வதந்தீ

வதந்தீ

Rumour Quotes


1. Surround yourself with people who talks about visions and ideas not other people .

தொலைநோக்குப் பார்வை மற்றும் எண்ணக் கருக்கள் குறித்துப் பேசுபவர்களிடம் சிநேகமாய் இருங்கள் . புறம் பேசுபவர்களை அறவே தவிருங்கள் .


2. No one gossips about other people's secret virtues .

பிறரின் இரகசியமான நற்பண்புகள் பற்றி யாரும் புறம் பேசுவதில்லை .


3. No matter how carefully you choose your words they'll end up being twisted by others .

நீங்கள் எவ்வளவு தான் கவனமாக வார்த்தைகளைத் தேர்ந்து தெளிந்து பேசினாலும் இறுதியில் அவை மற்றவர்களால் திரிக்கப்பட்டே தீரும் .


4. Three men make a tiger .

மூன்று நபர்கள் புலியை உருவாக்கி விடுவார்கள் .


5. A lie can travel halfway around the world while the truth is putting on its shoes .

உண்மை , ஒரு காலடி எடுத்து வைப்பதற்குள் பொய் , பாதி உலகைச் சுற்றி வந்து விடும் .


6. A rumour is one thing that gets thicker instead of thinner as it is spread .

வதந்தி பரவப் பரவ வலுவிழப்பதற்கு மாறாக வலுப்பெறுவதாக இருக்கிறது .


7. Never settle for half the story and makeup and imagine the rest . Get the full story .

பாதிக்கதையைத் தெரிந்து கொண்டு மீதிக்கதையைக் கற்பனைக்கு விடாதீர்கள் . முழுமையான கதையைத் தெரிந்து கொள்ள முயலுங்கள் .


8. You can hear rumours but you can't know them .

நீங்கள் வதந்திகளைக் கேட்க முடியும் . அவற்றை அறிந்து கொள்ள முடியாது .


9. Don't waste your time with explanations . People only hear what they want to hear .

விளக்கங்கள் கொடுத்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் . மக்கள் அவர்கள் விரும்புவதை மட்டுமே கேட்க விழைவார்கள் .


10.Rumour dies when it hits the hardest soul .

வதந்தி ஒரு வலுவான ஆத்மாவை எட்டும் போது வலுவிழந்து விடும் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்