கல்லிலே கலை வண்ணம் கண்டான் ...
கல்லிலே கலை வண்ணம் கண்டான் ...
(Michelangelo- மணி மொழிகள்)
1. It is well with me only I have a chicel in my hand.
கையில் உளி ஒன்று இருந்தால் அது மட்டும் எனக்குப் போதும்.
2. Every block of stone has a statue inside it and it is the task of the sculptor to discover it.
கல்லிலே கலை வண்ணம் காண்பதே சிற்பியின் வேலை.
3. The marble not yet carved can hold the form of every thought the greatest artist has.
செதுக்கப்படாத பளிங்குக்கல் கலைஞனின் ஒவ்வொரு எண்ணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
4. The more the marble wastes, the more the statue grows.
எவ்வளவுக்கு எவ்வளவு பளிங்கு கரைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சிலை வளர்கிறது.
5. I saw the angel in the marble and carved until I set her free.
பளிங்குக்கல்லில் அந்த தேவதை கட்டுண்டு கிடப்பதை நான் கண்டேன், பின்னர் அந்தக் கல்லைச் செதுக்கி அவளை விடுவித்தேன்.
6. A man paints with his brains and not with his hands.
ஒரு மனிதன் மூளையைக் கொண்டு வண்ணம் தீட்டுகிறான், கைகளைக் கொண்டு அல்ல.
7. It is necessary to keep one's compass in one's eyes and not in the hand, for the hands execute, but the eye judges.
உங்களுக்கான திசைகாட்டியைக் கையில் அல்ல, கண்களில் வைத்திருப்பது அவசியம், ஏனென்றால் கைகள் செயல்படுத்துகின்றன, ஆனால் கண்களே தீர்மானிக்கின்றன.
8. If people know how hard I worked to get my mastery, it wouldn't seem so wonderful at all.
நான் நிபுணத்துவத்தை அடைய எவ்வளவு கடினமாக உழைக்கிறேன் என்பதை மாந்தர் அறிந்தால் அது அவர்களுக்கு அவ்வளவு அற்புதமாகத் தோன்றாது.
9. The greater danger for most of us lies not in setting our aim too high and failing short but in setting our aim too low and achieving our mark.
நமது இலக்கை மிக அதிகமாக நிர்ணயித்து அதில் கொஞ்சம் குறைவாகச் சாதிப்பதில் ஆபத்து ஏதுமில்லை. மாறாக, நமது இலக்கை மிகக் குறைவாக நிர்ணயித்து, அதனை அடைவதில் தான் பேராபத்து உள்ளது.
10. The true work of art is but a shadow of the divine perfection.
உண்மையான கலைப்படைப்பு தெய்வீக நிறைவின் நிழல் மட்டுமே.
Comments
Post a Comment