நகை மொழிகள் - 2

நகை மொழிகள் - 2


1. வருமானத்திற்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதற்காகக் கடன் வாங்கினாலும் பரவாயில்லை 

- Josh Billings


2. அக்டோபர்: பங்குகளை வாங்க மோசமான மாதம். பிற மோசமான மாதங்கள் பிப்ரவரி, டிசம்பர், மார்ச், நவம்பர், ஜனவரி, மே, ஜூன், ஆகஸ்ட், ஏப்ரல், ஜூலை, செப்டம்பர்

- Mark Twain


3. உங்கள் குழந்தைகளுக்கு வருமான வரி குறித்து சொல்லிக் கொடுக்க எளிமையான வழி: ஐஸ்கிரீம் ஒன்றை வாங்குங்கள். அதை 35 சதவீதம்  உண்டு விட்டு மீதத்தை அவர்களிடம் கொடுங்கள்

- Anonymous


4. லாட்டரியில் இலட்சாதிபதியாக எளிமையான ஒரு வழி இருக்கிறது. ஒரு கோடி ரூபாய்க்கு லாட்டரிச்சீட்டு வாங்குங்கள்

- Jack Yelton


5. பணத்தின் கடைசியில் ஏன் இவ்வளவு மாதம் மிச்சமிருக்கிறது? 

- John Barrymore


6. பணம் இந்த உலகத்தில் முக்கியமான விஷயம் இல்லை. அன்பு தான் மிக முக்கியமானது. நல்ல வேளையாக நான் பணத்தைக் காதலிக்கிறேன்

- Jackie Mason


7. பணத்தை வீணடிக்கும் பழக்கம் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும். ஒரு கட்டத்தில் வீணடிக்கப் பணமே இருக்காது

- Harrison


8. உங்களிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியவரை நீங்கள் மறுபடி பார்க்கவில்லை என்றால் நிச்சயம் அவரின் மதிப்பு நூறு ரூபாய்

- Ananymous


9. உங்களுக்குத் தலையில் அவ்வளவு முடி இருக்கும் போது இவ்வளவே கொடுத்த முடி திருத்தும் கட்டணம், நீங்கள் முதிர்ந்து தலையில் இவ்வளவே முடி  இருக்கும் போது அவ்வளவு ஆகி விடுவது பணவீக்கம் என்று அழைக்கப்படுகிறது

- Ananymous


10.நிறையப் பேர் அவர்கள் இன்னமும் சம்பாதிக்காத பணத்தை, அவர்கள் விரும்பாத பொருட்களில், அவர்களுக்கு வேண்டாத மனிதர்களைக் கவரும் பொருட்டுச் செலவிடுகிறார்கள்

- Will Smith

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14