Posts

நேர மொழிகள்- 1

நேர மொழிகள்- 1 Time Quotes- 1 1. Time is the most valuable thing a man can spend- Theophrastus நேரமே ஒரு மனிதன் செலவழிக்கக்கூடிய மிக மதிப்பு வாய்ந்த பொருள். 2. The key is not spending time, but in investing it- Stephen R Covey நேரத்தை வெறுமனே செலவழிக்காதீர்கள். அதனை முதலீடு செய்யுங்கள். 3. The trouble is, you think you have time- Jack Kornfeld நேரம் நிறைய இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது தான் பிரச்னை. 4. Men talks of killing time, while time quietly kill them- Dion Boucicault காலத்தைக் கொல்வது பற்றி மாந்தர்கள் பேசுகின்றனர். ஆனால் காலமே அவர்களைக் கொல்கிறது. 5. Your time is limited, so don't waste it living someone else's life- Steve Jobs உங்களுக்கான காலம் ஒரு வரம்புக்கு உட்பட்டது. இன்னொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து அதனை வீணடிக்காதீர்கள். 6. If you really looks closely, most overnight successes took a long time- Steve Jobs ஒரே இரவில் யாரும் வெற்றியடைந்து விடுவதில்லை, நீண்ட நெடுங்காலத்தில் தான் அது கை கூடும்.  7. We all have our time machines. Some take us back, they're called...

வணிக வடிவமைப்பு- 1

வணிக வடிவமைப்பு- 1 The Design of Business- 1 பொறுப்புத்துறப்பு: இந்தப் பதிவு, இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனப் பங்கினை வாங்குவதற்கான பரிந்துரை அல்ல. The design of business என்ற கருத்தாக்கத்தை விளக்கும் பொருட்டு ஒரு நிறுவனத்தை உதாரணமாகக் கொண்டு இது எழுதப்பட்டிருக்கிறது.        *          *            * Never invest in any idea you can't illustrate with a crayon- Peter Lynch  ஒரு வண்ணக்குச்சியைக் கொண்டு உங்கள் எண்ணக்கருக்களை விளக்க முடியாத எதிலும் முதலீடு செய்யாதீர்கள்.              *                *               * Federal Reserve: Plumber of the financial system                *                *           ...

பிரார்த்தனை மொழிகள்

பிரார்த்தனை மொழிகள் 1. பேரொளியே கருணையுடன் என்னை வழி நடத்து ... என் காலடிகளைச் சீர்ப்படுத்து ... தொலைதூரக் காட்சிகளை நான் பார்க்க விரும்பவில்லை. அடுத்த அடி தெளிவாகத் தெரிந்தால் போதும்- தேவாலயப் பிரார்த்தனை 2. மாற்றவியலாத நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம், மாற்றக்கூடிய நிகழ்வுகளை மாற்றியமைக்கத் தேவையான மனோதிடம், இவையிரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து கொள்ளும் விவேகம் இவற்றை எங்களுக்கு அருள்வாய் இறைவா! - அமைதிப் பிரார்த்தனை 3. ஆண்டவரே, என்னை உமது அமைதியின் கருவியாக ஆக்குவீராக.  வெறுப்பு இருக்கும் இடத்தில் அன்பையும்,  குற்றம் இருக்கும் இடத்தில் மன்னிப்பையும், முரண்பாடு இருக்கும் இடத்தில் ஒற்றுமையையும், பொய் இருக்கும் இடத்தில் உண்மையையும், சந்தேகம் இருக்கும் இடத்தில் நம்பிக்கையையும், இருள் இருக்கும் இடத்தில் ஒளியையும், விரக்தி இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியையும் விதைப்பீராக. ஆண்டவரே, ஆறுதல் பெறுவதற்கு, புரிந்து கொள்ளப்படுவதற்கு, அன்பு செலுத்துவதற்கு, நான் அதிகம் தேடாமல் இருக்க எனக்கு அருள் புரிவீராக. ஏனென்றால், கொடுப்பதில்தான் ஒருவர் பெறுகிறார், தன்னை மறப்பதில் தா...

படித்ததில் பிடித்தது- 3

படித்ததில் பிடித்தது - 3 [சுஜாதா பதில்கள்- முதல் மற்றும் இரண்டாம் பாகம் (உயிர்மை வெளியீடு) மற்றும் இணையத்திலிருந்து தேர்ந்தெடுத்த சில கேள்வி பதில்கள். சில பதில்கள் உங்களைச் சிரிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும்] கேள்வி: இணையத்தளங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? பதில்: சுய விளம்பரங்களுக்குப் பயன்படும். கேள்வி: கடவுள் கொள்கையில் உங்கள் தெளிவான முடிவு என்ன? பதில்: கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை. கேள்வி: வாழ்க்கையில் நீங்கள் கற்றதிலேயே முக்கியமான விஷயம் என்று எதைக் கருதுவீர்கள்? பதில்: கற்றது போதாது என்பதை. கேள்வி: ஆண்கள், பெண்கள்- பொய் சொல்வதில் யார் கில்லாடி? பதில்: பொய் பேசுவதில் கில்லாடிகள் ஆண்கள். அதைச் சட்டென்று கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் பெண்கள். கேள்வி: கதைகள் எப்போது காவியமாகின்றன? பதில்: நூறு வருஷம் பிழைத்திருந்தால். கேள்வி: உங்களுக்கு எந்த அளவு கடவுள் நம்பிக்கை உண்டு? பதில்: கடவுள் இருக்கிறார் என்ற அளவுக்கு. கேள்வி: ஒரு கதை எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? பதில்: சாதாரணமாக சில மணி நேரம் போதும். சில கதைகள் எழுதுவதற்கு வருஷங்கள் கூட ஆகும். கேள்வி: சந்த...

விலை வருவாய் விகிதம்- ஒரு விளக்கம்

விலை வருவாய் விகிதம்- ஒரு விளக்கம் All about PE Price Earning multiple என்பதாக அழைக்கப்படும் விலை வருவாய் விகிதம் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வில் (Fundamental Analysis) ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. நிறுவனத்தின் ஒரு பங்கு, 15 ரூபாய் வருவாய் (Earnings Per Share - EPS) ஈட்டுவதாகக் கொள்ளலாம். சந்தையில் நிறுவனப் பங்கின் விலை 300 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது என்றால் அதன் விலை வருவாய் விகிதம் (Price Earning multiple - PE) 300 ÷ 15 அதாவது 20. இதற்கான சமன்பாடு PE = Share price ÷ EPS  ஒவ்வொரு துறைக்கும் இது மாதிரி ஒவ்வொரு PE இருக்கிறது. இது போக ஒரு துறை சார்ந்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு PE இருக்கிறது. அப்புறம் காளைச்சந்தை PE. கரடிச்சந்தை PE. Forward PE என்று சொல்லப்படும் முன்னோக்கு PE. பின்னோக்கு PE. வரலாற்று PE (Historic PE) முதலீட்டாளர்களின் தலை சுழன்றடிக்க இந்த PE விகிதம் மட்டுமே போதுமானது. எனில் எந்த PE ல் கவனம் கொள்வது? வாருங்கள், பார்க்கலாம். ஒரு பங்கு 100 ரூபாய்க்கு வர்த்தகமாகலாம். அல்லது 10000 ரூபாய்க்கு வர்த்தகமாகலாம். 100 ரூபாய் மலிவு என்றோ 10000 ரூபாய் உயர்வு என்றோ நாம...

சுற்று வழி

சுற்று வழி  Obliquity  1. You can only swing well when you can swing without thinking about it- Bob Rotella ஆட்டத்தைக் குறித்து சிந்திக்காமல் ஆடும் போது மட்டுமே சிறப்பாக ஆட முடியும். 2. Oblique approaches often step backward to move forward. சுற்று வழிமுறைகளில், முன்னோக்கிச் செல்ல சமயங்களில் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 3. Happiness is not a goal; it is a by-product - Eleanor Roosevelt மகிழ்ச்சி என்பது ஒரு இலக்கல்ல. அது ஒரு துணை விளைபொருள். 4. Sometimes in life you never quite know what you are looking for until you find it. சில நேரங்களில் வாழ்க்கையில் நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது அதைக் கண்டுபிடிக்கும் வரை உங்களுக்குத் தெரியாது. 5. Don't try to master the market. Master yourself. சந்தையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்காதீர்கள். உங்களை நீங்களே ஆதிக்கம் செய்யுங்கள். 6. The best way to teach your kids about money is to make them feel the power of its scarcity- Margon Housel பணத்தைப் பற்றி உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கான சிறந்த வழி, அதன் பற்றாக்குறையின் சக்தியை அவர்களுக...