Posts

நஷ்டம் உவர்ப்பு சாய்வு

நஷ்டம் உவர்ப்பு சாய்வு Loss Aversion Bias 1000 ரூபாய் நஷ்டம் அடைவதும் 1000 ரூபாய் இலாபம் பெறுவதும் சமமல்ல . 1000 ரூபாய் நஷ்டம் அடையும் போது கிடைக்கப்பெறும் துக்கம் 1000 ரூபாய் இலாபம் பெறும் போது கிடைக்கப்பெறும் ஆனந்தத்தை விட  பன்மடங்கு பெரியதாகும் .  முதலீட்டில் இதனுடைய தாக்கம் என்னவென்று பார்க்கலாம் .  பங்குச்சந்தை முதலீடுகளின் ஆதாரமான குணம் என்னவென்றால் அது ஏறி இறங்கும் தன்மை படைத்தது . பங்குச்சந்தையின் இந்த ஏறி இறங்கும் தன்மையை , முக்கியமாக , இறங்கும் தன்மையைத் தாங்காமல் பங்குச்சந்தை முதலீடுகளை அறவே தவிர்த்து விடுவது நஷ்டம் தவிர்ப்புச் சாய்வு .  உங்கள் முதலீடுகள் உண்மையான வருமானம் என்று சொல்லப்படும் பணவீக்கத்தைக் கழித்த வருமானத்தை ஈட்ட வேண்டுமென்றால் பங்குச்சந்தை முதலீடுகள் தான் ஒரேயொரு சரியான வழி . மற்றபடி கடன் பத்திர முதலீடுகள் , தங்கம் மற்றும் நிலம் போன்றவை பணவீக்க இழப்புக் காப்பு (inflation hedge) என்ற அளவிலோ அல்லது பணவீக்கத்தைக் கொஞ்சம் விஞ்சும் அளவிலோ மட்டுமே வருமானத்தைக் கொடுக்கவல்லதாக இருக்கும் . நஷ்டம் தவிர்ப்பு சாய்வுக்கு ஆளானவர்கள் தப்பித்தவறி பங்கு முத...

ஒரு பங்குத்தொகுப்பிற்கு எத்தனை பங்குகள் தேவை ?

ஒரு பங்குத்தொகுப்பிற்கு எத்தனை பங்குகள் தேவை? அது உங்களின் பார்வையைப் பொறுத்தது. ஒருவர் தன் வாழ்நாளில் இருபது பங்குகளை மட்டுமே வாங்க வேண்டும் என்பதாக வாரன் பஃபெட் கூறியிருக்கிறார். Walter Schloss என்கிற அமெரிக்க நிதி மேலாளர் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான பங்குகளை வாங்கிப் பராமரித்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் நான் Walter Schloss பக்கம் தான். நீங்கள் மதிப்பு முதலீடாகப் பங்குகளை அடிப்படைப் பகுப்பாய்வு செய்து வாங்கி வந்தால் அத்தகைய பங்குகளைத் தினசரி கண்காணிக்க வேண்டிய தேவை எழாது. அதில் சில பங்குகள் 10 மடங்கு கூடலாம். மிகச் சில 20 மடங்கு...மிக மிகச் சில 50 மடங்கு...ஒன்றிரண்டு நிறுவனப் பங்குகள் 1000 மடங்கு ஏன் 10000 மடங்கு கூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எது 10 மடங்காளர் எது 10000 மடங்காளர் என்று நமக்குத் தெரியாது. உங்கள் பங்குச் சலிப்பானில் (Stock Screener) எத்தனை பங்குகள் தேறி வருகிறதோ அத்தனையையும் வாங்குங்கள். மிகவும் முக்கியமாக எவ்வளவு தான் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் Cox & Kings மாதிரியான களைகள் அவ்வப்போது முளைத்த வண்ணமாகவே இருக்கும். அவைகளை புத்திக் கொள்முதல் என்பதாகக் கொள்ள...

மூடுபனி முதலீடு

மூடுபனி முதலீடு மூடுபனியில் தன் அஸ்திவாரத்தைக் கட்டிய இந்திய நிறுவனம் ஒன்றைக் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம் .  கணினிகளின் ஆரம்ப காலம் அது . இப்போது மாதிரி உள்ளங்கையில் உலகமான திறன்பேசியை அது ஒத்திருக்கவில்லை . அப்போதைய கணினி , சின்ன அறை ஒன்றின் அளவில் இருந்தது . அதன் செயல்பாட்டு வேகமோ மிகவும் குறைவாக இருந்தது . கணினிக்கான செலவை விட வரி வகையறாக்களுக்கு ஆன செலவு அதிகம் . அந்நியச்செலாவணிக் கட்டுப்பாடுகள் தனி . டாலர்களில் பணம் கொடுத்துக் கணினிகளை வாங்குவது கொடுங்கனவாக இருந்தது . இவை போதாதென்று அரசாங்கத்தின் சிவப்பு நாடா கழுத்தை இறுக்குவதாக இருந்தது . Moore's law பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் . ஒவ்வொரு வருடமும் கணினியின் ஆதார சுருதியான சிலிக்கன் சில்லுகளின் ஆற்றல் இரட்டிப்பாகும் . அதன் விலை பாதியாகக் குறையும் . இந்த Moore's law அதன் வேலையை முழு வீச்சில் இன்னமும் தொடங்கியிருக்கவில்லை . இணையம் அப்போது ஆமை வேகத்தில் இயங்கியது .  இந்த சூழலில் நிறுவனம் , அமெரிக்காவில் ஆரம்பித்து உலகம் முழுவதும் தன் கிளைகளைத் திறந்தது . அயலாக்கம் என்று சொல்லப்படும் outsourcing ஐ அப்போதே செய்யத் ...

Jeff Bezos - மணி மொழிகள்

J eff Bezos - மணி மொழிகள் 1. Big things start small . பெரிய விஷயங்கள் சிறிதாகவே தொடங்கும் . 2. I know that if I failed I wouldn't regret that but I knew the one thing I might regret is not trying . நான் முயன்று தோல்வியுற்றால் அதற்காக நான் வருத்தம் கொள்ள மாட்டேன் . ஆனால் முயற்சி செய்யாமல் இருப்பதற்காகக் கண்டிப்பாக நான் வருத்தம் கொள்வேன் .  3. The stock is not the company and the company is not the stock . நிறுவனப்பங்கு நிறுவனம் அல்ல . நிறுவனம் நிறுவனப்பங்கு அல்ல . 4. I own 16 percent of Amazon . Amazon's worth roughly dollar one trillion . That means that over 20 years we have built dollar 840 billion of wealth for other people , and that's really what we have done from a financial point of view . Those kinds of things are much more meaningful to me , and it's an output measure . அமேசானின் 16 சதவீதப் பங்குகளை நான் வைத்திருக்கிறேன் . அமேசானின் சந்தை மதிப்பு சற்றேறக்குறைய ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் . இதன் பொருள் என்னவென்றால் கடந்த 20 ஆண்டுகளில் 840 பில்லியன் செல்வத்...

சந்தை உச்சத்தில் முதலீடு செய்வது எப்படி?

சந்தை உச்சத்தில் முதலீடு செய்வது எப்படி ? How to invest at all time high markets ? 85000 புள்ளிகள் என்பது சென்செக்ஸ் பயணத்தின் ஒரு மைல்கல் மட்டுமே . அது பயணத்தின் இலக்கு அல்ல .  சென்செக்ஸ் என்பது அதன் 30 நிறுவனங்களை மட்டுமே சார்ந்தது . நிஃப்டி என்பது அதன் 50 நிறுவனங்களைச் சார்ந்தது . சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டு நிறுவனங்கள் உயர் மதிப்பீட்டில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தாலும் இந்தக் குறியீட்டிற்கு அப்பால் எத்தனையோ நிறுவனப்பங்குகள் மதிப்பு முதலீடாக , குறை மதிப்பீட்டில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கலாம் . அந்த வகையில் காளைச் சந்தைக்குள் ஒரு கரடிச் சந்தையும்  இயங்கிக் கொண்டிருக்கிறது . மேலும் , தரமான நிறுவனங்கள் தற்காலிகமான பிரச்னைகளில் சிக்கித் தவிக்கையில் அவற்றைக் குறை மதிப்பில் வாங்குவதற்கான வாய்ப்பு எப்போதும் திறந்த நிலையில் உள்ளது . வாரன் பஃபெட் owner mentality என்று குறிப்பிடும் உடைமை மனப்பான்மை குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம் . இப்போது பங்குச்சந்தை அதன் உச்சபட்ச அளவுகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது . சென்செக்ஸ் குறியீட்டில் 13 சதம் இடம் பிடித்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவ...

பங்குச்சந்தை பதில்கள் - 12

பங்குச்சந்தை பதில்கள் - 12 கேள்வி : வாரன் பஃபெட்டின் முதலீட்டு வெற்றிக்கு அடிப்படையான காரணம் என்ன ? பதில் : 11 வயதில் ஆரம்பித்த அவரின் அறிவின் கூட்டுப்பெருக்கம் . கேள்வி : காப்பீடு , இல்லாத பணத்தை உருவாக்குகிறது தானே ? பதில் : ஆனால் அதனைப் பெற நாம் இல்லாது போக வேண்டுமே ! கேள்வி : எந்தப் பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் கோடிகளை அள்ள முடியும் ? பதில் : எந்தப் பரஸ்பர நிதியும் உங்களைக் கோடீஸ்வரர் ஆக்காது . நீங்கள் தான் உங்கள் உணர்வுகளை பரஸ்பரம் மேலாண்மை செய்து கோடிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் . கேள்வி : Short selling மூலமாகப் பணம் ஈட்டுவது தவறு தானே ?  பதில் : கெட்டதை சங்கு ஊதி அறிவிப்பது சரி தானே ? கேள்வி : பங்குச்சந்தையில் வெற்றி பெறுவதற்கான உத்தியை ஒரே வரியில் சொல்ல முடியுமா ? பதில் : காளைச்சந்தையில் கரடியாக இருங்கள் , கரடிச்சந்தையில் காளையாக இருங்கள் . கேள்வி : பங்குச்சந்தையில் விரைவாகப் பணம் ஈட்டுவதற்கான வழி என்ன ? பதில் : மெதுவாகச் செல்வது . கேள்வி : குறியீட்டு நிதிகளில் முதலீடு செய்வதை விட குறியீட்டுப் பங்குகளைத் தனிப்பட்ட முறையில் நாமே ஏன் வாங்கக்கூடாது ? பதில்...

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தை எவ்விதம் எதிர்கொள்வது ?

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தை எவ்விதம் எதிர் கொள்வது ? பங்குச்சந்தையில் , அதில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் ஏற்ற இறக்கங்களில் கவனம் கொள்ளாமல் இருப்பது இந்த ஏற்ற இறக்கங்களை வெற்றி கொள்வதற்கான உன்னதமான ஒரு வழிமுறையாகும் . நிறுவனப் பங்கு ஒன்றை உதாரணமாகக் கொண்டு இதனைப் புரிந்து கொள்ளலாம் . நான் 2008 ஆம் ஆண்டு 2100 ரூபாய்க்கு வாங்கிய ஐம்பது V Guard நிறுவனப்பங்குகளுக்கான பங்காதாயப் பட்டியல் ... ஆண்டு - பங்காதாயம் - பங்கு ஈட்டு விகிதம் Year - Dividend - Dividend Yield  2008 - Rs.125 - 5.95 % 2009 - Rs.125 - 5.95 % 2010 - Rs.150 - 7.14 % 2011 - Rs.175 - 8.33 % 2012 - Rs.175 - 8.33 % 2013 - Rs.175 - 8.33 % 2014 - Rs.225 - 10.71 % 2015 - Rs.225 - 10.71 % 2016 - Rs.350 - 16.66 % 2017 - Rs.350 - 16.66 % 2018 - Rs.490 - 23.33 % 2019 - Rs.560 - 26.66 % 2020 - Rs.630 - 30 % 2021 - Rs.840 - 40 % 2022 - Rs.910 - 43.33 % 2023 - Rs.910 - 43.33 % 2024 - Rs.980 - 46.66 % பங்காதாயம் ஒரே சீராக உயர்ந்து வரும் பாங்கைக் கவனியுங்கள் . நாளும் ஏறி இறங்கும் பங்கின் விலை வெறும் இரைச்சல் (noise) ஒரே சீராக உயர்ந்...