண்டியது ஏதேனும் எப்போதும் இருக்கும் .  5. Science is organized knowledge . Wisdom is organized life - ...

கனவு மொழிகள்

கனவு மொழிகள் Dream Quotes 1. The distance between your dream and reality is called action . உங்கள் கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட தூரம் செயல்பாடு என்பதாக அழைக்கப்படுகிறது . 2. It feels good to be lost in the right direction . சரியான திசையில் தொலைந்து செல்வது ஏற்புடையதே . 3.Sometimes the right path is not the easiest one . சில சமயங்களில் சரியான பாதை இலகுவானதாக இருக்காது . 4. Life is not about finding yourself . Life is about creating yourself - George Bernard Shaw உங்களைக் கண்டெடுப்பது வாழ்க்கையல்ல . வாழ்க்கை என்பது உங்களை நீங்களே உருவாக்குவதாகும் . 5. Your work is to discover your world and then with all your heart give yourself to it - Buddha உங்களுக்கான உலகத்தைக் கண்டுபிடியுங்கள் . பின்னர் மனமுவந்து அந்த உலகிற்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் . 6. Do not follow where the path may lead . Go instead where there is no path and leave a trail - Ralph Waldo Emerson கண்ணில் பட்ட பாதைகளில் எல்லாம் செல்லாதீர்கள் . மாறாக ஒரு தனிப்பட்ட பாதையை உங்களுக்காக உருவாக்கித் தடம் பதியுங்கள் . 7.Ne...