உலகப் பண மொழிகள் -1
உலகப் பண மொழிகள் - 1
1. கடனுக்கு வாங்கியதெல்லாம் மலிவாகவே தெரிகிறது .
2. சகோதரர்களாக இருங்கள் . ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் .
3. செல்வத்தை விட ஒரு தொழில் மேலானது .
4. சிறிது சிறிதாகப் பறவை தன் கூட்டைக் கட்டுகிறது .
5. வானத்திலிருந்து தங்கமாக மழை பெய்யும் பொழுது உங்கள் துணிகளையெல்லாம் விரித்து அதனை ஏந்திக் கொள்ளுங்கள் .
6. பணம் சேர்ப்பது என்பது ஊசியால் குழி தோண்டுவதைப் போல . பணம் செலவழிப்பது என்பது மணல் , தண்ணீரை உறிஞ்சுவது போல .
7. பணம் கைக்கு வருமுன்னே செலவு செய்யத் தொடங்க வேண்டாம் .
8. செல்வத்தை உபயோகித்தால் தீர்ந்து விடும் . கல்வியை உபயோகித்தால் அதிகரிக்கும் .
9. ஏழை , பணக்காரன் ஆனால் , நடுப்பகலில் நட்சத்திரங்களைப் பார்ப்பான் .
10. உங்கள் குழந்தைகளுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் , அவர்களுக்கு எப்போதும் கொஞ்சம் குளிரும் , கொஞ்சம் பசியும் இருக்கும்படி செய்யுங்கள் .
Comments
Post a Comment