வாழ்க்கை மொழிகள் - 6

வாழ்க்கை மொழிகள்- 6


1. Try to be a rainbow in someone else's cloud- Maya Angelou


அடுத்தவர்களின் வாழ்க்கை என்கிற மேகத்தில் ஒரு வானவில்லாக இருக்க முயற்சி செய்யுங்கள்.


2. When you look back on your life, it looks as though it were a plot but when you are into it, it's like a mess: just one surprise after another. Then later, you see it was perfect- Schopenhaner


உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழும் அது கூச்சலும் குழப்பமுமாகவே இருக்கும். பின்னர் அதனைத் திரும்பிப் பார்க்கையில் அது சீரான ஒன்றாக இருக்கும். அதன் அனைத்துப் புள்ளிகளும் ஒரு கோலமாக இணையும்.


3. Don’t ask, What do I want from life? Ask a different set of questions: What does life want from me? What are my circumstances calling me to do? - David Brooks


வாழ்க்கையிலிருந்து நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்ற கேள்வியைக் கேட்காதீர்கள். வாழ்க்கை என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்ற கேள்வியைக் கேளுங்கள். அதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அறைகூவல் என்ன என்று ஆராயுங்கள்.


4. Life does not ask what we want. It presents us with options- Thomas Sowell  


வாழ்க்கை, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்காது. சாத்தியங்களின் தொகுப்பையே அது வழங்கும்.


5. Sometimes you need to allow life to save you from getting what you want- Brandon Standon


சில சமயங்களில் நீங்கள் வேண்டி விரும்புவதைத் தடுத்து உங்களைக் காக்கும் வகையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் அவசியமான ஒன்றாகும்.


6. Life is a continual process of arrival into who we are- Maria Popova


வாழ்க்கை என்பது நாம் யாரென்று மீண்டும் மீண்டும் அடைவதான ஒரு வழிமுறையாகும்.


7. He who has a why to live, can bear almost any how- Friedrich Nietzsche 


எதற்காக வாழ்கிறோம் என்று தெரிந்தவர்களுக்கு எதனையும் தாங்கத் தெரியும்.


8. In three words l can sum up everything I've learned about life: It goes on- Robert Frost


வாழ்க்கை குறித்து நான் கற்றதை மூன்றே வார்த்தைகளில் தொகுத்துக் கூறுகிறேன்: அது கடந்து செல்லும்.


9. Make your life a story worth telling- Adam Barun


உங்கள் வாழ்க்கை என்ற கதையை மற்றவர்களுக்குச் சொல்லும் வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்.


10. The meaning of life is to find your gift; the purpose of life is to give it away.


வாழ்க்கையின் அர்த்தம் உங்களுக்கான பரிசைக் கண்டடைவது; வாழ்க்கையின் நோக்கம் அதனை மற்றவர்களுக்கு வழங்குவது.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14