Posts

Showing posts from April, 2026

வேகப் பாய்வை இனங்காணுதல்

வேகப் பாய்வை இனங்காணுதல் Finding the fast flow  வாழ்க்கையில் பெரும்பாலோனோர் அவர்களுடைய கனவு என்ன என்று தெரியாமலேயே கடைசி வரை வாழ்ந்து மடிந்து விடுகிறார்கள். சிலருக்கு அவர்களுடைய கனவு என்னவென்று தெரியும். ஆனால் அதை நனவாக்கும் வழிமுறைகள் அவர்களுக்குத் தெரியாது. கனவை நனவாக்கும் வழிமுறைகளில் தலையாய ஒரு உத்தியாக இந்த finding the fast flow வைச் சொல்லலாம்.  உங்களுடைய கனவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்தக் கனவு எங்கு உயிர்த்துடிப்புடன் நனவாகிக் கொண்டிருக்கிறதோ அத்தகைய இடங்களை நாடி நீங்கள் செல்ல வேண்டும். நீங்கள் ஒரு நாட்டுக்கே தலைவனாக வேண்டுமென்று விரும்பினாலும் சரி, நல்ல வேலை என்பது உங்களின் இலக்காக இருந்தாலும் சரி அவை நடைபெறும் இடங்களில் உங்களை நீங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நடிகராக வேண்டுமென்று விரும்பினால் கோடம்பாக்கத்திற்கு நீங்கள் செல்ல வேண்டியது அவசியம். நல்ல வேலை வேண்டுமென்று விரும்பினால் linkedin தளத்தில் நீங்கள் இருக்க வேண்டும்.  பங்குச்சந்தைக்கு வருவோம். பங்குச்சந்தையில் உங்கள் முதலீடுகள் இலாபகரமாக இருக்க வேண்டுமென்றால் பங்கு சார்ந்த இடங்களுக்கு ந...

அன்பே சிவம்

அ ன்பே சிவம் 1. Kindness is the one thing you can't give away. It always come back- George Skolsky அன்பை உங்களால் ஒருபோதும் முற்றாகக் கொடுக்க முடியாது. அது எப்படியாகினும் திரும்ப உங்களிடம் வந்து சேர்வதாகவே இருக்கும். 2. Love is the only thing that will pay interest to both borrower and lender- Robert Ingersoll அன்பு என்பது மட்டுமே கடன் பெறுபவருக்கும் கடன் கொடுப்பவருக்கும் வட்டி தரும் ஒரே பொருளாகும். 3. Love cannot be bought. It cannot be sold. The price of love is love only. அன்பை வாங்கவும் முடியாது. விற்கவும் முடியாது. அன்பிற்கு விலை அன்பு தான். 4. True love begins when nothing is looked for in return. உண்மையான அன்பு, பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காத போது தொடங்குகிறது. 5. A friendly look is a dish at a feast. நேசமான பார்வை என்பது விருந்திலே ஒரு உணவு வகையாகும். 6. Love is a language that the dumb can speak and the deaf can hear. அன்பு என்ற மொழியை ஊமையர் பேச முடியும். செவிடர் கேட்டுப் புரிந்து கொள்ள முடியும். 7. Love is a perfume you cannot pour on others without getting a few drops...

கட்டமைப்பு விளைவு

கட்டமைப்பு விளைவு Framing Effect  பரஸ்பர நிதி ஒன்றின் விளம்பர வாசகம் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.  70 சதவீதம் மிகை வருமானத்தைக் கொடுக்கக்கூடிய வாய்ப்பு ... இன்னொரு நிதியின் விளம்பரம் கீழ்க்கண்டவாறு உள்ளது. 30 சதவீதம் குறை வருமானத்தைக் கொடுக்கக்கூடிய வாய்ப்பு ... எந்த நிதியில் நீங்கள் முதலீடு செய்வீர்கள்? பெரும்பாலோனோர் முதல் நிதியில் முதலீட்டை மேற்கொள்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  இரண்டு நிதிகளும் ஒரே தகவலைத் தான் தெரிவிக்கின்றன.  ஆனால் அவை வார்த்தைகளை அமைக்கும் கட்டமைப்பு மாறுகிறது. முதல் நிதி இலாபத்தை முன்னிறுத்துகிறது. இரண்டாவது நிதி இழப்பை முன்னிறுத்துகிறது. 100 சதவீதம் இலாபம் அடையப் பெறுவதும் 100 சதவீதம் நஷ்டம் அடையப் பெறுவதும் ஒன்றல்ல. இது நஷ்டம் உவர்ப்பு சாய்வு (Loss aversion bias) என்பதாக அழைக்கப்படும். எனவே இழப்பை மட்டுமல்ல, இழப்பை முன்னிறுத்தும் நிதியில் கூட நாம் முதலீடு செய்யத் துணிவதில்லை.  இலாபத்தையே நாம் எப்போதும் விரும்புகிறோம். இவ்வாறு அடிப்படையான உண்மைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட வார்த்தைகளைக் கவனமாகக் கட்டமைப்பதன் மூலமாக மாந்தர்கள...

உலகப் பணமொழிகள்- 3

உ லகப் பணமொழிகள்- 3 1. பணம் வரும் போது அதற்கு இரண்டு கால்கள்; போகும் போது நூறு கால்கள். 2. தென்றலை விதைப்பவன் புயலை அறுவடை செய்கிறான். 3. வேக வேகமாகச் சேர்த்த செல்வங்கள் குறைந்து விடும்; சிறிது சிறிதாகச் சேர்ந்தவை பெருகும். 4. கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் விரும்புபவன் தான் ஏழை.  5. பாதிப் பணக்காரர் ஆகி விட்டால் முழுப் பணக்காரர் ஆவது எளிது. 6. பணத்தைக் கொடுத்தவனிடம் பல்லைக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தால் பணம் மீளாது. 7. வாணிபம் வாழ்நாள் முழுமைக்கும் ஒரு சொத்து. 8. வேண்டாத பொருள் ஒருநாளும் மலிவானதன்று. அது காசுக்கு ஒன்றாகிலும் மலிவன்று. 9. கடனாக ஆயிரத்திற்கு விற்பதைக் காட்டிலும் ரொக்கமாக எண்ணூறு பெறுவது மேல். 10. மரம் நட்டவன் அதன் கனியை உண்ணல் அரிது.