கனவு மொழிகள்
கனவு மொழிகள்
Dream Quotes
1. The distance between your dream and reality is called action .
உங்கள் கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட தூரம் செயல்பாடு என்பதாக அழைக்கப்படுகிறது .
2. It feels good to be lost in the right direction .
சரியான திசையில் தொலைந்து செல்வது ஏற்புடையதே .
3.Sometimes the right path is not the easiest one .
சில சமயங்களில் சரியான பாதை இலகுவானதாக இருக்காது .
4. Life is not about finding yourself . Life is about creating yourself - George Bernard Shaw
உங்களைக் கண்டெடுப்பது வாழ்க்கையல்ல . வாழ்க்கை என்பது உங்களை நீங்களே உருவாக்குவதாகும் .
5. Your work is to discover your world and then with all your heart give yourself to it - Buddha
உங்களுக்கான உலகத்தைக் கண்டுபிடியுங்கள் . பின்னர் மனமுவந்து அந்த உலகிற்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் .
6. Do not follow where the path may lead . Go instead where there is no path and leave a trail - Ralph Waldo Emerson
கண்ணில் பட்ட பாதைகளில் எல்லாம் செல்லாதீர்கள் . மாறாக ஒரு தனிப்பட்ட பாதையை உங்களுக்காக உருவாக்கித் தடம் பதியுங்கள் .
7.Never give up on a dream just because of the time it will take to accomplish it . The time will pass anyway - Earl Nightingale
செயல்படுத்தக் காலங்கள் பிடிக்கும் என்பதற்காக எந்தக் கனவையும் கை விட்டு விடாதீர்கள் . காலம் எப்படியும் கை நழுவிச் சென்ற வண்ணமாகவே இருக்கும் .
8. Dream is not that you see in the sleep ; Dream is that doesn't allow you to sleep - Abdul Kalam
தூங்கும் போது காண்பதல்ல கனவு . உங்களைத் தூங்க விடாமல் செய்வதே கனவு .
9. I dream my painting and I paint my dream - Van Gogh
நான் எனது ஓவியம் குறித்துக் கனவு ஒன்றைக் காண்கிறேன் . பின்னர் அந்தக் கனவை ஓவியமாக்குகிறேன் .
10.Logic will get you from A to B . Imagination will take you everywhere - Einstein
தர்க்கம் உங்களை அ என்ற புள்ளியிலிருந்து ஆ என்ற புள்ளிக்கு மட்டும் இட்டுச் செல்லும் . கற்பனையாகிய படைப்பாற்றல் உங்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் .
Comments
Post a Comment