Posts

பணம் ஒரே நிறம்

பணம் ஒரே நிறம் நிற அறியாமை என்பதான Colour Blindness பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிவப்பு மற்றும் பச்சை , நீலம் மற்றும் மஞ்சள் முதலான வண்ணங்களைப்  பிரித்தறிய முடியாத ஒரு குறைபாடு நிற அறியாமை என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது பரம்பரையாகவோ அல்லது கண் விழித்திரையில் உள்ள கூம்புகளின் எண்ணிக்கைக் குறைவு அல்லது கூம்புகளின் குறைபாட்டினால் வருகிறது. வெவ்வேறு நிறங்களைப் பிரித்தறிய முடியாத இந்தக் குறைபாடு பண விஷயத்தில் அப்படியே தலைகீழாக மாறுகிறது. நம்மில் பெரும்பாலானோர் ஒரே நிறத்தில் இருக்கும் பணத்தை வெவ்வேறு நிறங்களாகப் பார்க்கும் ஒரு குறைபாட்டிற்கு ஆட்பட்டிருக்கிறோம். இதனைப் பண அறியாமை (Money Blindness) என்று அழைக்கலாம். ஊக வணிகத்தில் ஒருவர் ஈடுபட்டு அவர் முதலீடு செய்த மன்னிக்கவும் ஊக வணிகத்தில் இட்ட பணத்தைப் போல் நான்கு மடங்கு பணம் ஈட்டுவதாகக் கொள்ளலாம். ஊக வணிகத்தில் இட்ட சொந்தப் பணத்தையும் ஊக வணிகம் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தையும் அவர் ஒரே மாதிரியாகக் கருத மாட்டார். சொந்தப் பணத்தின் மதிப்பு வேறு. ஊக வணிகத்தின் மூலமாக வந்த பணத்தின் மதிப்பு வேறு. இவ்வாறு ஊக வணிகம் மூலமாகக் கிடைக்க...

விலை வேற்றுமை வாணிபம்

விலை வேற்றுமை வாணிபம் Arbitrage ஒரு பங்கு தேசிய பங்குச்சந்தையில் 100 ரூபாய்க்கு வர்த்தகமாவதாகவும் அதே பங்கு மும்பை பங்குச்சந்தையில் 90 ரூபாய்க்கு வர்த்தகமாவதாகவும் வைத்துக்கொள்வோம். மும்பை பங்குச்சந்தையில் அந்தப் பங்கை 90 ரூபாய்க்கு வாங்கி தேசிய பங்குச்சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பது விலை வேற்றுமை வாணிபம் (Arbitrage) என்று அழைக்கப்படுகிறது. கேட்பதற்கு, எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்கான வழி போல் தோன்றினாலும் நடைமுறையில் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம். முதலாவதும் முக்கியமானதுமான பிரச்னை என்னவென்றால் மும்பை பங்குச்சந்தையில் நாம் பங்குகளை வாங்கத் தொடங்கியதும், அந்தப் பங்குகளுக்கான தேவைப்பாடு (demand) அதிகரித்து பங்கின் விலை உயர்ந்து விடும். அதே மாதிரி தேசிய பங்குச்சந்தையில் நாம் பங்குகளை விற்கத் தொடங்கியதும், அந்தப் பங்குகளின் அளிப்பு (supply) அதிகரித்து பங்கின் விலை குறைந்து விடும். ஒரு கட்டத்தில் பங்கின் விலை இரண்டு சந்தைகளிலும் சமநிலையை அடைந்து விலை வேற்றுமை வாணிப வாய்ப்பு மறைந்து விடும். பங்குகளை 90 ரூபாய்க்கு வாங்கி 100க்கு விற்கையில், வாங்கும் போதும் விற்கும் போதும் தரகர் தரகு, பங்குப...

பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எப்படி ?

பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எப்படி ? பங்குச்சந்தையில் முதலீடு செய்யக் கற்றுக் கொள்ளச் சிறந்த வழி பங்குச்சந்தையில் முதலீடு செய்வது தான். The best way to invest in the stock market is to invest in the stock market . அரசியலில் குதிக்க வேண்டும், காதலில் விழ வேண்டும், ஆன்மிகத்தில் இறங்க வேண்டும் என்பதாகச் சொல்வார்கள். பங்குச்சந்தையில் குதிப்பது தான் பங்குச் சந்தையைக் குறித்துக் கற்றுக்கொள்ள ஒரேயொரு சரியான வழி. கரையில் நின்று கொண்டு காலை நனைப்பது எல்லாம் கதைக்கு உதவாது.  இப்போது பங்குச்சந்தை  குறித்து வகுப்புகள் எல்லாம் கூட நடத்துகிறார்கள். அவர்கள் கற்றுக் கொடுப்பது பெரும்பாலும்  தினசரி வணிகம் (Day Trading) தொழில்நுட்பப் பகுப்பாய்வு (Technical Analysis) மற்றும் Futures and Options போன்ற பெறுதி (Derivative) வகைகளைத் தான். தினசரி வணிகம் செய்தால் பன்மடங்காகக் கூடிய பங்குகளைக் கைக்கொள்ளும் வாய்ப்புகளை இழக்கிறீர்கள். தொழில்நுட்பப் பகுப்பாய்வை, அடிப்படைப் பகுப்பாய்வுடன் (Fundamental Analysis) சேர்த்து ஊறுகாய் மாதிரி தான் தொட்டுக்கொள்ள வேண்டும். F & O என்பது உங்கள் முதலீட்ட...

ரூபாய் பங்கு முதலீடு

ரூபாய் பங்கு முதலீடு Rupee Stock Investing தமிழில் ரூபாய் பங்குகள் என்று அழைக்கப்படும் Rupee Stocks பற்றிய ஒரு பேச்சு வந்தது. என் நண்பர் ஒருவரின் 'ஒரு நாள்' நண்பர் இந்த ரூபாய் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலமாக தினம் இலட்சங்களில் சம்பாதிக்கிறாராம். உண்மை விவரிக்கப்படும் போதே பொய்யாகிறது என்ற பொன்மொழி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. முன்பெல்லாம் நண்பர் இந்த மாதிரி தகவல்களைக் கேட்டால் கொஞ்சம் சோர்வாகி விடுவார். நாம் எல்லாம் ஒன்றுக்கும் இலாயக்கில்லை ... இத்யாதி... இத்யாதி... இப்போது கொஞ்சம் பரவாயில்லை. இந்த நேரத்தில் ஒரு இரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். காதைக் கொஞ்சம் கிட்டே கொண்டு வாருங்கள். மேலும் இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லி விடாதீர்கள். இந்த மாதிரி தின வர்த்தகம் மூலமாக ஒருவர் இலட்சங்களில் சம்பாதிப்பதாக நான் கேள்விப்பட்டால் எனக்கும் ஒரு விதமான மனச்சோர்வு வந்து விடும். பொறாமையினால் அல்ல, மாறாக நாம் செல்லும் பாதை சரியானது தானா என்பதான ஒரு கேள்வி எழுந்து விடும். உடனே நான் என்ன செய்வேன் என்றால் முதலீட்டாளர்களின் பைபிள் என்று அழைக்கப்படும் The Intelligent Investor ப...

தாழப் பறத்தல்

தாழப் பறத்தல் மாத வருமானம் 10000 ரூபாய். மாத செலவு 9999 ரூபாய். மகிழ்ச்சி. மாத வருமானம் 10000 ரூபாய். மாத செலவு 10001 ரூபாய். துக்கம். சொன்னவர். சார்லஸ் டிக்கன்ஸ். சொல்லிய ஆண்டு 1850. சில சொற்கள் இவ்விதம் சாகாவரம் பெற்று விடுகின்றன. இந்த செலவை எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக ஆக்குகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதுவே தாழப் பறத்தல். செலவைக் குறைப்பது என்பது பட்டினியாக வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு படுப்பதல்ல. மூன்று வேளை தேநீர் அருந்தாமல் இரண்டு வேளை மட்டும் அருந்தியெல்லாம் யாரும் பணக்காரர் ஆக முடியாது. பொதுவாக சுற்றுலா செல்வதெல்லாம் ஒரு ஆடம்பரச் செலவு என்று தான் பார்க்கப்படுகிறது. அதுவும் டிஸ்னிலேண்ட்டிற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழிப்பது வடிகட்டிய ஆடம்பரம் தானே? அது அவ்வாறு அல்ல. ஒருவர் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து குடும்பத்துடன் டிஸ்னிலேண்ட் செல்கிறார். அந்த சுற்றுலாவினால் அகத்தூண்டலுக்கு (inspiration) உள்ளாகி அவரின் பால்ய மகன் இப்போது டிஸ்னிலேண்ட்டில் ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அது ஒரு கண்ணிற்குத் தெரியாத முதலீடு. நான் சொல்ல வருவது ...

பணமாக்கம் பாவமல்ல

பணமாக்கம் பாவமல்ல பங்குச்சந்தையில் பணமாக்கம் (profit booking) செய்வது பாவமல்ல. முதலீடு செய்வதின் முக்கிய நோக்கமே பின்னாட்களின் பணத்தேவைக்காக ஒரு பணப்பாய்ச்சலை (cash flow) உருவாக்கிக் கொள்வது தான். ஆனால் பணமாக்கம் என்பதை ஒரு சடங்கு மாதிரி செய்யக்கூடாது.  தேவைக்கு விற்பது என்பது வேறு. பங்கு இரண்டு மடங்கானதும் விற்று வைப்பது என்பது வேறு. இரண்டு மடங்கானதும் பங்குகளை விற்று விட்டால் நூறு மடங்காளர்களை எவ்விதம் கைப்பற்ற முடியும்? குறைந்த பட்சம் பத்தாண்டுகள் தேவைப்படாத பணத்தை மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்னரே ஒரு அவசரத்தேவை. வேறு வழியில்லாமல் பங்குகளைப் பணமாக்கம் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை. அப்போது என்ன செய்யலாம்?  பங்குகளில் முதலீடு செய்வது ஒரு கலை. அவ்வாறு முதலீடு செய்த பங்குகளைப் பணமாக்கம் செய்வது மற்றுமொரு கலை. பணமாக்கம் செய்யும் போது உங்கள் பங்குத் தொகுப்பிலிருந்து அடிச் செங்கல்லை உருவுவது மாதிரியான செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பங்குத் தொகுப்பின் ஒருங்கமைவிற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உங்கள் செயல்பாடு அமையவேண்டும்.  பங்குத்த...

சில கேள்விகள்

சில கேள்விகள் பங்குகளை விற்பது குறித்தான சில கேள்விகள் திரும்பத் திரும்ப என்னிடம் கேட்கப்படுகின்றன. அவைகளின் ஒரு சிறு பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன். 1. ஒரு பங்கை எப்போது தான் விற்பது? 2.பணமாக்கம் (Profit Booking) என்பதே கிடையாதா? 3.திடுதிப்பென்று பங்குச்சந்தை வீழ்ந்து விட்டால் என்ன செய்வது? 4.ஒரு பங்கை வாங்கிய விலையையாவது திரும்பப் பெறும் வகையில் கொஞ்சத்தை விற்று வைக்கலாமே? 5.இந்த இலாபத்தை எப்போது அனுபவிப்பீர்கள்? 6. எல்லாமே காகித இலாபமாக (Paper Profit) இருப்பது ஆபத்து இல்லையா? 7. பங்குச்சந்தையில் இலாபம் ஈட்டுவதன் மூலமாக யாரும் நஷ்டத்தை அடைய மாட்டார்கள் தானே? கேள்விகள்... கேள்விகள்... கேள்விகள்... ஒவ்வொரு கேள்வியாகப் பார்க்கலாம். 1.ஒரு பங்கை எப்போது விற்பது? அடிப்படைப் பகுப்பாய்வை (Fundamental Analysis) மேற்கொண்டு, மதிப்பு முதலீடாக (Value Investing) ஒரு நிறுவனப்பங்கை பார்த்துப் பார்த்து வாங்குகிறீர்கள். நிறுவனம் தீர்க்கவே முடியாத பிரச்னையில் சிக்கித் தவித்தால் விற்று விட்டு வெளியேறி விடலாம். சமீபத்திய உதாரணம் COX & KINGS . 2. பணமாக்கம் என்பதே கிடையாதா ? ...