Daniel Crosby - மணி மொழிகள்

Daniel Crosby- மணி மொழிகள்


1. Worry less about the economy and more about your economy .


நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றிக் கவலைப்படுவதை விடுத்து வீட்டின் பொருளாதாரத்தைப் பற்றிக் கவலை கொள்ளுங்கள் .


2. Humans are wired to act ; markets tend to reward inaction .


மாந்தர்கள் செயலால் கட்டப் பட்டிருக்கிறார்கள் ; சந்தை செயலற்ற தன்மைக்கு ஊக்கமளிக்கிறது .


3. Bear markets , recession and especially uncertainty are the psychological price I pay for strong returns .


கரடிச்சந்தை , பொருளாதார மந்தநிலை மற்றும் மிக முக்கியமாக , நிச்சயமின்மை ஆகியவை , சந்தை எனக்குக் கொடுக்கும் நிலையான வருமானத்திற்கு நான் தரும் மனோரீதியான விலையாகும் .


4. I am the biggest risk to my long-term wealth creation .


எனது நீண்ட கால செல்வ உருவாக்கத்திற்கான ஆகப்பெரிய இடர்ப்பாடு நான் மட்டுமே .


5. I win by not losing .


நான் தோற்காமல் இருப்பதன் மூலமாக வெற்றியடைகிறேன் .


6. The best thing to do is often , but not always , nothing .


செயலற்ற தன்மையே , எப்போதும் என்று சொல்ல முடியாவிட்டாலும் , பெரும்பாலான சமயங்களில் சிறந்த ஒரு செயலாக இருக்கும் .


7. Prepare your finances for famine in times of feast and feast in times of famine .


சந்தை சாதகமாக இருக்கும் போது நிதியைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் . சந்தை பாதகமாக இருக்கும் போது முதலீடு செய்ய அது உதவும் .


8. Exceptional investing over a lifetime cannot be predicated on luck .


அதிர்ஷ்டத்தைக் கொண்டு நீண்ட கால முதலீட்டு வெற்றியை அடைய முடியாது .


9. Consistently bet on inconsistency . 


நிலையற்ற தன்மையில் நிலையாகப் பந்தயம் கட்டுங்கள் .


10. Intuition is the silent coming together of a lifetime of learning and must be cultivated if it is to be useful.


உள்ளுணர்வு என்பது வாழ்நாள் முழுவதுமான கற்றலின் மூலமாகக் கிடைக்கப்பெறுவது . மேலும் அது தொடர்ந்தவாக்கில் வளர்க்கப்பட வேண்டிய ஒன்று .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14