Posts

பணத்தோட்டம்

பணத்தோட்டம் பங்குச்சந்தை முதலீடுகளை ஒரு தோட்டமாகக் கற்பனை செய்து பார்க்கலாம் .  முதன்முதலாக ஒரு கன்றை (நிறுவனப் பங்கை)  ஊன்றி வைக்கிறீர்கள் . அது தான் வரும் வசந்த காலங்களில் பூத்துக் குலுங்கப் போகும் உங்கள் முதலீட்டுத் தோட்டத்திற்கான ஆணி வேராகும் . மா , பலா , கொய்யா போன்றவற்றை மட்டுமின்றி நீண்ட கால அளவில் பலன்களைத் தரும் தேக்கு (Asian Paints, HDFC , L & T ) முதலான மரங்களையும் வளர்த்து வருகிறீர்கள் .  ரப்பர் மரம் (Balkrishna Industries) காபி (CCL Products) பருத்தி (Ambika Cotton Mill) மசகு எண்ணெய் (Castrol) நெற்பயிர் (Chamanlal Setia Exports)  புகையிலைச் செடிகள் (ITC) திராட்சைக் கொடிகள் (GM Breweries) மட்டுமின்றி வித்தியாசமான சில விதை வகைகளையும் தூவி வைக்கிறீர்கள் (Nesco , Tata Elxsi)  சமவெளியில் மலரவே மலராது என்று சொல்லப்படும் மலர் வகைகள் கூட உங்கள் தோட்டத்தில் மலர்கின்றன .  தோட்டத்திற்குள் ஒரு தோட்டமாக Bajaj Holdings , Tata Investment Corporation முதலிய பங்குகளையும் மற்றும் பரஸ்பர நிதிகளையும் வைத்துப் பராமரிக்கலாம் .  30 வகையான மரங்களைக் கொண்ட தோ...

நிழற்சண்டை

நிழற்சண்டை பெறுதிகளுக்கு (Derivatives) விளக்கம் தேவை என்பதாக நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார் . பெறுதிகளை விரிவாக விளக்கத் தொடங்கினால் அந்த விளக்கத்திற்குள் நாமே காணாமல் போய் விடுவோம் . எனவே அவைகளைக் குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம் . தெரியாத ஒன்றைத் தெரிந்த ஒன்றைக் கொண்டு புரிந்து கொண்டால் சுலபமாக இருக்கும் . அந்த அடிப்படையில் தெரியாத பெறுதிகளைத் தெரிந்த பங்குகளைக் கொண்டு புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் . பெறுதிகளின்  முக்கியமான இரண்டு வகைகளான Futures மற்றும் Options குறித்துக் கொஞ்சம் நெருங்கிச் சென்று ஆராயலாம் . பங்குகளுக்குத் தன்னளவில் மதிப்பு உண்டு . அவை பங்காதாயங்களை வழங்கும் . முதலீட்டுப் பெருக்கம் அடையும் . சந்தை விலையை விடக் குறைவான விலையில் அவை உரிமைப் பங்குகளை வழங்கும் . இலவசப் பங்குகளை அளிக்கும் . பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பு என்று பணப்பலன்கள் பலவற்றையும் அளிக்கும் .  பெறுதிகளுக்குத் தன்னளவில் மதிப்பு கிடையாது . பெறுதிகளுக்கு ஏன் பெறுதிகள் என்ற பெயர் என்றால் பெறுதிகள் தங்களது மதிப்பை மற்றவைகளிலிருந்து பெறுவதால் அவை பெறுதிகள் என்று அழைக்கப்படுகின்றன . ...

வரலாற்று மொழிகள்

வரலாற்று மொழிகள் History Quotes 1. People without the knowledge of their past history , origin and culture is like a tree without roots - Marcus Garvey வரலாறு , மூலாதாரம் மற்றும் கலாச்சாரம் குறித்த புரிதல் இல்லாதவர்கள் வேரில்லாத மரத்திற்கு ஒப்பானவர்கள் . 2. Study the past if you would define the future - Confucius எதிர்காலத்தை வரையறுக்க வேண்டுமென்றால் கடந்த காலத்தைக் கண்டுணருங்கள் .  3. History is not burden on the memory but an illumination of the soul - Lord Acton வரலாறு என்பது ஞாபகங்களின் சுமையல்ல , அது ஆத்மாவின் ஒளிர்வு .  4. We are not makers of history . We are made by history - Martin Luther king Jr நாம் வரலாற்றை ஆக்கவில்லை . நாம் வரலாற்றினால்  ஆக்கப்பட்டிருக்கிறோம் . 5. If history were taught in the form of stories , it would never be forgotten - Rudyard Kipling வரலாறு கதை மாதிரி கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால் அது என்றென்றைக்கும் மறக்கப்பட்டிராது .  6. Those who cannot learn from history are condemned to repeat it - George Santayana வரலாற்றின் மூலமாகக் கற்றுக...

மெய்நிகர் பணம் - 2

மெய்நிகர் பணம் - 2 Virtual Money - 2 உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இவ்வளவு கூடியிருக்கிறது . அதே சமயம் ஏழைகள் மிகவும் ஏழைகளாகி விட்டார்கள் . இந்தப் பணக்காரர்களின் சொத்தை வைத்து இந்தியாவின் வெளி நாட்டுக் கடனை அடைத்து விடலாம் , இவர்களது சொத்தைப் பிரித்து ஏழைகளுக்குத் தலா இவ்வளவு கொடுக்கலாம் என்று தினசரிகளில் அவ்வப்போது செய்திகள் வெளியாவதை நீங்கள் படித்திருக்கலாம் . இது எவ்வளவு தூரம் சாத்தியம் ? வாருங்கள் , பார்க்கலாம் . முதலாவதும் முக்கியமானதுமான ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இது ரொக்கப் பணம் (Hard money) அல்ல , மாயப் பணம் (Virtual money) அம்பானியின் சொத்து மதிப்பு ஏழு இலட்சம் கோடி என்றால் அத்தனை பணத்தையும் அவர் தன் வீட்டு அலமாரியில் வைத்துப் பூட்டியிருக்கவில்லை . அம்பானியின் சொத்து மதிப்பு ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் விலையுடன் கட்டப்பட்டுள்ளது . ரிலையன்ஸ் பங்குகளின் விலை நிறுவனத்தின் இலாப நஷ்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது . குறுகிய கால அளவில் இந்தத் தொடர்பு அவ்வளவு துலாம்பரமாகத் தெரியாவிட்டாலும் நீண்ட கால அளவில் இந்த அடித்தொடர்தல் மிகவும் அடிப்படையான ஒன்றாகும் . ந...

வாழ்க்கை மொழிகள் - 3

வாழ்க்கை மொழிகள் - 3 1. ஒருவன் பிறருக்குக் கொடுப்பதெல்லாம் தனக்குத் தானே கொடுத்துக் கொள்கிறான்  - ரமணர் 2. இருள் என்பது மிகக்குறைந்த ஒளி  - பாரதியார் 3. தவறு செய்யாதவன் எதுவும் செய்யாதவன்  - மாகீ 4. தனக்குத் தெரிந்தவற்றை மட்டும் மனிதன் பேசுவானாகில் உலகில் முழு அமைதி நிலவும்  - பெர்னார்ட் ஷா 5. நம்மை நோக்கிப் பாய்ந்து வரும் அம்பை நாம் கவனித்து விட்டால் அது குறைந்த வேகத்துடன் தான் நெருங்கும்  - டான்டி 6. தன்னைக் காயப்படுத்திக் கொள்ளாமல் எந்த மனிதனும் முன்னேற முடியாது . ஏனெனில் கல்லும் அவனே, சிற்பியும் அவனே  - அலெக்ஸி கேரல் 7. வண்ணத்துப்பூச்சிகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒன்றிரண்டு கம்பளிப்புழுக்களை சகித்துக் கொள்ளத் தான் வேண்டும் - Antoine de exupery 8. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் , உலகில் மிகுந்த அழகுடைய பொருள்கள் எல்லாம் சிறிதும் பயனற்றவையே - ரஸ்கின் 9. அவைகள் குருடாக இருக்கவேண்டும் என்று மனது நினைத்து விட்டால் கண்கள் பார்ப்பதில்லை . பூமியை இருள் மறைப்பது போல ஆசை உண்மைகளை மறைத்து விடுகிறது - செனக்கா 10.நமது அறிவு பெருகப் பெருக நமது அறியாமை வெளியாகிறது...

கதைக்குரு கதைகள் - 1

கதைக்குரு கதைகள் - 1 ஒரு ஊரில் ஜென் குரு ஒருவர் இருந்தார் . அவர் தன் சிஷ்யர்களுக்குக் கதை வடிவில் (முதலீட்டுப்) பாடங்களை நடத்துவது வழக்கம் . ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு விஷயத்தை சிறிய கதை ஒன்று எளிதில் விளக்கி விடும் . சிஷ்யர்கள் அவரை கதைக்குரு என்று அன்போடு அழைத்து மகிழ்வது வழக்கம் . அவரின் கதைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நானும் அக மகிழ்கிறேன் . 1. விருப்ப மரம்  ஒரு ஊரில் முதலீட்டாளர் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் ஒருவர் இருந்தார் . அவர் பங்குச்சந்தையில் முதலீடு என்ற பெயரில் ஊக வணிகங்கள் பலவற்றைச் செய்து வந்தார் . முதல் பொது வெளியீட்டில் (IPO) பங்கு பெற்று பின்னர் அந்தப் பங்குகளை பட்டியல் இலாபத்திற்குக் கைமாற்றி விடுவார் . பெரும்பாலான சமயங்களில் நஷ்டத்திற்கு மட்டுமே விற்பார் . ஆனால் நஷ்டத்தை உடனடியாக மறந்து விடுவார் . தப்பித்தவறி அடைந்த இலாபங்களை மட்டும் மறக்காமல் அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருப்பார் . விளிம்பு நிலை வர்த்தகம் (margin trading) இல்லாத பங்குகளை விற்பது (Short selling) பெறுதிகள் (derivatives) தினசரி வணிகம் (day trading) மற்றும் ரூபாய்...

தலைகீழ் விகிதங்கள் - 2

தலைகீழ் விகிதங்கள் - 2 Investing for the long run works only as long as people don't believe it  - Peter Bernstein நீண்ட காலத்திற்கான முதலீடுகள் , அதில் மக்கள் நம்பிக்கை கொள்ளாத வரை மட்டுமே செயல்படுவதாக இருக்கும் . Peter Bernstein ன் இந்தப் பங்குமொழி மூலமாக என்ன சொல்ல வருகிறார் என்று கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம் . ஒரு பேச்சுக்கு எல்லா முதலீட்டாளர்களும் நீண்ட கால நோக்கைக் கைக்கொள்வதாகக் கற்பிதம் செய்து கொள்ளலாம் . இது ஒருபோதும் சாத்தியமில்லை என்றாலும் கற்பனைக்குதிரையை அவிழ்த்து விடுவோம் . நிறுவன முதலீட்டாளர்கள் உட்பட எல்லோரும் நிறுவனப் பங்குகளை அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீடாக வாங்கி பங்காதாயம் மூலமாக மட்டும் பலன் பெறுவதாக ஒரு சந்தை இயங்குகிறது . முதலில் அடி வாங்குவது நீர்மை நிறைத்தன்மை (Liquidity) முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதும் விற்பதுவுமாக இருந்தால் மட்டுமே நிறைய எண்ணிக்கையிலான பங்குகள் வர்த்தகமாகும் . இந்த நிறை எண்ணிக்கையில் தான் தாக்கச்செலவு (impact cost) மட்டுப்படும் . பங்குகளை வாங்கும் போது கூடுதல் விலை கொடுத்து வாங்குவது மற்றும் விற்கும் போது குறை வில...