Posts

கரடிகள் பலவிதம்

கரடிகள் பலவிதம் கேள்வி : எந்தக் கரடிச்சந்தை உண்மையிலேயே மதிப்பு உருவாக்கத்திற்கான ஒரு சிறந்த களமாக இருந்தது ?  பதில் : இந்தியப் பங்குச்சந்தையில் கரடித் தாக்குதல் நடைபெற்ற ஆண்டுகளின் பட்டியல் : 1992 - ஹர்ஷத் மேதா ஊழல் 1998 - ஆசிய நிதி நெருக்கடி 2000 - தகவல் தொழில்நுட்பக் குமிழி வெடிப்பு 2008 - அமெரிக்க வீட்டுக்கடன் பிரச்னை 2011 - தீவிரவாதத் தாக்குதல் 2019 - கோவிட் 1992 ன் கரடிச்சந்தை , சட்ட திட்டங்களை முறையாக அமல்படுத்தாமை காரணமாக உருவானது . 1998 ல் ரஷ்யா அதன் நாணய மதிப்பைக் குறைத்ததால் ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்டது . 2000 ல் Y2K பிரச்னை எழுந்தது . அதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள மைய நிதி வங்கிகள் 1999 ல் வட்டி விகிதங்களைக் குறைத்து பணப்புழக்கத்தை அதிகரித்தன . 2000 ன் குமிழி வெடிப்புக்கு இது ஒரு மறைமுகமான காரணம் . அதன் நீட்சி தான் 2008 வீட்டுக்கடன் பிரச்னைக்கும் காரணமாக அமைந்தது . 2011 ன் கரடிச் சந்தைக்கு உலக வர்த்தக மையத்  தீவிரவாதத் தாக்குதல் காரணமாக அமைந்தது . 2019 ன் கரடித் தாக்குதல் காற்று வடிவில் வந்தது . அடுத்த தாக்குதல் எங்கிருந்து எழும் என்று யாராலும் கணிக்க முடியாது ....

வாழ்க்கை மொழிகள் - 5

வாழ்க்கை மொழிகள் - 5 1. கணவன் மனைவி சண்டை ஓர் இரவோடு சரி . 2. மனிதக் குஞ்சுகள் பறக்க நாளாகும் . 3. ஒரு தாய்க்கு தன் குழந்தை சொல்லாததும் புரியும் . 4. குழந்தையின் ஓட்டம் தாய் வரைக்கும் . 5. இதயம் எங்கு தங்கியுள்ளதோ அதுவே இல்லம் . 6. வீடு , தரையின் மேல் நிற்கவில்லை . ஓர் பெண்ணின் மேல் நிற்கிறது . 7. வாலிபம் பறந்து செல்கிறது . 8. வாழ்க்கையின் முதல் பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகிறது . இரண்டாம் பகுதி முதல் பகுதிக்காக வருந்துவதில் கழிகிறது . 9. பிடித்தலுக்கும் விடுத்தலுக்கும் இடையிலான சமநிலையே ஞானம் . 10. காலம் தான் தலைசிறந்த வைத்தியர் .

பரஸ்பர நிதி கேள்வி பதில்- 1

பரஸ்பர நிதி கேள்வி பதில்- 1 கேள்வி : பரஸ்பர நிதிகளிலும் பன்மடங்காளர்கள் உண்டா ? பதில் : Nippon India Growth Fund ன் NAV 3401 ரூபாய் . அதன் ஆரம்ப விலையான 10 ரூபாயைக் கொண்டு கணக்கிட்டால் அது 340 மடங்காளர் . இந்தப் பன்மடங்காளர்களைக் கைக்கொள்ள நீங்கள் இந்தப் பரஸ்பர நிதிகளின் வளர்ச்சித் தேர்வில் (Growth Option) பங்கேற்றிருக்க வேண்டும் . அதனினும் முக்கியமாக இந்த நிதிகளை விற்காமல் வைத்திருக்க வேண்டும் . கேள்வி : Front running ? பதில் : பரஸ்பர நிதி மேலாளர்கள் பகுப்பாய்வை மேற்கொண்டு நிறுவனப்பங்கு ஒன்றில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீட்டை மேற்கொள்ளவிருப்பதாகக் கொள்ளலாம் . இந்த முதலீடுகள் காரணமாக அதன் பங்கு விலைகள் கூடும் . இந்நிலையில் தனிப்பட்ட முறையில் அத்தகைய பங்குகளில் முன்னதாகவே முதலீட்டை மேற்கொண்டு அதன் மூலமாக இலாபமடைய முயல்வது front running என்று அழைக்கப்படுகிறது . பங்குகளை விற்கும் போதும் முன்னதாகவே அவற்றை விற்று வைப்பார்கள் .  கேள்வி : பரஸ்பர நிதி நிறுவனங்கள் எவ்விதம் வருமானம் ஈட்டுகின்றன ? பதில் : பரஸ்பர நிதி மேலாண்மைச் செலவுகள் மூலமாக ... பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கான அதிக பட்...

விடுபடு திசைவேகம்

விடுபடு திசைவேகம் Escape Velocity  விடுபடு திசைவேகம் எனப்படுவது ஒரு பொருளானது கோளின் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டுச் செல்வதற்குக் கோளின் பரப்பில் அப்பொருளுக்கு அளிக்கப்படவேண்டிய மேல் நோக்கிய சிறும திசைவேகம் ஆகும் - விக்கிப்பீடியா                •                    *                    *  பன்மடங்காளர் பங்குகளை ஏன் விற்கக்கூடாது என்பதை ITC பங்கை உதாரணமாகக் கொண்டு பார்க்கலாம் . ITC நிறுவன முதல் பொது வெளியீடு 1976 ஆம் ஆண்டு முக மதிப்பு (Face Value) ரூபாய் 10 மற்றும் உயர் மதிப்பு (Premium) ரூபாய் 5 என்ற விலையில் வெளியிடப்பட்டது . நீண்ட கால முதலீட்டாளர் ஒருவர் அதன் 100 பங்குகளை 1500 ரூபாய்க்கு வாங்கி நாளது தேதி வரை வைத்திருப்பதாகக் கொண்டு கணக்கைத் தொடங்கலாம் . 1976 - IPO - 100 பங்குகள் 1978 - 1:5 இலவசப்பங்கு - 120 1980 - 1:5 இலவசப்பங்கு - 144 1989 - 1:1 இலவசப்பங்கு - 288 1991 - 3:5 இலவசப்பங்கு - 459 1994 - ...

பொறுமை மொழிகள் - 2

பொறுமை மொழிகள் Patience Quotes  1. Adapt the pace of nature . Her secret is patience - Ralph Waldo Emerson இயற்கையின் போக்கைக் கைக்கொள்ளுங்கள் . அதன் இரகசியம் பொறுமை . 2. Everybody wants to be somebody ; nobody wants to grow - Goethe எல்லோரும் யாராவது மாதிரி ஆகவேண்டும் என்று விரும்புகிறார்கள் . யாரும் தன்னளவில் தனித்துவமாக வளர வேண்டும் என்று விரும்புவதில்லை .  3. Never mistake motion for action - Ernest Hemingway அசைவை இயக்கம் என்பதாகத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் . 4. Real action is in silent moments - Ralph Waldo Emerson உண்மையான இயக்கம் அமைதியான தருணங்களில் இருக்கிறது . 5. The two most powerful warriors are patience and time - Leo Tolstoy வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி கொள்ள பொறுமை மற்றும் நேரம் என்ற வீராதி வீரர்களை உங்கள் பக்கம் கொள்ளுங்கள் . 6. One-half of troubles of this life can be traced to saying YES too quickly and not saying NO soon enough . வாழ்க்கையின் ஒரு பாதி பிரச்னைகளுக்கான காரணம் வேண்டும் என்பதை விரைவில் சொல்லி விடுவதும் வேண்டாம் என்பதைத் தாமதமாகச் சொல்வத...

பங்கு கேள்வி பதில் - 5

பங்கு கேள்வி பதில் -5 கேள்வி : டாடா சன்ஸ் IPO வருமா ? பதில் : வரும்ம்ம் ... ஆனா வராது ! நகைச்சுவை ஒரு பக்கம் இருக்கட்டும் . டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீதம் பங்குகள் டாடா அறக்கட்டளைகள் வசம் உள்ளன . 18.4 சதவீதம் Pallonji Mistry குழுமம் வசம் உள்ளது . மீதி 15.6 சதவீதப் பங்குகள் டாடா கெமிக்கல்ஸ் , டாடா மோட்டார்ஸ் , டாடா பவர் , இந்தியன் ஹோட்டல்ஸ் , டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் போன்ற பட்டியலிடப்பட்ட டாடா நிறுவனங்களிடமும் மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்ட சில தனி நபர்களிடமும் உள்ளன . டாடா சன்ஸ் நிறுவன வருமானம் பட்டியலிடப்பட்ட டாடா நிறுவனங்கள் வழங்கும் பங்காதாயம் மூலமாகக் கிடைக்கப் பெறுகிறது . பங்காதாயம் என்றால் அதனைச் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள் . சென்ற நிதியாண்டில் இது 33250 கோடி ரூபாய் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள் . டாடா சன்ஸ் நிறுவனத்தைச் சந்தையில் பட்டியலிட்டால் இலட்சம் கோடிகளின் கணக்கில் மதிப்பு விடுவிப்பு (value unlocking) எட்டப்படும் என்பது உண்மை தான் . ஆனால் அதனை விட நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படுவதை டாடா சன்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது . நிறுவனத்தைப் பட்டியலிட்...

Earnest Hemingway - எழுதுவது குறித்த எண்ணங்கள்

Earnest Hemingway - எழுதுவது குறித்த எண்ணங்கள் Earnest Hemingway Quotes on Writing 1. There is no friend as loyal as a book . புத்தகங்களைப் போன்ற நம்பிக்கையான நண்பர்கள் எவருமிலர் . 2. There is nothing to writing. All you do is sit down at a typewriter cut your vein and bleed . எழுதுவது என்பது ஒன்றும் கடினமான ஒரு காரியமில்லை . தட்டச்சுப் பொறியின் முன் அமருங்கள் . நரம்பை அறுத்துக் கொண்டு குருதியைக் கொட்டுங்கள் .  3. The first draft of anything is shit . எதன் முதல் வரைவும் வெறும் குப்பை மட்டுமே .  4. In order to write about life first you must live it .  வாழ்க்கை குறித்து எழுதுவதற்கு முன்னர் வாழ்ந்து பார்க்க வேண்டும் . 5. I like to listen. I have learned a great deal from listening carefully . Most people never listen .  நான் கவனிப்பதை விரும்புகிறேன் . கவனிப்பதனால் நான் பெரும்பலன்களை அடைந்திருக்கிறேன் . பெரும்பாலோனோர் கவனிப்பதில்லை .  6. There is no rule on how to write .  Sometimes it comes easily and perfectly; sometimes it's like drilling rock and...