பங்குச்சந்தை பதில்கள் - 14

ங்குச்சந்தை பதில்கள் - 14


கேள்வி : கும்பமேளா காலங்களில் சந்தை சரிவது குறித்து ?


பதில் : கலைந்து செல்லும் மேகங்களில் உருவங்களைப் பார்க்கும் விளையாட்டு .


கேள்வி : Efficient Market Hypothesis என்பதை ஒரே வரியில் விளக்க முடியுமா ?


பதில் : பங்கின் விலை = பங்கின் மதிப்பு 


கேள்வி : சந்தை அடிக்கடி சரிவுடன் நிறைவடைவதைக் கவனித்தீரா ?


பதில் : சரிவே நிறைவு !


கேள்வி : புதிய Demat கணக்குகளின் எண்ணிக்கை வரலாற்று உச்சத்தை எட்டியிருப்பது குறித்து ?


பதில் : காளைச்சந்தை , Demat கணக்குகளின் எண்ணிக்கையை வரலாற்று உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது . கரடிச்சந்தையில் என்ன ஆகிறது என்று பார்க்க வேண்டும் .


கேள்வி : பன்மடங்காளராகட்டும் என்று பங்கு ஒன்றை வைத்திருந்தேன் . இரு மடங்காளராகிய பங்கு இப்போது பாதி குறைந்து ஒரு மடங்காளர் ஆகி விட்டது . சற்று 'ஙே' என்பதாக உணர்கிறேன் ?


பதில் : நீண்ட காலத்தில் 'ஓஹோ' என்றுணர இந்தக் குறுகிய கால 'ஙே'க்களைச் சகித்துக் கொண்டு தான் ஆகவேண்டும் .


கேள்வி : அடுத்த ஓராண்டில் 200 சதவீத வருமானத்தைத் தரும் பங்கு எதுவென்று சொல்ல முடியுமா ?


பதில் : கேட்பது தான் கேட்கிறீர்கள் , அதென்ன 200 சதவீதம் ? ஒரு 400 சதவீதம் என்று கேட்டால் என்னவாம் ?


கேள்வி : Market timing செய்யலாமா ?


பதில் : செய்யலாமே ! SIP க்கள் மூலமாக !


கேள்வி : Wealth effect ?


பதில் : பங்குச்சந்தை உயர்ந்தால் கொஞ்சம் பறப்பது போலவும் , பங்குச்சந்தை குறைந்தால் கொஞ்சம் விழுவது போலவும் இருப்பது செல்வ விளைவு , அதாவது , wealth effect என்பதாக அழைக்கப்படுகிறது .


கேள்வி : பங்குகளை விற்ற பின்னர் அதனைக் குறித்து மன வருத்தம் கொண்டிருக்கிறீர்களா ?


பதில் : தனிப்பட்ட பதிவு ஒன்றை எழுதும் அளவிற்கு நிறைய சோகக் கதைகள் உண்டு .


கேள்வி : பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது ... இவற்றில் எது கடினமானது ?


பதில் : பங்குகளை வாங்குவது கடினமானது . விற்பது அதனினும் கடினமானது . காலாகாலத்துக்கும் அவற்றைக் கையில் வைத்திருப்பது இன்னும் கடினமானது .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு