Posts

உலகப் பணமொழிகள் - 2

உலகப் பண மொழிகள்- 2 1. நாட்பட்ட கடன் தீர்ந்து போன கடன். 2. ஒரு மேட்டை வெட்டினால் தான் ஒரு பள்ளம் நிரம்பும். 3. பெற்றோர் விட்டுச் செல்லும் செல்வத்தை விட ஒரு கலை மேலானது. 4. ஓடினால் மட்டும் போதாது, உரிய காலத்தில் புறப்படவும் வேண்டும். 5. கம்பளம் விற்றுக் கடனை அடைக்க வேண்டும் என்றால் கம்பளி ஆட்டை விற்கக்கூடாது. 6. துரதிர்ஷ்டத்தை விட நல்அதிர்ஷ்டத்தைத் தாங்கப் பெருங்குணங்கள் தேவை. 7. கடவுள் உனக்கு நிறைய ஆடுகளைக் கொடுப்பார். ஆனால், நீ தான் மந்தையைக் காத்துக் கொள்ள வேண்டும். 8. கடலில் ஒரு துளி விழுந்தாலும் அந்த அளவுக்குக் கடல் பெரிதாகும். 9. பெரும் செல்வம் சேர்க்க அதிகக் கஷ்டம் தேவையில்லை. முதலில் சிறிதளவு சேர்க்கவே சிரமப்பட வேண்டும். 10.  கரண்டியால் சேகரித்ததை மண்வெட்டியால் இறைக்காதீர்கள்.

பைசா நகரத்தின் சாயாத கோபுரம்

பைசா நகரத்தின் சாயாத கோபுரம் ஒரு பைசா 30 நாட்களுக்குத் தொடர்ந்து இரட்டிப்பானால் என்னவாகும்? 1 - 0.01 2 - 0.02 3 - 0.04 4 - 0.08 5 - 0.16 6 - 0.32 7 - 0.64 8 - 1.28 9 - 2.56 10 - 5.12 11  - 10.24 12 - 20.48 13 - 40.96 14 - 81.92 15 - 163.84 16 - 327.68 17 - 655.36 18 - 1310.72 19 - 2621.44 20 - 5242.88 21 - 10485.76 22 - 20971.52 23 - 41943.04 24 - 83386.08 25 - 167772.16 26 - 335544.32 27 - 671088.64 28 - 1342177.28 29 - 2684354.56 30 - 5368709.12 ஆயிரம் வார்த்தைகளால் தெரிவிக்க முடியாத செய்தியை ஒரு அட்டவணை தெரிவித்து விடுகிறது.  மேலே உள்ள அட்டவணையை எப்படிப் பார்த்தீர்கள்? ஒன்று இரண்டு என்று சற்று நிதானித்துப் பார்த்து விட்டு சட்டென்று முப்பதுக்கு வந்து விட்டீர்கள், இல்லையா? மறுபடி ஒருமுறை தொடக்கத்திலிருந்து பாருங்கள். தினசரி இரட்டிப்பாகும் ஒரு பைசா ஒற்றை இலக்கத்தைத் தாண்டவே பத்து நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இருபது நாட்களில் கூட ஆகப்பெரிய அளவுகளில் அது கூடவில்லை. கடைசி பத்து நாட்களில் அது கொஞ்சம் வேகமெடுக்கத் தொடங்குகிறது. அதுவும் கடைசி நாள் மட்டும் 2684354.56 என்ற அளவில் அதி ...

கூட்டு விளைவு

கூட்டு விளைவு The Compound Effect  1. The first rule of compound interest is to never interrupt it unnecessarily - Charlie Munger கூட்டு வட்டியின் முதல் விதி அதனைத் தேவையின்றி இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக்கூடாது என்பதாகும். 2. My life has been the product of compound interest - Buffett எனது வாழ்க்கை கூட்டு வட்டியால் ஆனது. 3. When it comes to compounding, percentage losses and gains are not equal . Avoid large losses - Frank Martin கூட்டுப்பெருக்கத்தில் ஒவ்வொரு சதவீத இலாபமும் நஷ்டமும் சமம் அல்ல. எனவே பெரும் நஷ்டத்தைத் தவிருங்கள். 4. Relatively small divergences in annual compounded returns over many years result in dramatic differences in terminal wealth - Nick Train கூட்டுப்பெருக்கத்தின் சிறிய மாறுபாடுகள் கூட  நாளடைவில் உங்கள் செல்வத்தின் இறுதி மதிப்பில் மாபெரும் மாற்றங்களை நிகழ்த்துவதாக இருக்கும். 5. The compound effect is the principle of reaping huge rewards from a series of small, smart choices - Darren Hardy கூட்டு விளைவு என்பது தொடர்ச்சியான சிறிய சிறந்த தேர்வுகளால் ஆகப்பெ...

பங்குச்சந்தை பதில்கள் - 15

பங்குச்சந்தை பதில்கள் - 15 கேள்வி: இந்தியப் பங்குச்சந்தை தனது அடுத்த உயர்வை எப்போது துவங்கும்? பதில்: யாமறியேன் பராபரமே! கேள்வி: ஏன் F & O வேண்டாம் என்கிறீர்கள்? பதில்: செல்வம் சேர்ப்பது முக்கியம். மனநிம்மதியுடன் செல்வம் சேர்ப்பது அதைவிட முக்கியம். கேள்வி: Gold மற்றும் Real estate முதலீடுகளில் பெரும்பாலோனோர் பெறும் ஆதாயத்தைப் பங்குச்சந்தையில் ஏன் பெறமுடிவதில்லை? பதில்: தங்கம் மற்றும் நிலத்தை இது எங்கள் பாட்டியின் நகை இது எங்கள் பாட்டனார் நிலம் என்று தலைமுறை தாண்டி வைத்திருக்கிறோம். பங்குகளை அப்படி வைத்திருக்கிறோமா? கேள்வி: சென்னை போன்ற நகரங்களில் இருந்த பங்குச்சந்தைகள் ஏன் மூடப்பட்டன? பதில்: நீர்மை நிறை உருவாக்கம் என்று சொல்லப்படும் liquidity இன்மையால். கேள்வி: பங்குச்சந்தையில் உங்கள் முதலீட்டுத் திட்டம் என்ன? பதில்: தரமான பங்குகளை இனங்கண்டு அவ்வப்போது காலப்பன்மயமாக்கம் என்ற முறையில் அவற்றை வாங்குவது ... கேள்வி: நீங்கள் காளையின் காதலரா அல்லது கரடியின் காதலரா? பதில்: பங்குகளை வாங்கும் போது நான் கரடியின் காதலன். அவற்றை விற்கும் போது காளையின் காதலன். கேள்வி: சந்தை நகைச்சுவை ஏத...

திறமை வளையம்

திறமை வளையம் Circle of Competence  ஒருவருக்கு நன்கு தெரிந்த, புரிந்த நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்வதான கருத்தாக்கம் முதலீட்டின் திறமை வளையம் (circle of competence) என்பதாக அழைக்கப்படுகிறது. திறமை வளையம் என்பதான இந்தக் கருத்தாக்கம் வாரன் பஃபெட் பரிந்துரைத்த முதலீட்டு உத்திகளில் முக்கியமான ஒன்றாகும்.  நீங்கள் ஒரு மருத்துவராக இருக்கும் பட்சத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் குறித்த உள்ளார்ந்த புரிதல் உங்களுக்கு இருக்கும். அத்தகைய நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்வது உங்களுக்கான ஒரு திறமை வளையமாக இருக்கும்.  முதலீட்டாளர்களுக்கு நிதி மற்றும் அது சார்ந்த துறைகளில் கூடுதல் புரிதல் இயற்கையாகவே இருக்கும். எனது பங்குத்தொகுப்பில் நிதி மற்றும் நிதி சார் துறைகள் 20 சதவீத இடத்தைப் பிடித்திருப்பது நான் திறமை வளையத்திற்குள்ளாக செயல்படுவதற்கான மறைமுகமான ஆதாரமாகும். அதற்காக மருத்துவர்கள் அவர்கள் துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றோ முதலீட்டாளர்கள் நிதி சார்ந்த துறைகளில் மட்டும் இயங்க ...

சந்தைத் திருத்தம் - கேள்வி பதில்

சந்தைத் திருத்தம் - கேள்வி பதில் Market Correction - Q & A கேள்வி: நாம் கரடிச்சந்தையில் தான் இருக்கிறோமா? பதில்: சந்தைக் குறியீடு 20 சதவீதம் அல்லது அதற்கும் மேலாகச் சரிந்தால் கரடிச்சந்தை தொடங்கி விட்டதாக அர்த்தம். சென்செக்ஸ் தற்போது அதன் உச்சபட்ச அளவான 85478 புள்ளியிலிருந்து கிட்டத்தட்ட 12 சதவீதம் சரிந்திருக்கிறது. எனவே இதனைக் கரடிச்சந்தை என்று கூறவியலாது. ஒரு திருத்தம் (correction) என்று கூறலாம். கேள்வி : சென்செக்ஸ் குறியீட்டின் இந்த 10000 புள்ளிகள் இழப்பை எப்படிப் பார்ப்பது? பதில்: சென்செக்ஸ் குறியீட்டின் இந்தத் திருத்தம் அதன் நீண்ட கால முன்னேற்றம் என்ற கணக்கில் மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.  கேள்வி: முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகள் சரிந்திருப்பது குறித்து? பதில்: முதலீட்டாளர்கள் பகுப்பாய்வை மேற்கொண்டு தரமான நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் இது ஒரு காகித இழப்பு (notional loss) மட்டுமே. அத்தகைய பங்குகள் மீண்டும் மதிப்பேற்றம் அடைந்து விடும். கேள்வி: என்ன தான் காகித இழப்பு என்று கூறிக்கொண்டாலும் dem...

பன்மடங்காளர்கள் - பத்து கட்டளைகள்

பன்மடங்காளர்கள் - பத்து கட்டளைகள் Multibaggers - Ten Commandments  1. You have to look for them பன்மடங்காளர்களைக் கைப்பற்ற நீங்கள் அவற்றை முதலில் மனக்கண்ணில் பார்க்க வேண்டும். அவற்றில் மனதைச் செலுத்த வேண்டும். பன்மடங்காளர் வேட்டை என்பது யானை வேட்டை மாதிரி. யானை வேட்டைக்குச் செல்லும் போது வழியில் தென்படும் குருவிகளைச் சுட்டுக் கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு தொடர்ந்து குருவிகளைச் சுட்டுக் கொண்டிருந்தால் குருவி வேட்டைக்கு நீங்கள் பழகி விடுவீர்கள். ஆயிரம் குருவிகள் கூட ஒரு யானைக்கு ஈடாகாது. மேலும் குருவி வேட்டையின் துப்பாக்கி சத்தத்தைக் கேட்டால் யானைகள் ஓடி ஒளிந்து கொள்ளும். பன்மடங்காளர் பங்குகள் உங்கள் கண்ணில் தென்படாது. Samvardhana Motherson International நிறுவனப்பங்கு ஒன்றின் விலை 125 ரூபாய். அதன் 52 வார உயர்ந்த பட்ச விலை 217 ரூபாய். அதன் 52 வார குறைந்த பட்ச விலை 107 ரூபாய். இது ஒரு பக்கம். ஆனால் Samvarthana Motherson International நிறுவனத்தின் பூர்வாசிரமப் பெயர் Motherson Sumi Systems. அது இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு Samvardhana Motherson International என்ற பெயரிலும், Mother...