Posts

ஜென் கதைகள் - 4

ஜென் கதைகள் - 4 1 . செய்முறை வர்த்தகம் . Algo trading என்பதான செய்முறை வர்த்தகம் குறித்து விளக்கமாகக் கூறுமாறு பங்குக் குருவிடம் சிஷ்யர்கள் கேட்டுக் கொண்டனர் . செய்முறை வர்த்தகம் என்பது கணிணி நிரல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வர்த்தக முறையாகும் . எந்த ஒரு வர்த்தக முறையும் மனித சிந்தனைக்கு மாற்றாக இருக்குமானால் அது அறவே ஒதுக்கப்பட வேண்டியதும் களையப்பட வேண்டியதுமாகும் . ஒரு முறை பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண்மணி ஒருவர் ஒரு கிலோ ரவை வாங்கினார் . அங்கிருந்த விற்பனையாளர் எலிப் பாஷாணம் ஒன்றை வாங்குமாறு வலியுறுத்தினார் . பிரச்னை , மேலாளர் வரை சென்றது . மேலாளர் , 100 கிலோ ரவை விற்றால் ஒரு எலிப் பாஷாணம் விற்கும் என்பது நிறுவன கணிணி நிரலின் கணக்கு . எங்கள் பதிவேட்டின் படி நீங்கள் வாங்கிய ஒரு கிலோவுடன் ரவை நூறு கிலோ என்ற கணக்கை எட்டி விட்டது . நீங்கள் எலிப் பாஷாணத்தை வாங்கியே தீர வேண்டும் என்று கூறினார் . மேலும் எங்கள் கணிணி நிரல் பொய் சொல்லாது என்றும் கூறிக் கொண்டார் . சிறு வயதில் நகர்ந்து செல்லும் மேகக் கூட்டங்களில் விதம் விதமான உருவங்களைப் பார்த்து விளையாடும் விளையாட்டை பெரியவர்கள் ஆன பின்ன...

தலைகீழ் விகிதங்கள் - 3

தலைகீழ் விகிதங்கள் - 3 (i) 140 < 10 (ii) 1 + 29 = 40 (iii) 2 - 1 = 2 (iv) 2 - 1 = 0 மேலே உள்ள சமன்பாடுகள் இடுகைப் பிழைகள் இல்லை . பங்குச்சந்தையில் தினசரி நாம் இத்தகைய கணக்குகளை எதிர் கொள்ளலாம் . ஒவ்வொரு கணக்கையும் உதாரணம் ஒன்றுடன் பார்க்கலாம் . (i) 140 < 10 Infosys பங்கு ஒன்றின் விலை 2008 ஆம் ஆண்டில் 140 ரூபாய் என்ற விலையில் (இலவசப்பங்கு மற்றும் பங்குப்பிரிப்பைக் கணக்கில் கொண்டது) வர்த்தகமானது . இதே 2008 ஆம் ஆண்டு Avon Corporation விரிவாக்கத்தின் பொருட்டு நிதி திரட்ட பங்குச்சந்தைக்கு வந்தது . முதல் பொது வெளியீட்டில் 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கு , முக மதிப்பு விலையிலேயே வெளியிடப்பட்டது . பத்து Infosys பங்குகளை வாங்குவதற்குப் பதிலாக Avon நிறுவனத்தின் 140 பங்குகளை வாங்கி விடலாம் . நிறுவனம் ஒரேயொரு ரூபாய் பங்காதாயம் வழங்கினால் 140 பங்குகளுக்கு 140 ரூபாய் கிடைக்கும் . பங்குகளை இவ்வாறு முக மதிப்பில் வாங்கினால் பங்காதாயமும் பங்கு ஈட்டு விகிதமும் சமம் . 2024 ஆம் ஆண்டுக்கு வாருங்கள் . Infosys பங்கு தற்போது 1420 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது . 2008 ஆம் ஆண்டு வாங்கிய 10 Infosys பங்குகள் ...

James Clear - மணி மொழிகள்

James Clear  - மணி மொழிகள் James Clear Quotes 1. Every action you take is a vote for the type of person you wish to become . நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நீங்கள் என்னவாக ஆகப் போகிறீர்கள் என்பதற்கு அளிக்கும் வாக்கு ஆகும் . 2. Success is the product of daily habits - not once in a lifetime transformations . வெற்றி என்பது தினசரி பழக்கங்களின் கூட்டு விளைவு மட்டுமே , மற்றபடி அது வாழ்வில் ஒருமுறை வருவதான மாற்றங்கள் அல்ல . 3. Habits are not a finish line to be crossed , they are a lifestyle to be lived . பழக்கவழக்கங்கள் கடக்க வேண்டிய எல்லைக்கோடு அல்ல , அவை வாழ வேண்டிய ஒரு வாழ்க்கை முறை . 4. You should be far more concerned with your current trajectory than with your current results .  உங்கள் தற்போதைய விளைபயன்களைக் காட்டிலும் உங்கள் தற்போதைய பாதையில் நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். 5. Environment is the invisible hand that shapes human behaviour . சுற்றுச்சூழல் என்பது மனித நடத்தையை வடிவமைக்கும் கண்ணுக்குத் தெரியாத கரம் . 6. When you fall in love with the process rather than th...

பங்கு கேள்வி பதில் - 6

பங்கு கேள்வி பதில் - 6 கேள்வி : சமீபத்தில் விற்ற பங்குகள் ? பதில் : Ador Fontech மற்றும் ICICI Securities . இரண்டு நிறுவனங்களும் தத்தமது தாய் நிறுவனங்களுடன் விரைவில் இணையவுள்ளன . தனிப்பட்ட முறையில் அவை செயல்படுவது என்பது வேறு . தாய் நிறுவனங்களுடன் இணைந்து அவை செயல்படுவது என்பது வேறு . நான் விற்கையில் Ador Fontech 3 மடங்காளர் . ICICI securities அரை மடங்காளர் . பங்காதாயப் பலன்கள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை . கேள்வி : Byju நிறுவன மதிப்பு , டாலர் 22 பில்லியனிலிருந்து டாலர் 200 மில்லியனுக்கு இறங்கியிருப்பது குறித்து ? பதில் : 22 பில்லியன் டாலர் என்பது 183422  கோடி ரூபாய் . 200 மில்லியன் டாலர் என்பது 1667 கோடி ரூபாய் . இந்த 99 சதவீத மதிப்பிழப்பு , நல்லவேளை , நிறுவனம் பங்குச்சந்தைக்கு வருவதற்கு முன்பே நிகழ்ந்து விட்டது . இல்லாவிட்டால் சிறு முதலீட்டாளர்கள் கையைச் சுட்டுக் கொண்டிருப்பார்கள் . Byju நிறுவனத்தில் முதலீடு செய்த பெரு முதலீட்டாளர்கள் ? அவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் . கேள்வி : Unique stocks ஏதேனும் சிலவற்றைப் பரிந்துரைக்க முடியுமா ? பதில் : Balkrishna Indu...

கரடிகள் பலவிதம்

கரடிகள் பலவிதம் கேள்வி : எந்தக் கரடிச்சந்தை உண்மையிலேயே மதிப்பு உருவாக்கத்திற்கான ஒரு சிறந்த களமாக இருந்தது ?  பதில் : இந்தியப் பங்குச்சந்தையில் கரடித் தாக்குதல் நடைபெற்ற ஆண்டுகளின் பட்டியல் : 1992 - ஹர்ஷத் மேதா ஊழல் 1998 - ஆசிய நிதி நெருக்கடி 2000 - தகவல் தொழில்நுட்பக் குமிழி வெடிப்பு 2008 - அமெரிக்க வீட்டுக்கடன் பிரச்னை 2011 - தீவிரவாதத் தாக்குதல் 2019 - கோவிட் 1992 ன் கரடிச்சந்தை , சட்ட திட்டங்களை முறையாக அமல்படுத்தாமை காரணமாக உருவானது . 1998 ல் ரஷ்யா அதன் நாணய மதிப்பைக் குறைத்ததால் ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்டது . 2000 ல் Y2K பிரச்னை எழுந்தது . அதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள மைய நிதி வங்கிகள் 1999 ல் வட்டி விகிதங்களைக் குறைத்து பணப்புழக்கத்தை அதிகரித்தன . 2000 ன் குமிழி வெடிப்புக்கு இது ஒரு மறைமுகமான காரணம் . அதன் நீட்சி தான் 2008 வீட்டுக்கடன் பிரச்னைக்கும் காரணமாக அமைந்தது . 2011 ன் கரடிச் சந்தைக்கு உலக வர்த்தக மையத்  தீவிரவாதத் தாக்குதல் காரணமாக அமைந்தது . 2019 ன் கரடித் தாக்குதல் காற்று வடிவில் வந்தது . அடுத்த தாக்குதல் எங்கிருந்து எழும் என்று யாராலும் கணிக்க முடியாது ....

வாழ்க்கை மொழிகள் - 5

வாழ்க்கை மொழிகள் - 5 1. கணவன் மனைவி சண்டை ஓர் இரவோடு சரி . 2. மனிதக் குஞ்சுகள் பறக்க நாளாகும் . 3. ஒரு தாய்க்கு தன் குழந்தை சொல்லாததும் புரியும் . 4. குழந்தையின் ஓட்டம் தாய் வரைக்கும் . 5. இதயம் எங்கு தங்கியுள்ளதோ அதுவே இல்லம் . 6. வீடு , தரையின் மேல் நிற்கவில்லை . ஓர் பெண்ணின் மேல் நிற்கிறது . 7. வாலிபம் பறந்து செல்கிறது . 8. வாழ்க்கையின் முதல் பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகிறது . இரண்டாம் பகுதி முதல் பகுதிக்காக வருந்துவதில் கழிகிறது . 9. பிடித்தலுக்கும் விடுத்தலுக்கும் இடையிலான சமநிலையே ஞானம் . 10. காலம் தான் தலைசிறந்த வைத்தியர் .

பரஸ்பர நிதி கேள்வி பதில்- 1

பரஸ்பர நிதி கேள்வி பதில்- 1 கேள்வி : பரஸ்பர நிதிகளிலும் பன்மடங்காளர்கள் உண்டா ? பதில் : Nippon India Growth Fund ன் NAV 3401 ரூபாய் . அதன் ஆரம்ப விலையான 10 ரூபாயைக் கொண்டு கணக்கிட்டால் அது 340 மடங்காளர் . இந்தப் பன்மடங்காளர்களைக் கைக்கொள்ள நீங்கள் இந்தப் பரஸ்பர நிதிகளின் வளர்ச்சித் தேர்வில் (Growth Option) பங்கேற்றிருக்க வேண்டும் . அதனினும் முக்கியமாக இந்த நிதிகளை விற்காமல் வைத்திருக்க வேண்டும் . கேள்வி : Front running ? பதில் : பரஸ்பர நிதி மேலாளர்கள் பகுப்பாய்வை மேற்கொண்டு நிறுவனப்பங்கு ஒன்றில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீட்டை மேற்கொள்ளவிருப்பதாகக் கொள்ளலாம் . இந்த முதலீடுகள் காரணமாக அதன் பங்கு விலைகள் கூடும் . இந்நிலையில் தனிப்பட்ட முறையில் அத்தகைய பங்குகளில் முன்னதாகவே முதலீட்டை மேற்கொண்டு அதன் மூலமாக இலாபமடைய முயல்வது front running என்று அழைக்கப்படுகிறது . பங்குகளை விற்கும் போதும் முன்னதாகவே அவற்றை விற்று வைப்பார்கள் .  கேள்வி : பரஸ்பர நிதி நிறுவனங்கள் எவ்விதம் வருமானம் ஈட்டுகின்றன ? பதில் : பரஸ்பர நிதி மேலாண்மைச் செலவுகள் மூலமாக ... பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கான அதிக பட்...