Naval Ravikant - மணி மொழிகள்
Naval Ravikant - மணி மொழிகள்
Naval Ravikant Quotes
1. A fit body , a calm mind , a house full of love . These things cannot be bought - they must be earned .
ஆரோக்கியமான தேகம் , அமைதியான மனம் , அன்பான இல்லம் . இவைகளை உடனடியாக விலைக்கு வாங்க முடியாது . காலப்போக்கில் சம்பாதிக்க வேண்டும் .
2. You make your own luck if you stay at it long enough .
நீண்ட காலம் , ஒன்றில் நிலைத்திருந்தால் உங்களுக்கான அதிர்ஷ்டத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம் .
3. Earn with your mind , not your time .
புத்தியைக் கொண்டு வருமானம் ஈட்டுங்கள் . நேரத்தைக் கொண்டு அல்ல .
4. All the benefits in life come from compound interest - money , relationship , habits .
பணம் , உறவுகள் , பழக்கவழக்கங்கள் என்று வாழ்க்கையின் அனைத்து அனுகூலங்களும் கூட்டுப் பெருக்கத்தின் மூலமாகவே வரம் பெறுகின்றன .
5. The people who succeed are irrationality passionate about something .
வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்கள் எதன் மீதாவது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட காதல் கொள்பவர்களாக இருக்கிறார்கள் .
6. The smartest people can explain things to a child ; if you can't do that , you don't understand the concept .
குழந்தை ஒன்றுக்கு ஒரு கருத்தைப் புரிய வைக்க உங்களால் இயலவில்லை என்றால் அந்தக் கருத்தாக்கத்தை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதாக அர்த்தம் .
7. Following your genuine intellectual curiosity is a better foundation for a career than following whatever is making money right now .
மெய்யான அறிவுசார் தூண்டலே வாழ்க்கைத் தொழிலுக்கு ஒரு மேன்மையான அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் . உடனடியாகக் கிடைக்கும் பணம் அல்ல .
8. A personal metric : How much of the day is spent doing things out of obligation rather than out of interest ?
ஒரு தனிப்பட்ட அளவீடு : கடமையின் பொருட்டு அல்லாமல் ஆர்வ மிகுதியில் ஒரு நாளை எவ்விதம் செலவிடுகிறீர்கள் ?
9. School , politics , sports and games train us to compete against others . True rewards - wealth , knowledge , love , fitness and equanimity - come from ignoring others and improving ourselves .
பள்ளிக்கூடம் , அரசியல் , விளையாட்டு போன்றவை நாம் ஒருவரோடொருவர் போட்டி போட பயிற்றுவிக்கின்றன . செல்வம் , அறிவு , அன்பு , உடற்தகுதி , மன அமைதி போன்றவை மற்றவர்களைப் புறக்கணிப்பதிலும் நம்மை நாமே முன்னேற்றுவதிலும் இருக்கின்றன .
10. The best teachers , the best books , the best peers are on the internet . The tools for learning are abundant . It's the desire to learn that's scarce .
சிறந்த ஆசிரியர்கள் , மகத்தான புத்தகங்கள் , உற்ற தோழமைகள் என்று எல்லாமே இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன . கற்றுக் கொள்வதற்கான கருவிகள் அபரிமிதமாக இருக்கின்றன . கற்றுக் கொள்வதற்கான விருப்பம் மட்டும் அரிதாக இருக்கிறது .
Comments
Post a Comment