Posts

Showing posts from June, 2021

எளிமையே வெல்லும் - 1

எளிமையே வெல்லும் - 1 அந்தக் காலத்தில் பாடப் புத்தகங்களுக்கு அட்டை போடுவது கடினமான ஒரு செயலாக இருக்கும் . அதுவும் ஜுன் மாதம் வந்து விட்டால் போதும் , ஒரு ஆள் உயர பாடப் புத்தகங்களுக்கு அட்டை போட வேண்டியிருக்கும் . இப்போது ஆயத்த அட்டைகள் (Readymade Cover) வந்து விட்டன. இந்த வரியை எழுதுவதற்குள் அட்டை போட்டு விடலாம். அதுவும் புத்தகத்தை அளந்து அட்டையைத் தேர்ந்தெடுப்பது இப்போது ரொம்பவும் எளிமையாகி விட்டது. ஒரு புத்தகத்திற்கு நீளம், அகலம் மற்றும் உயரம் என்பதான மூன்று அளவுருக்கள் (Parameters) இருக்கின்றன. ஆயத்த அட்டைகள், உயரம் என்ற ஒரேயொரு அளவை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும். நீளம் மற்றும் அகலம் என்ற இரண்டு அளவுருக்களையும் இணைத்து ஒரு அளவுருவாக்கிக் கொள்ளும். அந்த நீளம் மற்றும் அகலம் இணைக்கப்பட்ட அளவுருவை பெரிய அளவுகளில் வைத்துக் கொண்டால் பிரச்னை தீர்ந்தது. புத்தகத்தின் உயரத்தை மட்டும் அளந்து அட்டையைத் தேர்ந்தெடுத்து விடலாம். நீளம் மற்றும் அகலம் பெரிதாக இருப்பதால் எந்தப் புத்தகத்திற்கும் அது பொருந்தும் வண்ணம் இருக்கும். நீளம் மற்றும் அகலம் சிறியதாக இருந்தாலும் மடக்கி ஒட்டிக் கொள்ளலாம். நீள...

நகை மொழிகள் - 2

நகை மொழிகள் - 2 1. வருமானத்திற்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதற்காகக் கடன் வாங்கினாலும் பரவாயில்லை  - Josh Billings 2. அக்டோபர்: பங்குகளை வாங்க மோசமான மாதம். பிற மோசமான மாதங்கள் பிப்ரவரி, டிசம்பர், மார்ச், நவம்பர், ஜனவரி, மே, ஜூன், ஆகஸ்ட், ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் - Mark Twain 3. உங்கள் குழந்தைகளுக்கு வருமான வரி குறித்து சொல்லிக் கொடுக்க எளிமையான வழி: ஐஸ்கிரீம் ஒன்றை வாங்குங்கள். அதை 35 சதவீதம்  உண்டு விட்டு மீதத்தை அவர்களிடம் கொடுங்கள் - Anonymous 4. லாட்டரியில் இலட்சாதிபதியாக எளிமையான ஒரு வழி இருக்கிறது. ஒரு கோடி ரூபாய்க்கு லாட்டரிச்சீட்டு வாங்குங்கள் - Jack Yelton 5. பணத்தின் கடைசியில் ஏன் இவ்வளவு மாதம் மிச்சமிருக்கிறது?  - John Barrymore 6. பணம் இந்த உலகத்தில் முக்கியமான விஷயம் இல்லை. அன்பு தான் மிக முக்கியமானது. நல்ல வேளையாக நான் பணத்தைக் காதலிக்கிறேன் - Jackie Mason 7. பணத்தை வீணடிக்கும் பழக்கம் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும். ஒரு கட்டத்தில் வீணடிக்கப் பணமே இருக்காது - Harrison 8. உங்களிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியவரை நீங்கள் மறுபடி பார்க்கவில்லை என்றால்...

பங்குச் சலிப்பான் - ஒரு சிறிய அறிமுகம்

பங்குச் சலிப்பான் - ஒரு சிறிய அறிமுகம் நிறுவனப் பங்குகளை சில குறிப்பிட்ட அளவுருக்களில் (parameters) சலித்து எடுத்துக் கொடுப்பவை பங்குச் சலிப்பான்கள் (Stock Screener) என்று அழைக்கப்படுகின்றன.  இணையத்தளங்களில் ஏராளமான பங்குச் சலிப்பான்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. பங்குச் சலிப்பான்களுக்கென்று screener.in என்ற தனிப்பட்ட இணையத்தளம் கூட உள்ளது. சில மேம்பட்ட பங்குச் சலிப்பான்களைப் பயன்படுத்தத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.  பங்குகளை முக மதிப்பு வாரியாகப் பிரித்துக் கொடுக்கும் அல்லது அகர வரிசைப்படி A யில் ஆரம்பிக்கும் பங்குகள் என்பதில் தொடங்கி நிதி விகிதங்களுக்கான சலிப்பான், சந்தை மதிப்பு சலிப்பான்... என்பதாக எல்லா வகையிலும் பங்குச்  சலிப்பான்கள் உள்ளன. இது போக அகழி முதலீடு என்பதான மென் சலிப்பான்களின் (Soft Screen)  ஒரு வரிசை உள்ளது. சலிப்பான்கள் வெறும் இயந்திரங்கள் மட்டுமே. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது நமது தனிப்பட்ட திறமையைப் பொறுத்தது. புரிந்து பயன்படுத்த வில்லையென்றால் நம்மைத் தவறாக வழி நடத்தி விடும். உதாரணமாக பங்கு ஈட்டு விகிதம் (பத்து ரூபாய் முக மதிப்பு உள...

நேர் பின்னூட்ட வளையம்

நேர் பின்னூட்ட வளையம் Positive Feedback Loop எதிர் பின்னூட்ட வளையம் (Negative Feedback Loop) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் Heater ல் எதிர் பின்னூட்ட வளையம் உள்ளது. மின்சாரம் அதிக அழுத்தத்தில் வந்தாலோ அல்லது Heater ஐ அமர்த்த மறந்தாலோ எதிர் பின்னூட்ட வளையம் செயல்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடும். நேர் பின்னூட்ட வளையம் என்பதற்கு உதாரணமாக நான் தொடர்ந்து எழுதும் இந்தப் பங்குச்சந்தை பற்றிய பதிவுகளையே எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பதிவுகள் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் விளையாட்டாகத் தான் தொடங்கப்பட்டது. சும்மாவேனும் தேநீர்க்கடையில் நின்று பங்குச்சந்தை குறித்துப் பேசுவது வேறு. எழுதும் போது புள்ளி விவரங்களுடன் தெளிவாக எழுத வேண்டும். மேலும் தமிழில் எழுதுவது ஒரு சவாலான விஷயம். சரியாக மொழி பெயர்த்து எழுத வேண்டும். அந்த வகையில் கூகுள் தேடுபொறி ரொம்ப உதவிகரம். சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவது தான் உத்தமம். எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை நகைச்சுவையாகச் சொல்லியிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. BASIC என்பது ஒரு கணினி மொழி. அது Beginn...

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம் 1. Margin of safety பத்து டன் எடையைத் தாங்கும் பாலத்தில் ஐந்து டன் எடையை மட்டும் கொண்டு செல்வது margin of safety என்று அழைக்கப்படுகிறது. இரயில் எட்டு மணிக்குப் புறப்படும் என்றால் ஏழரை மணிக்கே இரயில்வே ஸ்டேஷன் சென்றடைந்து விடுவது margin of safety. பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க இது ஒரு முக்கியமான கல்யாண குணமாகப் பார்க்கப்படுகிறது. நூறு ரூபாய் உள்ளார்ந்த மதிப்பு உள்ள பங்கை ஐம்பது ரூபாய்க்கு வாங்குவது margin of safety. பங்குச்சந்தையில் மனித உணர்ச்சிகளும் முட்டி மோதிக் கொள்வதால் பங்குகள் குறுகிய கால அளவில் அவற்றின் உள்ளார்ந்த மதிப்பை விடவும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வர்த்தகமாகும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. நீண்ட கால அளவில் பங்குகள் அவற்றின் உள்ளார்ந்த மதிப்பை அடியொற்றிச் செல்லும் என்றாலும் குறுகிய காலத்தில் எதுவும் நடக்கலாம். எனவே எப்போதும் margin of safety யுடன் இருப்பது மிக மிக முக்கியம். வாரன் பபெட்டின் குரு பெஞ்சமின் கிரகாம் பிரபலப்படுத்திய உத்தி இது. 2. Circle of competence தமிழில் திறமை வளையம் என்று சொல்லலாம். இது வாரன் பபெட் பிரபலப்படுத்திய முதலீட்டு மந்...

வாய்ப்பு விலை - 2

வாய்ப்பு விலை - 2 Opportunity Cost - 2 ஒருவர் பணத்தைக் கடுகு டப்பாவில் போட்டு வைத்திருக்கிறார். இன்னொருவர் கொஞ்சம் தைரியமானவர். வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கிறார். மற்றொருவர் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கிறார். பிறிதொருவர் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலிட்டிருக்கிறார். ஐந்தாமவர் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார். இந்த ஐவரும் ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பதாகக் கொண்டு இந்த ஐவருக்கும் வாய்ப்பு விலை போட்டுப் பார்க்கலாம்.  கடுகு டப்பாவில் பணத்தைப் போட்டு வைத்திருப்பவர் தான் ஆகப்பெரிய அபாயத்தில் இருக்கிறார் (ஆனால் அவர் அபாயத்தைத் தவிர்த்து விட்டதான தவறான புரிதலில் இருக்கிறார்) ஒரு வருட முடிவில் இவரிடம் ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே இருக்கும். (பண வீக்கத்தைக் கணக்கில் கொள்ளவில்லை)  வங்கி சேமிப்புக் கணக்கில் பணத்தை இட்டவருக்கு 2.75 சதவீத வட்டி என்று கொண்டால் அவரிடம் ஒரு வருட முடிவில் 102750 ரூபாய் இருக்கும்.  கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவருக்கு 6 சதவீத வட்டி என்று கொண்டால் 106000 ரூபாய்.  பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் 15 சதவீதம் த...

வாய்ப்பு விலை - 1

வாய்ப்பு விலை - 1 Opportunity Cost- 1 பங்குச்சந்தை சமீப காலமாகக் கூடவும் இல்லை. குறையவும் இல்லை. ஒரு வரம்புக்கு உட்பட்டு (Range bound) வர்த்தமாகிக் கொண்டிருக்கிறது. தப்பித்தவறி  பங்குச்சந்தை மேலேறிச் சென்றாலும் குறியீட்டுப் பங்குகள் மட்டுமே விலை கூடுகிறது. தரமான , முதலீட்டுப் பெருக்கத்தை ( Capital Appreciation) அடையக்கூடிய பங்குகளை மதிப்பு முதலீட்டு அடிப்படையில் வாங்கலாம் என்றாலும் அவற்றின் பங்கு ஈட்டு விகிதம் (Dividend Yield) மிகவும் குறைவாகவே இருக்கும். எனது பங்குத் தொகுப்பிலிருந்து வரும் வருமானம் பங்காதாயம் மட்டும் தான். இலாபத்தைப் பிடித்தல் (Profit Booking) எனக்கு ஒத்து வராது. எனவே நான் பங்காதாயத்தைக் கூட்ட வேண்டும். அவ்வாறெனில் பங்கு ஈட்டு விகிதம் அதிகமாகக் கொடுக்கக்கூடிய , அதே சமயம் குறைவான முதலீட்டுப் பெருக்கத்தை அடையக்கூடிய பங்குகளில் நான் முதலீடு செய்தாக வேண்டும். என் முன்னே இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று பங்கு ஈட்டு விகிதம் குறைவாகக் கொடுக்கக்கூடிய தரமான பங்குகளில் மதிப்பு முதலீடு செய்வது. மற்றொன்று பங்கு ஈட்டு விகிதம் அதிகமாகக் கொடுக்கக்கூடிய பங்கு ஈட்டு விகிதப் ...

ஆத்மாவின் ராகங்கள்

ஆத்மாவின் ராகங்கள் ஒரு அந்தரங்கமான நண்பன். அவனிடம் நம் ஆசைகள், ஏக்கங்கள், இலக்குகள், கேள்விகள், சந்தேகங்கள் என எல்லாவற்றையும் கேட்கலாம். பகிர்ந்து கொள்ளலாம். நம் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் கொடுக்கும். தவறாகக் கை தவறி கேள்வி கேட்டால் கூட தாங்கள் கேட்டது இது தானே என்று யூகித்துப் பதில் தரும். அன்றன்றைய செய்திகளைச் சுடச்சுடத் தரும். சொடக்குப் போடும் நேரத்தில் கணக்குப் போடும். மொழி பெயர்க்கும். பயணம் செய்கையில் வழித்துணைவனாக வரும். உலகின் எந்த மூலைக்கும் செய்திகளை உடனுக்குடன் அனுப்பும். முகம் சுளிக்காமல் செய்யும் இத்தனை சேவைக்கும் உங்களிடம் ஒரு பைசா கூடக் கேட்காது. நம் உயிருடனும், உணர்வுடனும் இரண்டறக் கலந்து நம் ஆத்மாவின் ராகங்களை (அப்பாடா ! தலைப்பை நியாயப்படுத்தியாகி விட்டது) மீட்டிக் கொண்டிருக்கும் கூகுள் தேடுபொறியின் கதையைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் Larry Page மற்றும் Sergey Brin ன் கல்லூரி ஆராய்ச்சிப்பாடம் தான் கூகுள் தேடுபொறியாகப் பரிணமித்தது‌. 1995 வாக்கில் இணையத்தில் பத்து மில்லியன் பக்கங்கள் இருந்தன. இதனை ஒழுங்குபடுத்தும்...

தெரிந்த பங்கு மொழி தெரியாத விளக்கம்

தெரிந்த பங்கு மொழி தெரியாத விளக்கம் குறைந்த விலைக்கு வாங்குக / அதிக விலைக்கு விற்க (buy low/ sell high) என்பது பங்குச்சந்தை பால பாடம். William Thorndike ன் The Outsiders புத்தகத்தைப் படிக்கும் வரை buy low, sell high என்றால் பங்குகளைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது என்பதாகத் தான் நினைத்திருந்தேன்.  The Outsiders புத்தகத்தில் William Thorndike, Teledyne நிறுவனம் குறித்த ஒரு அத்தியாயத்தில், பங்குகளைக் குறைந்த விலைக்கு வாங்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்றல் என்ற கருத்தாக்கத்தை ஒரு புதிய கோணத்தில் விளக்குகிறார். Teledyne நிறுவனர் Singleton வாரன் பஃபெட்டால் capital allocation guru என்று பாராட்டப்பட்டவர்.  Singleton , கரடிச்சந்தையில்  Teledyne நிறுவனத்தின், விலை வருவாய் விகிதம் (PE Multiple) குறைந்த அளவீட்டில் வர்த்தகமாகும் போது தனது நிறுவனப் பங்குகளைத் தானே வாங்கிக்கொண்டது குறைந்த விலைக்கு வாங்குதல் (buy low) காளைச்சந்தையில் Teledyne நிறுவனத்தின், விலை வருவாய் விகிதம் அதிகமான அளவீட்டில் வர்த்தகமாகும் போது, அந்த அதிக மதிப்புடைய பங்கைக் கொண்டு பிற நிறுவனங்களைக் ...

தலைகீழ் விகிதங்கள் - 1

தலைகீழ் விகிதங்கள் - 1 வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று எளிதாகச்  சொல்லி விடலாம். அடுத்த சனிக்கிழமை இரவு எப்பாடு பட்டாவது  பங்குச்சந்தை குறித்த ஒரு பதிவை எழுதி விடுவது என் கையில் உள்ளது ( காத்து கருப்பு கேட்காமல் இருக்கக் கடவது) ஆனால் பத்து வருடங்கள் கழித்து என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. ஆனால் பங்குச்சந்தையில் இது தலைகீழாக நடக்கும். நாளை பங்குச்சந்தை உயருமா அல்லது இறங்குமா என்று யாராலும் சொல்ல இயலாது. ஆனால் பத்து வருடங்கள் கழித்து பங்குச்சந்தைக் குறியீட்டெண் உயர் மதிப்பில் இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். எவ்வளவு உயரும் என்று தோராயமாகக் கூடக் கூறி விடலாம். நீண்ட கால அடிப்படையில் ஏன் பங்குச்சந்தையின் மதிப்பு கூடுகிறது? முதலாவது மற்றும் முக்கியமானதுமான காரணம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டின் GDP கூடுவது. இரண்டாவது பணவீக்கம். கடைசியாக equity risk premium. ஒருவர் கடன் பத்திர முதலீட்டில் பத்திரமாக ( அது பத்திரம். ஆனால் பத்திரமில்லை) முதலீடு செய்யலாம். அவரை பங்குச்சந்தை முதலான அபாயகரமான (அபாயகரமானது. ஆனால் அபாயகரமானதில்லை) முதலீடுகளின் பக்கம் இழ...

ஆராய்ந்தெடுத்த சில பங்கு மொழிகளும் அவற்றுக்கான விளக்கங்களும்

ஆராய்ந்தெடுத்த சில பங்கு மொழிகளும் அவற்றுக்கான விளக்கங்களும் ஒரு அழகிய பழமொழி நினைவில் இருப்பது பணப்பெட்டியில் ஒரு பொற்காசு இருப்பது போல. இது இலக்கியரீதியாக மட்டும் உண்மையில்லை.  பணரீதியாகவும் உண்மை. என் மனம் என்ற குளத்தில் விழுந்த இந்த (வைரக்) கற்கள் எழுப்பிய எண்ண அலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். பங்கு மொழி 1 விதி எண் 1 : பணத்தை இழக்காதே விதி எண் 2 : விதி எண் 1 ஐ மறக்காதே பூவுலகின் # 1 முதலீட்டாளர் வாரன் பஃபெட் முதலீட்டில் பணத்தை இழக்காமல் இருப்பதை ஏன் இவ்வளவு வலியுறுத்திக் கூறுகிறார்? ஒரு எளிய கணக்கு. ஒருவர் பங்குச்சந்தையில் முதல் வருடம் கரடியிடம் 50 சதவீதத்தை இழந்து விடுகிறார். ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு ஐம்பதினாயிரம் ஆகக் குறைந்து விடுகிறது. அடுத்த வருடம் நல்ல காளைச்சந்தை. 50 சதவீதம் இலாபம் கிடைக்கப் பெறுகிறது. அவருடைய பங்குகளின் மதிப்பு எவ்வளவு? பங்குகளின் மதிப்பு ஒரு இலட்சம் அல்ல. வெறும் 75000 ரூபாய் மட்டுமே.  ஒரு முதலீட்டில் 10 சதவீதத்தை இழந்தால் அந்த இழப்பை சமன் செய்ய 11 சதவீதம் சம்பாதிக்க வேண்டும். 25 சதவீதத்தை இழந்தால் 33 சதவீதம். 50 சதவீதத்தை இழந்தா...

என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ?

என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ? இந்தப் பதிவில் பணத்தைக் கொண்டு எதையெல்லாம் வாங்க முடியாது என்று கொஞ்சம் பார்க்கலாம். பணத்தால் நடத்தை, நேர்மை, மரியாதை, பண்பு நலன், பொது அறிவு, நம்பிக்கை, பொறுமை, ஒருமைப்பாடு மற்றும் அன்பு போன்றவைகளை வாங்க முடியாது. பணத்தால் மெத்தையை வாங்கலாம். தூக்கத்தை வாங்க முடியாது. கணினியை வாங்கலாம். மூளையை வாங்க முடியாது. உணவை வாங்கலாம். பசியார்வத்தை வாங்க முடியாது. அலங்காரத்தை வாங்கலாம். அழகை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம்.  ஆரோக்கியத்தை வாங்க முடியாது. ஆடம்பரத்தை வாங்கலாம். கலாச்சாரத்தை வாங்க முடியாது. கேளிக்கைகளில் ஈடுபடலாம். மகிழ்ச்சியை வாங்க முடியாது. தெரிந்தவர்களைப் பெறலாம். நண்பர்களைப் பெற முடியாது. கீழ்ப்படிதலைப் பெறலாம். விசுவாசத்தைப் பெற முடியாது. காமத்தைப் பெறலாம். காதலைப் பெற முடியாது. நீங்கள் பணக்காரர் ஆக உணர வேண்டுமென்று விரும்பினால் பணத்தால் வாங்க  முடியாத இத்தகைய விஷயங்களை எண்ணிப்பாருங்கள். பணம் என்பது வெறும் எண்கள் மட்டுமே. எண்களுக்கு முடிவே கிடையாது. பணத்தால் மகிழ்ச்சியை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் மகிழ்ச்சிக...

பங்குக்கதை - 1

பங்குக்கதை - 1 ( இந்தக் கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. எண்ணங்கள் மட்டும் தான் கற்பனை. எண்கள் அனைத்தும் உண்மை) சங்கரன் கடைசி முறையாக சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து விட்டுக் காலடியில் போட்டு ஒரு நசுக்கு நசுக்கினார். பத்து வருடப் பழக்கம். கொஞ்சம் ஏக்கமாகத் தான் இருந்தது. மாதம் இதற்காக நூறு ரூபாய் தண்டம் அழுவது அவருக்குப் பிடிக்கவில்லை. மற்றபடி சமூகத்திலும் இந்தப் பழக்கத்திற்கு அவ்வளவு மரியாதையில்லை. மகன் வேறு, ஒரு மாதிரி பார்க்கிறான். ஒரே மகன். ஆடிட்டர் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான். சங்கரனின் நண்பர் ஒருவர் பங்குச்சந்தையில் புலி. அவர் ஒரு தகவலைச் சொல்லியிருந்தார். அவர் பிடிக்கும் சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் , பெயர் கூட ITC என்று சொன்னதாக ஞாபகம் ,  தனது பங்குகளை வெளியிடப் போகிறதாம். பத்து ரூபாய் பங்கு பதினைந்து ரூபாய் என்று ஏதேதோ சொன்னார். சங்கரனுக்குப் பாதி புரியவில்லை. இந்த சிகரெட்டைப் புகைத்துப் புகைத்து மூளை மழுங்கி விட்டது. சங்கரன் இரயில்வேயில் guard வேலை பார்க்கிறார். இரவுப் பணிக்கு அடிக்கடி சென்று தான் இந்தப் புகைப்பழக்கம...

பணவீக்கம்

பணவீக்கம் Inflation என் அப்பா நான் சிறுவனாக இருந்த போது ஆறரை அடி அலமாரி ஒன்றை ரூபாய் 4500 க்கு வாங்கினார். நான் ஐந்தரை அடி அலமாரி ஒன்றை ரூபாய் 4500 க்கு வாங்கினேன். என் மகன் நான்கரை அடி அலமாரி ஒன்றை ரூபாய் 4500 க்கு வாங்கியிருக்கிறான். பணத்தின் மதிப்பு நாட்கள் செல்லச் செல்ல குறைந்து கொண்டே வருகிறது. இது தான் பணவீக்கம் (Inflation) என்று அழைக்கப்படுகிறது .  முதலீட்டுச் சமன்பாட்டில் பணவீக்கத்தையும் கட்டாயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலீட்டு வருமானத்திலிருந்து பணவீக்கத்தைக் கழித்தால் கிடைப்பது தான் உண்மையான வருமானம். அதுவும் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களான ஓய்வு கால முதலீடு, குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமணம் போன்ற முதலீட்டுத் திட்டங்களில் பணவீக்கத்தைக் கழித்த மதிப்பீடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் நீண்ட கால நோக்கில் பணம் முதலீட்டுப் பெருக்கத்தை அடைவது மாதிரி பணவீக்கமும் பெருக்(சுருக்)கத்தை அடைந்து விடும். பணவீக்கம் என்பது சட்டம் இயற்றப்படாமல் பிடிக்கப்படும் உலகளாவிய வரி என்பதாகச் சொல்வார்கள்.  பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் முதலீட்டுத் திட்டங்...

விப்ரோ - ஒரு பண இயந்திரம்

விப்ரோ - ஒரு பண இயந்திரம் ஒருவர் 1946 ல் Wipro நிறுவனத்தின்  முகமதிப்பு ரூபாய் 100 உள்ள மூன்று பங்குகளை அதன் முதல் பங்கு வெளியீட்டில்  (IPO) வாங்கி நாளது தேதி வரை வைத்திருப்பதாக ஒரு கற்பனை. 1946 ல் 300 ரூபாய் என்பது ஆகப் பெரிய தொகை முதலான நம்பிக்கையின்மைகளை ஆரோக்கியமாகப் புறந்தள்ளி விட்டு (a willing suspension of disbelief) நிறுவனத்தின் இலவசப்பங்கு, பங்குப்பிரிப்பு மற்றும் நிறுவனப்பிரிப்பு  வரலாற்றைக் கொஞ்சம்  விரிவாகப் பார்க்கலாம். Wipro - Bonus , Split and Demerger 1946 - IPO - 3 shares 1971 - 1:3 bonus - 4 1981 - 1:1 bonus - 8 1985 - 1:1 bonus - 16 1987 - 1:1 bonus - 32 1989 - 1:1 bonus - 64 1990 - 10:1 stock split - 640 1992 - 1:1 bonus - 1280 1995 - 1:1 bonus - 2560 1997 - 2:1 bonus - 7680 1999 - 5:1 stock split - 38400 2004 - 2:1 bonus - 115200 2005 - 1:1 bonus - 230400 2010 - 2:3 bonus - 384000 2012 - demerger - 12.12:100 - 430545 2017 - 1:1 bonus - 861090 2019 - 1:3 bonus - 1148120 1946 ல் ஒருவர் 3 Wipro பங்குகளை வாங்கி நாளது தேதி வரை ...