கணிப்பு மொழிகள்

கணிப்பு மொழிகள் 

Forecasting Quotes


1. There are two classes of forecasters : Those who don't know - and those who don't know they don't know

- John Kenneth Galbraith


முன் கணிப்பாளர்கள் இரண்டு விதம் : முன் கணிக்கத் தெரியாதவர்கள் , தங்களுக்கு முன் கணிக்கத் தெரியாது என்று தெரியாதவர்கள் .


2. Wall Street indices predicted nine out of the last five recessions

- Paul Samuelson


பங்குச்சந்தை , கடைசி ஐந்து பொருளாதார மந்த நிலைகளை (recession) ஒன்பது முறை கணித்திருக்கிறது .


3. If you have to forecast , forecast often

- Edgar R Fiddler


முன் கணிப்பு செய்தே ஆகவேண்டும் என்றால் அடிக்கடி முன் கணியுங்கள் .


4. It is often said there are two types of forecasters ... Lucky or Wrong .


இரண்டு விதமான முன் கணிப்பாளர்கள் இருக்கிறார்கள் . ஒருவர் அதிர்ஷ்டக்காரர் . இன்னொருவர் தவறாகக் கணிப்பவர் .


5. Forecasting is the art of saying what will happen , and then explaining why it didn't (or) what won't happen and then explaining why it did happen .


முன் கணிப்பு என்பது நாளை என்ன நடக்கும் என்று கணிப்பது , அவ்வாறு நடக்கவில்லை என்றால் அதற்கான விளக்கம் ஒன்றை அளிப்பது (அல்லது) நாளை என்ன நடக்காது என்று கணிப்பது , தவறி நடந்து விட்டால் ஏன் நடந்தது என்பதற்கான விளக்கம் ஒன்றை அளிப்பது என்பதான ஒரு கலை .


6. An economist is an expert who will know tomorrow why the things he predicted yesterday didn't happen today

- Evan Esar


நேற்று கணித்தது இன்று ஏன் பலிக்கவில்லை என்று நாளை சொல்பவர் பொருளாதார நிபுணர் .


7. One of the primary purposes of stock market forecasters is to make fortune tellers look good - Warren Buffett


பங்குச்சந்தை கணிப்பாளர்கள் இருப்பதற்கான முக்கியமான காரணமாக நான் நினைப்பது ஜோசியர்கள் எவ்வளவோ மேல் என்று சொல்வதற்காக மட்டுமே .


8. I believe that economists put decimal points in their forecasts to show they have a sense of humour

- William Gilmore Simms


பொருளாதார வல்லுனர்கள் தங்கள் முன்கணிப்புகளில் தசம ஸ்தானத்தைச் சேர்ப்பது நகைச்சுவையின் பொருட்டாகவே என்று நான் நினைக்கிறேன் .


9. Prediction is very difficult , especially if it's about the future

- NILS BOHR


முன் கணிப்பு என்பது கடினமானது , அதிலும் எதிர்காலத்தைக் குறித்தானது என்பது இன்னும் கடினமானது .


10. The most reliable way to predict the future is to create it - Abraham Lincoln 


எதிர்காலத்தைக் கணிப்பதற்கான நம்பகமான வழி அதனை உருவாக்குவது தான் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14