அன்பே சிவம்
அன்பே சிவம்
1. Kindness is the one thing you can't give away. It always come back- George Skolsky
அன்பை உங்களால் ஒருபோதும் முற்றாகக் கொடுக்க முடியாது. அது எப்படியாகினும் திரும்ப உங்களிடம் வந்து சேர்வதாகவே இருக்கும்.
2. Love is the only thing that will pay interest to both borrower and lender- Robert Ingersoll
அன்பு என்பது மட்டுமே கடன் பெறுபவருக்கும் கடன் கொடுப்பவருக்கும் வட்டி தரும் ஒரே பொருளாகும்.
3. Love cannot be bought. It cannot be sold. The price of love is love only.
அன்பை வாங்கவும் முடியாது. விற்கவும் முடியாது. அன்பிற்கு விலை அன்பு தான்.
4. True love begins when nothing is looked for in return.
உண்மையான அன்பு, பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காத போது தொடங்குகிறது.
5. A friendly look is a dish at a feast.
நேசமான பார்வை என்பது விருந்திலே ஒரு உணவு வகையாகும்.
6. Love is a language that the dumb can speak and the deaf can hear.
அன்பு என்ற மொழியை ஊமையர் பேச முடியும். செவிடர் கேட்டுப் புரிந்து கொள்ள முடியும்.
7. Love is a perfume you cannot pour on others without getting a few drops on yourself- Emerson
நாம் அன்பெனும் அத்தரைப் பிறர் மீது தெளித்தால் நம் மீதும் சில துளிகள் விழாமல் இருக்காது.
8. If love is your weakness, then you are the strongest person in this world- Mother Teresa
அன்பு தான் உனது பலவீனம் என்றால் இவ்வுலகில் நீயே மிகப்பெரிய பலசாலி.
9. In this world, love is both the most priceless thing and the cheapest- Ingersoll
உலகில் விலை மதிக்க முடியாததும் அன்பு தான். மலிவான விலை உள்ளதும் அன்பு தான்.
10. Never measure life by your possessions. Measure it by the hearts you touched, the smiles you created and the love you shared- Gautam Baid
உங்கள் உடைமைகளைக் கொண்டு வாழ்க்கையை அளவீடு செய்யாதீர்கள். எத்தனை இதயங்களை நீங்கள் தொட்டிருக்கிறீர்கள், எத்தனை புன்னகைகளை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள் மற்றும் எவ்வளவு அன்பைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கொண்டு அளவீடு செய்யுங்கள்.
Comments
Post a Comment