Posts

அதிர்ஷ்ட மொழிகள்

அதிர்ஷ்ட மொழிகள் Luck quotes 1. I am a great believer in luck and I find the harder I work , the more I have of it - Thomas Jefferson நான் அதிர்ஷ்டத்தை மிகவும் நம்புகிறேன். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உழைக்கிறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுகிறது. 2. The secret of a lucky life is making the most of a bad moment அதிர்ஷ்டமான வாழ்க்கையின் இரகசியம் , துரதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டத்தின் வேர்களை இனங்காண்பதில் உள்ளது. 3. No one is luckier than the person who believes in his luck - German proverb அதிர்ஷ்டத்தை நம்புகிறவரே மிகப்பெரிய  அதிர்ஷ்டக்காரர். 4. Better an ounce of luck than a pound of gold - Yiddish proverb கிலோ கணக்கில் தங்கம் கிடைக்கப்பெறுவதை விட கிராம் கணக்கில் அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுவது மேலானது. 5. Every wall is a door - Ralph Waldo Emerson ஒவ்வொரு சுவரும் ஒரு கதவு . 6. Luck sometimes visits a fool , but it never sits down with him - German proverb அதிர்ஷ்டம் சிலசமயம் முட்டாள் ஒருவனைச் சந்திக்கும். ஆனால் அவனுடன் கூடிக் குடும்பம் நடத்திக் கொண்டிராது. 7. Luck has ...

நீள் வட்ட சுற்றுச் சாலை

நீள் வட்ட சுற்றுச் சாலை Obliquity உங்கள் முன்னர் இரண்டு பாதைகள் இருக்கின்றன . ஒரு பாதை மேடு பள்ளங்கள் இன்றி சமதளமாக இருக்கிறது . வாகன நெரிசல் குறைவாகவும் ஒரே சீராகவும் இருக்கும் . அவவப்போது எவ்வளவு பாதையைக் கடந்திருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளக்கற்கள் ஆங்காங்கே பதிக்கப் பட்டிருக்கும் . உங்கள் இலக்கை அடைவதற்கான நேரடியான பாதை இது . இன்னொரு பாதை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது . வாகன நெரிசலும் அதிகம் . பெரும்பாலான சமயங்களில் வண்டி ஊர்ந்து மட்டுமே செல்ல முடியும் . அரிதான சந்தர்ப்பங்களில் தெருவே காலியாக வாகன நெரிசல் இன்றி இருக்கும் . அப்போது வண்டி பின்னால் செல்வது போன்ற ஓர் விசித்திரமான உணர்வு ஏற்படும் . ஆனால் வண்டி உண்மையில் முன்னேறித் தான் செல்கிறது . இவ்வாறு முன்னேறிச் செல்வதை அடுத்த நெரிசலின் போது தான் உங்களால் உணர முடியும் . இது மட்டுமல்ல , நீங்கள் உண்மையிலேயே இலக்கை நோக்கித் தான் பயணிக்கிறீர்களா என்பதை உங்களால் தீர்மானமாகச் சொல்ல இயலாது . அடையாளக் கற்கள் ஆங்காங்கே இருந்தாலும் அவை மாற்றி வைக்கப்பட்டிருப்பதான ஒரு தோற்றப் பிழை அவ்வப்போது ஏற்படும் . மேலும் உங்கள் இலக்கை அடைய இது ஒரு சுற்று...

வாசிப்பு - சுவாசிப்பு

வாசிப்பு - சுவாசிப்பு Reading Quotes 1. Books are the plane , and the train , and the road . They are the destination , and the journey . They are home . - Anna Quindlen  புத்தகங்களே நமது பயண வாகனம் மற்றும் பாதை . அவைகளே நாம் அடைய வேண்டிய இலக்குமாகும் . அவைகளே நம் பயணம் . நம் இல்லம் . 2. Reading makes immigrants of us all . It takes away from home , but more important , it finds home for us everywhere . வாசிப்பு நம்மை அந்நியர் ஆக்கும் . நம்மை நம் வீட்டை விட்டுக் கொண்டு செல்லும் . ஆனால் மிகவும் முக்கியமாக எல்லா இடங்களிலும் நமக்கு வீட்டை அமைத்துக் கொடுக்கும் .  3. Reading is discount ticket to everywhere - Mary Schmich  வாசிப்பு எல்லா இடங்களிலும் செல்லுபடியாகக்கூடிய தள்ளுபடிச் சீட்டு . 4. Reading is to the mind what exercise is to the body - Joseph Addison உடம்புக்கு உடற்பயிற்சி மாதிரி மனதிற்கு வாசிப்பு . 5. The unread story is not a story ; it is little black marks on wood pulp . The reader , reading it , makes it live ; a live thing , a story - Ursula K Le Guin படிக்காத க...

கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா ?

கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா ? பங்குச்சந்தை உட்பட எதனையும் முன்கணிக்க எனக்குத் தெரியாது . வாரன் பஃபெட் சொன்னது மாதிரி , முன் கணிப்புகள் , முன் கணிப்புகளை விட , முன் கணிப்பாளர்களையே அதிகம் கணிக்கின்றன . ஆனால் , எந்த ஆட்டத்திலும் , கிரிக்கெட் உட்பட , வெற்றி பெறுவதற்கான பொதுவான வழிமுறைகள் உள்ளன . அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம் . 1. களத்தில் நில்லுங்கள் . எந்த ஆட்டத்திலும் வெற்றி பெறுவதற்கான அடிப்படையான ஒரு குணம் இது . கிரிக்கெட்டில் சிறந்த மட்டையாளர்கள் முதன்முதலில் களம் இறங்குவர் . இவர்கள் நீண்ட நேரம் களத்தில் தாக்குப் பிடித்து நின்றால் அந்த அணியின் வெற்றி வாய்ப்பிற்கு அது ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் . கிரிக்கெட்டில் இது Partnership என்பதாக அழைக்கப்படும் . முதல் விக்கெட்டிற்கு 50 ஓட்டங்கள் , இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ஓட்டங்கள் ... என்று ஒரு அணியின் ஆட்டம் அமையுமானால் அதன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் . பங்குச்சந்தையிலும் களத்தில் நிற்றல் என்பது அதிமுக்கியமான ஒரு அடிப்படையாக அமைகிறது . நான் சந்தை சாதகமாக இருக்கும் போது (காளைச்சந்தை என்று படிக்கவும்) ஆடுவேன் ...

கதைக்குரு கதைகள் - 2

க தைக்குரு கதைகள் - 2 1. ஆட்டம் தெரிந்து ஆடு ஒரு சமயம் நிறுவனம் ஒன்று தனது பங்குதாரர்களுக்கு 8000 சதவீதம் பங்காதாயம் கொடுக்கப் போவதாக அறிவித்தது . அப்போது வங்கி நிரந்தர வைப்பு முதலீடுகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதம் மட்டுமே . நமது முதலீட்டாளருக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி . இருக்காதா பின்னே ? 6 சதவீதம் எங்கே ? 8000 சதவீதம் எங்கே ? நமது முதலீட்டாளர் உடனடியாக அந்த நிறுவனத்தின் பத்து பங்குகளை ஒரு பங்கு 4000 ரூபாய் என்ற விலையில் வாங்கினார் . சில நாட்கள் கழித்து வங்கிக் கணக்கை ஆன்லைனில் பார்த்த முதலீட்டாளருக்கு அதிர்ச்சியான அதிர்ச்சி . கணக்கில் 32 இலட்சத்திற்குப் பதிலாக வெறும் 1600 ரூபாய் மட்டுமே வரவாகியிருந்தது . உடனடியாக தனது சந்தைக்குருவைத் தேடி ஓடினார் . என் கணக்கில்  எங்கே தவறு ? குரு சொன்னது : வங்கி முதலீட்டு ஆட்ட விதிமுறைகள் வேறு . சந்தை முதலீட்டு ஆட்ட விதிமுறைகள் வேறு . வங்கியில் நீ முதலீடு செய்த பணம் முழுமைக்குமாக 6 சதவீத வட்டி வருவாய் கிடைக்கும் . சந்தையில் நீ முதலீடு செய்த நிறுவனத்தின் முக மதிப்பிற்குத் தான் இந்த 8000 சதவீத பங்காதாயம் . மேலும் உனக்குக் கிடைக்கப்பெறுவதைப் பங்காத...

ஜென் மொழிகள்

ஜென் மொழிகள் Zen Quotes  1. Pain is certain . Suffering is optional . வாதை நிச்சயமானது . வதைபடுவது விருப்பத்திற்கு உட்பட்டது . 2. Zen is to be present in the present . ஜென் என்பது நிகழ்காலத்தில் நிலை கொள்வது . 3. Obstacles don't block the path . They are the path . தடைகள் பாதையைத் தடுப்பதில்லை . தடைகளே பாதைகள் . 4. You only live once ... False . You live everyday . You only die once .  நீங்கள் ஒரேயொரு முறை மட்டுமே வாழ்கிறீர்கள் என்பது தவறு . நீங்கள் தினம் தினம் வாழ்கிறீர்கள் . ஒரேயொரு முறை மட்டுமே இறக்கிறீர்கள் . 5. It is better to travel well than to arrive . நன்றாகப் பயணிப்பது வந்தடைவதை விட முக்கியமானது . 6. Life is a balance of holding on and letting go . பிடித்தலுக்கும் விடுத்தலுக்கும் இடையிலான சமநிலையே வாழ்க்கை . 7. If you chase two rabbits you catch none . இரண்டு முயல்களைத் துரத்தினால் எதனையும் நீங்கள் பிடிக்க மாட்டீர்கள் . 8. The more you know , the less you need . நிறைய தெரிந்தவருக்குக் குறைவான தேவைகளே இருக்கும் . 9. Preoccupied with a single leaf you won't see the tre...

மரத்தில் மறைந்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை கேள்வி : நிறுவனம் ஒன்றின் பங்கு வெறும் 100 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது . அதனை மல்டிபேக்கர் என்று எவ்விதம் கூறுகிறார்கள் ? பதில் : Samvardhana Motherson International Ltd நிறுவனப் பங்கு 93 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது . நிறுவனம் 93 ரூபாய் என்ற விலையில் ஒரு மல்டிபேக்கர் . ஒரு நிறுவனப் பங்கு இரண்டு மடங்கு விலை கூடினாலே மல்டிபேக்கர் என்று அழைக்கப்படும் இந்தக் கால கட்டத்தில் Samvardhana Motherson International பங்கு பன்மடங்கு விலைப் பெருக்கத்தை அடைந்திருக்கிறது . பன்மடங்கு என்றால் எத்தனை மடங்கு ? வாருங்கள் பார்க்கலாம் . Samvardhana Motherson International  வாகன உதிரி பாகங்கள் (Auto ancillary) உற்பத்தி நிறுவனமாகும் . ஆரம்ப காலத்தில் அதன் பெயர் Motherson Sumi Systems என்பதாக இருந்தது . தொடக்கத்தில் அது rear view mirror மட்டும் தயாரிக்கும் நிறுவனமாக இருந்தது . இதற்காக நிறுவனத்தை நாடி வந்த வாடிக்கையாளர்கள் அதன் சேவையினால் கவரப்பட்டு மற்ற வாகன உதிரி பாகங்களையும் தயாரித்தால் என்ன என்பதாகக் கேட்டதும் பின்னர் அவர்களே இன்னின்ன சேவையில் இன்னின்ன நிறு...