முடிவுறும் மற்றும் முடிவுறா ஆட்டங்கள்
முடிவுறும் மற்றும் முடிவுறா ஆட்டங்கள்
Finite and Infinite Games
1. There are atleast two kinds of games. One could be called finite, the other infinite. A finite game is played for the purpose of winning, an infinite game for the purpose of continuing the play.
இரண்டு விதமான ஆட்டங்கள் உள்ளன. ஒன்று முடிவுறும் ஆட்டம் என்று அழைக்கப்படும், மற்றொன்று முடிவுறா ஆட்டம். முடிவுறும் ஆட்டம், வெற்றியை இலக்காகக் கொண்டு ஆடப்படுவது, முடிவுறா ஆட்டம், ஆட்டத்தின் தொடர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளது.
2. The rules of a finite game may not change; the rules of an infinite game must change.
முடிவுறும் ஆட்டத்தின் சட்ட திட்டங்கள் மாறாதவை; முடிவுறா ஆட்டத்தின் சட்ட திட்டங்கள் மாற வேண்டியவை.
3. Finite players play within boundaries; infinite players play with boundaries.
முடிவுறு ஆட்டக்காரர்கள் எல்கைக்கு உட்பட்டு விளையாடுபவர்கள்; முடிவுறா ஆட்டக்காரர்கள் எல்கையைத் தாண்டி விளையாடுபவர்கள்.
4. Finite players are serious; infinite players are playful.
முடிவுறு ஆட்டக்காரர்கள் விளையாட்டில் தீவிரம் கொண்டு ஆடுபவர்கள்; முடிவுறா ஆட்டக்காரர்கள் விளையாட்டில் விருப்பம் கொண்டு ஆடுபவர்கள்.
5. Finite players win titles; infinite players have nothing but their names.
முடிவுறு ஆட்டக்காரர்கள் பட்டங்களை வெல்வார்கள்; முடிவுறா ஆட்டக்காரர்கள் பெயர் மூலமாகப் பெரும் பேறு பெறுவார்கள்.
6. When we lead with a finite mindset in an infinite game, it leads to all kinds of problems, the most common of which include the decline of trust, cooperation, and innovation.
ஒரு முடிவுறா ஆட்டத்தை முடிவுறு மனப்பான்மையுடன் ஆடும் போது அது பற்பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது, அவற்றில் மிகவும் பொதுவானது நம்பிக்கையின்மை, ஒத்துழைப்பின்மை மற்றும் புதுமையின்மை.
7. Finite players are theoretical; infinite players are dramatic.
முடிவுறு ஆட்டக்காரர்கள் கருத்தியலுக்கு உட்பட்டு ஆடுபவர்கள்; முடிவுறா ஆட்டக்காரர்கள் கட்டற்ற உற்சாகம் கொண்டு ஆடுபவர்கள்.
8. A finite player consumes time; an infinite player generates time.
முடிவுறு ஆட்டக்காரர்கள் நேரத்தை நுகர்கிறார்கள்; முடிவுறா ஆட்டக்காரர்கள் நேரத்தை உருவாக்குகிறார்கள்.
9. In finite game we think in days; in infinite game we think in decades.
முடிவுறு ஆட்டங்களில் நாம் நாட்களில் சிந்திக்கிறோம்; முடிவுறா ஆட்டங்களில் நாம் தசாப்தங்களில் சிந்திக்கிறோம்.
10. The finite player aims to win eternal life; the infinite player aims for eternal birth.
முடிவுறு ஆட்டக்காரர்கள் நித்திய ஜீவனை வெல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்; முடிவுறா ஆட்டக்காரர்கள் நித்திய பிறப்பை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
- Excerpts from the book Finite and Infinite Games by James Carse.
Comments
Post a Comment