கூகுள் கேட்ட கேள்விகள் - 2

கூகுள் கேட்ட கேள்விகள் - 2

Questions by Google - 2

(Ideas panel questions)

1. What would have happened to stock market if Harshad mehta did not get caught ?
ஹர்ஷத் மேத்தா பிடிபடவில்லை என்றால் பங்குச்சந்தை என்னவாகியிருக்கும் ?

சந்தை இன்னும் உயரங்களுக்குச் சென்றிருக்கும் . விழும் போது அடியும் பலமாக இருந்திருக்கும் .

2. Impact of mutual funds investment growth on equity markets performance ?
பரஸ்பர நிதி முதலீடுகள் அதிகரித்து வருவது பங்குச் சந்தைக்கு எவ்விதம் உதவும் ?

முன்பெல்லாம் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளைக் கொஞ்சமே கொஞ்சம் விற்றாலும் சந்தை சரிந்து விடும் . இப்போது சந்தை சரியாமல் எதிர்த்து நிற்கிறது . இதற்கு முழுமுதற்காரணம் நாளும் அதிகரித்து வரும் பரஸ்பர நிதி முதலீடுகள் மட்டுமே . சந்தையின் மதிப்பைத் தக்க வைக்க பரஸ்பர நிதி முதலீடுகள் பேருதவி புரிகின்றன . முதலீட்டாளர்களும் இதனால் வளமை அடைகின்றனர் .

3. I want to invest in stock market but I am not from commerce background where should I start from ?
நான் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறேன் . ஆனால் வர்த்தகப் பின்புலம் எதுவும் எனக்கில்லை . நான் எதிலிருந்து தொடங்குவது ?

வர்த்தகப் பின்புலங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது ஆகப்பெரிய அனுகூலங்களைக் கொடுக்கவல்லது . ஆனால் நீங்கள் தொடங்க வேண்டும் .

4. Need training to enhance my sub broker business in stock market ?
பங்குச்சந்தை இணைத் தரகராக இருக்கிறேன் . என் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய நான் என்ன செய்ய வேண்டும் ?

பங்குச்சந்தை வியாபாரம் மட்டுமல்ல அது எந்த வியாபாரமாக இருந்தாலும் சரி உங்கள் ஆர்வமும் உங்கள் வாடிக்கையாளர் ஆர்வமும் ஒரு புள்ளியில் இணையும் . அதில் மட்டும் கவனம் கொள்ளுங்கள் .

5. Does solar eclipse affects stock market ?
சூரிய கிரகணம் பங்குச்சந்தையைப் பாதிக்குமா ?

முடியல !

6.Will Indian stock market fall after Diwali ?
தீபாவளிக்குப் பின் சந்தை சரியுமா ?

தீபாவளிக்குப் பின்னர் சந்தை சரிந்தால் அது இன்னொரு தீபாவளி .

7.Self trading is good or bad in share market ?
பங்கு வியாபாரம் நல்லதா அல்லது கெட்டதா ?

குறுகிய கால அளவில் கெட்டது . பன்னெடுங்கால அளவில் நல்லது .

8.Each public limited company has to be listed on stock market ?
அனைத்து நிறுவனங்களும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டியது கட்டாயமா ?

அப்படி எதுவும் அவசியம் கிடையாது . ஆனால் பட்டியல் இடப்படுவது சில அனுகூலங்களைக் கொடுக்கவல்லது . மிகவும் முக்கியமாகப் பங்குச்சந்தை மாயப் பணத்தைப் பெற ஏதுவாகும் . பொது வெளியில் உங்கள் கணக்கு வழக்குகள் இருப்பது வெளிப்படைத்தன்மையையும் ஒழுங்குமுறையையும் கொடுப்பதாக இருக்கும் .

9.Link between economy and stock market ?
பொருளாதாரத்திற்கும் பங்குச்சந்தைக்கும் உள்ள இணைப்பு குறித்து ?

எப்போதுமே பங்குச்சந்தை பொருளாதாரத்திற்கு முன்பாகச் செல்லும் . பொருளாதாரம் உச்சத்தில் இருக்கும் போது பங்குச்சந்தை வீழ்வதற்கும் , பொருளாதாரம் வீழ்ச்சியில் இருக்கும் போது பங்குச்சந்தை நிமிர்வதற்கும் இது தான் காரணம் .

10.Can I come out of bankruptcy depending on your stock market strategies ?
பங்குச்சந்தை சார்ந்த உங்கள் உத்திகளைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக நான் திவால் நிலையிலிருந்து மீள முடியுமா ?

திவால் நிலையிலிருந்து மீள்வதும் பங்குச்சந்தை முதலீடுகளும் தனிப்பட்டவை . முதலில் நீங்கள் திவால் நிலையிலிருந்து மீள வேண்டும் . அந்தப் பள்ளத்தை அடைத்த பின்னர் தான் அதன் மேல் கோட்டை கொத்தளங்களைக் கட்டி எழுப்ப முடியும் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14