Posts

சந்தை உச்சத்தில் முதலீடு செய்வது எப்படி?

சந்தை உச்சத்தில் முதலீடு செய்வது எப்படி ? How to invest at all time high markets ? 85000 புள்ளிகள் என்பது சென்செக்ஸ் பயணத்தின் ஒரு மைல்கல் மட்டுமே . அது பயணத்தின் இலக்கு அல்ல .  சென்செக்ஸ் என்பது அதன் 30 நிறுவனங்களை மட்டுமே சார்ந்தது . நிஃப்டி என்பது அதன் 50 நிறுவனங்களைச் சார்ந்தது . சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டு நிறுவனங்கள் உயர் மதிப்பீட்டில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தாலும் இந்தக் குறியீட்டிற்கு அப்பால் எத்தனையோ நிறுவனப்பங்குகள் மதிப்பு முதலீடாக , குறை மதிப்பீட்டில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கலாம் . அந்த வகையில் காளைச் சந்தைக்குள் ஒரு கரடிச் சந்தையும்  இயங்கிக் கொண்டிருக்கிறது . மேலும் , தரமான நிறுவனங்கள் தற்காலிகமான பிரச்னைகளில் சிக்கித் தவிக்கையில் அவற்றைக் குறை மதிப்பில் வாங்குவதற்கான வாய்ப்பு எப்போதும் திறந்த நிலையில் உள்ளது . வாரன் பஃபெட் owner mentality என்று குறிப்பிடும் உடைமை மனப்பான்மை குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம் . இப்போது பங்குச்சந்தை அதன் உச்சபட்ச அளவுகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது . சென்செக்ஸ் குறியீட்டில் 13 சதம் இடம் பிடித்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவ...

பங்குச்சந்தை பதில்கள் - 12

பங்குச்சந்தை பதில்கள் - 12 கேள்வி : வாரன் பஃபெட்டின் முதலீட்டு வெற்றிக்கு அடிப்படையான காரணம் என்ன ? பதில் : 11 வயதில் ஆரம்பித்த அவரின் அறிவின் கூட்டுப்பெருக்கம் . கேள்வி : காப்பீடு , இல்லாத பணத்தை உருவாக்குகிறது தானே ? பதில் : ஆனால் அதனைப் பெற நாம் இல்லாது போக வேண்டுமே ! கேள்வி : எந்தப் பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் கோடிகளை அள்ள முடியும் ? பதில் : எந்தப் பரஸ்பர நிதியும் உங்களைக் கோடீஸ்வரர் ஆக்காது . நீங்கள் தான் உங்கள் உணர்வுகளை பரஸ்பரம் மேலாண்மை செய்து கோடிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் . கேள்வி : Short selling மூலமாகப் பணம் ஈட்டுவது தவறு தானே ?  பதில் : கெட்டதை சங்கு ஊதி அறிவிப்பது சரி தானே ? கேள்வி : பங்குச்சந்தையில் வெற்றி பெறுவதற்கான உத்தியை ஒரே வரியில் சொல்ல முடியுமா ? பதில் : காளைச்சந்தையில் கரடியாக இருங்கள் , கரடிச்சந்தையில் காளையாக இருங்கள் . கேள்வி : பங்குச்சந்தையில் விரைவாகப் பணம் ஈட்டுவதற்கான வழி என்ன ? பதில் : மெதுவாகச் செல்வது . கேள்வி : குறியீட்டு நிதிகளில் முதலீடு செய்வதை விட குறியீட்டுப் பங்குகளைத் தனிப்பட்ட முறையில் நாமே ஏன் வாங்கக்கூடாது ? பதில்...

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தை எவ்விதம் எதிர்கொள்வது ?

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தை எவ்விதம் எதிர் கொள்வது ? பங்குச்சந்தையில் , அதில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் ஏற்ற இறக்கங்களில் கவனம் கொள்ளாமல் இருப்பது இந்த ஏற்ற இறக்கங்களை வெற்றி கொள்வதற்கான உன்னதமான ஒரு வழிமுறையாகும் . நிறுவனப் பங்கு ஒன்றை உதாரணமாகக் கொண்டு இதனைப் புரிந்து கொள்ளலாம் . நான் 2008 ஆம் ஆண்டு 2100 ரூபாய்க்கு வாங்கிய ஐம்பது V Guard நிறுவனப்பங்குகளுக்கான பங்காதாயப் பட்டியல் ... ஆண்டு - பங்காதாயம் - பங்கு ஈட்டு விகிதம் Year - Dividend - Dividend Yield  2008 - Rs.125 - 5.95 % 2009 - Rs.125 - 5.95 % 2010 - Rs.150 - 7.14 % 2011 - Rs.175 - 8.33 % 2012 - Rs.175 - 8.33 % 2013 - Rs.175 - 8.33 % 2014 - Rs.225 - 10.71 % 2015 - Rs.225 - 10.71 % 2016 - Rs.350 - 16.66 % 2017 - Rs.350 - 16.66 % 2018 - Rs.490 - 23.33 % 2019 - Rs.560 - 26.66 % 2020 - Rs.630 - 30 % 2021 - Rs.840 - 40 % 2022 - Rs.910 - 43.33 % 2023 - Rs.910 - 43.33 % 2024 - Rs.980 - 46.66 % பங்காதாயம் ஒரே சீராக உயர்ந்து வரும் பாங்கைக் கவனியுங்கள் . நாளும் ஏறி இறங்கும் பங்கின் விலை வெறும் இரைச்சல் (noise) ஒரே சீராக உயர்ந்...

அதிர்ஷ்டத்திற்குத் திட்டமிடுவது எப்படி ?

அதிர்ஷ்டத்திற்குத் திட்டமிடுவது எப்படி ? How to get lucky என்ற புத்தகத்தில் Max Gunther எடுத்துரைக்கும் ஒரு கருத்தாக்கம் : அதிர்ஷ்டம் வேறு , திட்டமிடல் வேறு . அதிர்ஷ்டத்தைத் திட்டமிடல் என்று கொள்வது ஆபத்தை விளைவிக்கும் . இந்தக் கருத்தைச் சிறிய ஒரு உண்மைக்கதையின் மூலம் அவர் விளக்குகிறார் . சூதாட்ட வட்டில் (Roulette wheel) பணம் கட்டி வெற்றி பெற பெண்மணி ஒருவர் ஒருங்கமைவு (system) ஒன்றைக் கண்டறிகிறார் . அது என்னவென்றால் , சூதாட்ட வட்டு குறிப்பிட்ட ஒரு எண்ணில் நிற்கும் என்பதாகப் பந்தயம் கட்டுகையில் பந்தயத்தில் தோற்றால் பந்தயப் பணத்தை இரட்டிப்பாக்கி அதே எண்ணில் மீண்டும் கட்டுவது . தோற்றால் மீண்டும் ... இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் இழந்த பணத்தை மட்டுமின்றி பெரும் பணத்தையும் ஒரு கட்டத்தில் சம்பாதித்து விடலாம் . இந்த ஒருங்கமைவைக் கொண்டு முதல் நாள் அந்தப் பெண்மணி சூதாட்டத்தில் வெற்றி பெறுகிறார் . மறுநாளும் வெற்றி . மூன்றாம் நாள் ஆகப்பெரிய அளவிலான பணத்தைப் பந்தயமாகக் கட்டி அதைத் தொடர்ந்து இரட்டிப்பாக்க முனைகையில் ஒருங்கமைவு வேலை செய்யவில்லை . என்னவாயிற்று ஒருங்கமைவுக்கு ?  சூதாட்ட...

Basant Maheswari - மணி மொழிகள்- 1

Basant Maheswari - மணி மொழிகள்-1 1. If a person had invested one rupee at the time Babur invaded India in the year 1526 A.D then on a nominal 3 percent rate of interest it would have grown to Rs.17.85 lakh ; at 4% to 19.73 Cr ; at 5% to Rs.2085 Cr and at 6% to Rs.210841 Cr in year 2015 . பாபர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்த 1526 ஆம் ஆண்டு ஒரு ரூபாயை 3 சதவீத கூட்டு வட்டியில் ஒருவர் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு 2015 ஆம் ஆண்டு 17.85 இலட்சம் ஆகியிருக்கும் . அதுவே 4 சதவீதம் என்றால் 19.73 கோடி ; 5 சதவீதம் என்றால் 2085 கோடி ; 6 சதவீதம் என்றால் 210841 கோடி . 2. Given an option between good results and a stock moving up , an investor should settle for the former - any day . ஒரு நிறுவனம் நன்கு வருமானம் ஈட்டுகிறது மற்றும் அதன் பங்கின் விலை கூடுகிறது என்ற இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் ஒரு முதலீட்டாளர் முதல் வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் - எப்போதும் . 3. Making income is different from creating wealth . The former has to be done repeatedly , while for the la...

வாழ்க்கை பதில்கள் - 1

வாழ்க்கை பதில்கள் - 1 கேள்வி : வேலை-வாழ்க்கை சமநிலையை எப்படி அடைவது? பதில் : நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதனைப் பிடித்துச் செய்தால் அல்லது பிடித்த வேலையைச் செய்தால் இந்த வேலை-வாழ்க்கை சமநிலை என்பதே உங்களுக்குத் தேவைப்படாது. வேலையே உங்கள் வாழ்க்கையாகி விடும். கேள்வி : எல்லாவற்றையும் பொருளாதாரக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டுமா? பதில் : அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு பொருளாதாரம் இருக்கிறது. இளமையில் கருகருவென்று அடர்த்தியாக இருக்கும் முடி வயதானதன் பின்னர் நரைத்தும் கொட்டியும் விடுகிறது. இது ஏனென்றால் இளமையாக இருக்கும் போது எதிர் பாலினத்தைக் கவரும் பொருட்டு இயற்கை தன் பொருள் ஆதாரத்தை இந்த மாதிரியான அழகுபடுத்தும் செயல்களில் செலவிடுகிறது. வயதானதும் இத்தகைய தேவைகள் குறைகின்றன. இதயம் போன்ற பிற முக்கியத் தேவைகளுக்கு இந்த ஆதாரம் செலவிடப்படுகிறது. எல்லாவற்றுக்கும் பொருளாதாரம் தான் ஆதாரம். அதனைப் பணத்தை மட்டும் கொண்டு பார்க்காமல், அதனினும் மேலான ஒரு பார்வையைக் கொண்டு நோக்க வேண்டும். கேள்வி : மற்றவர்களைப் பார்த்து ஏதோ ஒரு வகையில் பொறாமைப்படுகிறேன். இதிலிருந்து எப்...

தெரிந்த கருத்தாக்கம் தெரியாத விளக்கம்

தெரிந்த கருத்தாக்கம் தெரியாத விளக்கம் 1. Efficient Market Hypothesis (திறமையான சந்தை கருத்தாக்கம்) பங்குச்சந்தையில் நிறுவனப்பங்குகளின் விலைகள், எல்லா நேரமும், எல்லாத் தகவல்களையும் பிரதிபலிக்கும் வண்ணம் மட்டுமே வர்த்தகமாகும் என்ற கருத்தாக்கம் Efficient Market Hypothesis என்பதாக அழைக்கப்படுகிறது. சந்தை விலை தான் எப்போதும் முதலும் முடிவுமானது. வேறு மாதிரி சொல்வதானால் பங்கின் விலைகள் எப்போதும் அதன் உள்ளார்ந்த மதிப்பை ஒட்டியே வர்த்தகமாகும். பங்குச்சந்தை குறியீடுகளை வெற்றி கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. சரியா? தவறு! இந்தக் கருத்தாக்கம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மதிப்பு முதலீடு என்ற கருத்தாக்கத்திற்கே இடமில்லாமல் போகிறது. மதிப்பு முதலீடு தான் பங்குச்சந்தையின் முதலும் முடிவுமான முதலீட்டு உத்தியாகும். பங்குச்சந்தை மாயப் பித்துகளில் இந்த EMH தலையானதாகும். ஒரு மதிப்பு முதலீட்டாளர் EMH விற்பன்னர் ஒருவருடன் நடைப்பயிற்சி சென்று கொண்டிருக்கையில் கீழே 500 ரூபாய் நோட்டு ஒன்று தட்டுப்பட்டது. மதிப்பு முதலீட்டாளர் அதைக் குனிந்து எடுக்க முனைகையில் EMH விற்பன்னர் அவரைத் தடுத்தாட்கொண்டார். அது உண்மையா...