படித்ததில் பிடித்தது - 1

படித்ததில் பிடித்தது - 1


1. வாழ்க்கை என்பது நமக்கு என்ன கிடைத்திருக்கிறது என்பதைப் பொறுத்தது அல்ல , அதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது .


2. இலக்கை விடப் பயணமே சாகசமானது , சவாலானது . எங்கு போய்ச் சேருகிறோம் என்பது முக்கியமே இல்லை . வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நொடியையும் இரசித்து வாழ்வதில் இருக்கிறது . 


3. இலாபத்தைக் கொண்டு வராத எல்லாச் செலவுகளுமே வீண் .


4. மனிதன் தூய்மையாக வைத்திருக்கும் தோட்டத்தை விட இயற்கை குப்பைக்கூளமாக வைத்திருக்கும் காடு தான் செழித்துக் காணப்படுகிறது . 


5. அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு உங்களிடம் நிறைய இருக்க வேண்டிய அவசியமே இல்லை .


6. செல்வத்தை அனுபவிப்பதில் அல்ல , அதை உருவாக்குவதில் தான் ஆனந்தம் இருக்கிறது .


7. ஒன்றின் பெயரைத் தெரிந்து கொள்வதற்கும் அதைப் புரிந்து கொள்வதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது .


8. நரகத்தின் ஊடாகப் போகிறீர்களா ? போய்க்கொண்டே இருங்கள் . பாலைவனத்தின் சூட்டில் இருந்து தப்ப வேண்டுமென்றால் ஒரே வழி அதைக் கடப்பது தான் .


9. குறைவான அதிகாரம் கொள்வதே நல்ல அரசாக இருக்க முடியும் .


10.இலக்கு என்ற ஒன்றை வைத்துக் கொள்வதை விட மனத்தில் ஒரு தணியாத தாகம் இருக்க வேண்டும் .


வானமே எல்லை / கேப்டன் கோபிநாத்

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்