Posts

பணத்தின் நேர மதிப்பு

பணத்தின் நேர மதிப்பு Time value of money Waiting can make you older not richer . காத்திருத்தல் உங்களை வயதானவர் ஆக்குமேயன்றிப் பணக்காரர் ஆக்காது .             *                     *                  * இன்று கையில் கிடைக்கப்பெறும் பணத்தின் மதிப்பு , அதன் சம்பாதிக்கும் சக்தியால் , எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் பணத்தின் மதிப்பை விட எப்போதும் உயர்ந்தது . இந்த உயர் மதிப்பு பணத்தின் நேர மதிப்பு என்று அழைக்கப்படுகிறது .  இன்று உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கிடைப்பதாகக் கொள்ளலாம் . வங்கி சேமிப்புக்கணக்கில் அதனை வைத்திருந்தால் வருடத்திற்கு வட்டியாக 2.75 சதவீதம் (ரூ.2750) கிடைக்கும் . நிரந்தர வைப்பில் வைத்திருந்தால் 6.75 சதவீதம் (ரூ.6750) அதுவே பரஸ்பர நிதி முதலீடாக இருந்து , சந்தை காளைத்தனமாக இருந்தால் 15 சதவீதம் (ரூ.15000) பங்குகளாக வைத்திருந்தால் 20 சதவீதம் (ரூ.20000) இது தான் பணத்தின் நேர மதிப்பு . நீங்கள் முதலீடு செய்யும் முறையைப் பொற...

உலகப் பண மொழிகள் -1

உலகப் பண மொழிகள் - 1 1. கடனுக்கு வாங்கியதெல்லாம் மலிவாகவே தெரிகிறது . 2. சகோதரர்களாக இருங்கள் . ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் . 3. செல்வத்தை விட ஒரு தொழில் மேலானது . 4. சிறிது சிறிதாகப் பறவை தன் கூட்டைக் கட்டுகிறது . 5. வானத்திலிருந்து தங்கமாக மழை பெய்யும் பொழுது உங்கள் துணிகளையெல்லாம் விரித்து அதனை ஏந்திக் கொள்ளுங்கள் . 6. பணம் சேர்ப்பது என்பது ஊசியால் குழி தோண்டுவதைப் போல . பணம் செலவழிப்பது என்பது மணல் , தண்ணீரை உறிஞ்சுவது போல . 7. பணம் கைக்கு வருமுன்னே செலவு செய்யத் தொடங்க வேண்டாம் . 8. செல்வத்தை உபயோகித்தால் தீர்ந்து விடும் . கல்வியை உபயோகித்தால் அதிகரிக்கும் . 9. ஏழை , பணக்காரன் ஆனால் , நடுப்பகலில் நட்சத்திரங்களைப் பார்ப்பான் . 10. உங்கள் குழந்தைகளுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் , அவர்களுக்கு எப்போதும் கொஞ்சம் குளிரும் , கொஞ்சம் பசியும் இருக்கும்படி செய்யுங்கள் .

அனுமானக் கேள்விகளும் அதற்கான பதில்களும் - 1

அனுமானக் கேள்விகளும் அதற்கான பதில்களும் - 1 கேள்வி : பங்குச்சந்தை என்ற ஒன்றே இல்லாவிட்டால் என்னவாகும் ? பதில் : Infosys நிறுவனம் , பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது . பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது அதன் சந்தை மதிப்பு 0.121 இலட்சம் கோடி . தற்போதைய அதன் சந்தை மதிப்பு 8.25 இலட்சம் கோடி . மும்பை பங்குச்சந்தை 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது . 2014 ஆம் ஆண்டு அதன் சந்தை மதிப்பு (அதில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு) , 100 இலட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டியது . தற்போதைய அதன் சந்தை மதிப்பு 461 இலட்சம் கோடி ரூபாய் . பங்குச்சந்தை இல்லாவிட்டால் செல்வ உருவாக்கத்திற்கான இத்தகைய வாய்ப்புகள் ஏதுமிருக்காது . இவ்வாறாக நிறுவனங்கள் , அவைகளின் ஆக்கத்திற்கும் , விரிவாக்கத்திற்குமான நிதியைத் திரட்ட முதலீட்டாளர்களை நம்பியுள்ளன . முதலீட்டாளர்கள் , பணவீக்கத்தை விஞ்சிய உண்மையான வருமானத்தை ஈட்ட நிறுவனங்களை நம்பியுள்ளனர் . அந்த வகையில் பங்குச்சந்தை  நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான மிக முக்கியமான பாலமாகச் செயல்படுகிறது . இந்தப் பாலம் இல்லாவிட்டால் நிறுவனங்களும் முதலீட்டாளர...

ஆதிக்க சாய்வு

ஆதிக்க சாய்வு Authority Bias ஒரு துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்துக்கு மிகுந்த மதிப்பு கொடுத்து அதனைக் கண்ணை மூடிக்கொண்டு கடைப்பிடிப்பது , அவர்களின் எண்ணச்சிறையில் மாட்டிக் கொள்வது ஆதிக்க சாய்வு என்பதாக அழைக்கப்படுகிறது . அந்தத் துறை முதலீடாக இருந்து , வல்லுனர் பஃபெட் ஆக இருந்தாலும் அவருடைய கருத்தை ஆராய்ந்து அதனோடு நமது எண்ணங்களையும் சூழ்நிலைகளையும் கணக்கில் கொண்டே முதலீட்டு உத்திகளை மேற்கொள்ள வேண்டும் . வாரன் பஃபெட்டின் குரு , பெஞ்சமின் கிரகாம் , net-net (Liquidation value) என்று சொல்லப்படும் முறையில் முதலீடு செய்வார் . நடப்பு ஆஸ்தியிலிருந்து நடப்பு பொறுப்புகள் மற்றும் நீண்ட காலக் கடன்களைக் கழித்து வரும் மதிப்பை மட்டும் கணக்கில் கொண்டு முதலீடு செய்யும் முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது . Intangible assets என்று சொல்லப்படும் நிறுவனங்களின் கட்புலனாகா மதிப்பு இந்தக் கணக்கில் வராது . கிரகாம் , அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் போது பங்குச்சந்தையில் ஏகப்பட்ட நஷ்டத்தை எதிர்கொண்டார் . அந்தக் காலகட்டம் அவருடைய முதலீட்டு உத்தியைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கை வகித்தது . உள்ளார்ந்த மதிப்பு (Intrins...

குருவே சரணம்

குருவே சரணம் 1. When the student is ready , the teacher will appear . மாணாக்கர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்முன்னே காட்சி தருவார் . 2. Teachers open the door , but you must enter by yourself - Chinese proverb ஆசிரியர்களால் கதவைத் திறக்க மட்டுமே முடியும் , நீங்கள் தான் உங்களைக் கொண்டு உள் நுழைய வேண்டும் . 3. I cannot teach anybody anything , I can only make them think - Socrates  நான் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது , என்னால் அவர்களைச் சிந்திக்க வைக்க மட்டுமே முடியும் . 4. The person who learns the most in any classroom is the teacher - James Clear  வகுப்பறை ஒன்றில் அதிகம் கற்பது ஆசிரியரே . 5. Good teachers in any field , do far more than convey information ; they pass along something of themselves - Peter Buffett  எந்தத் துறையைச் சார்ந்த நல்லாசிரியர்களும் வெறுமனே தகவல்களைத் தெரிவிப்பதோடு நின்று விடுவதில்லை ; அவர்களின் ஏதோ ஒரு பகுதியையும் தருகிறார்கள் . 6. When one teaches two learn - Robert Heinlein ஒருவர் கற்பிக்கும் போது இருவர் கற்பிக்கப்படுகிறார்கள் . 7. Teac...

பங்குச்சந்தை பதில்கள் - 13

பங்குச்சந்தை பதில்கள் - 13 கேள்வி : பங்குச்சந்தை சரிவு , முதலீட்டாளர் பணம் இலட்சம் கோடி மாயம் என்று பத்திரிகை செய்தியைப் படிக்கும் போது உங்களை நினைத்துக் கொள்வேன் ? பதில் : பங்குச்சந்தை உயர்வு , முதலீட்டாளர் பணம் இத்தனை கோடி வரவு என்று பத்திரிகை செய்தியைப் படிக்கும் போதும் என்னை நினைத்துக் கொள்ள வேண்டுகிறேன் . கேள்வி : பரஸ்பர நிதி SIP க்களுக்கான பணத்தை முன்னதாகச் செலுத்தலாமா ? பதில் : வழி முறைகளில் களி கொள்ளுங்கள் . கேள்வி : பங்கு வியாபாரத்தில் இறங்குவதற்கு முன்னரான பாவனை வியாபாரம் (paper trading) சிறந்த ஒரு உத்தி தானா ? பதில் : காகிதக் காளைகள் ஒருபோதும் காங்கேயம் காளைகள் ஆக முடியாது .  கேள்வி : ஏமாற்று முதலீட்டுத் திட்டங்களை எப்படிக் கண்டறிவது ? பதில் : அபாயமும் வெகுமதியும் எப்போதும் நேர் கோட்டில் இணைந்திருக்கும் . அபாயம் அதிகரிக்க அதிகரிக்க வெகுமதியும் அதிகரிக்கும் . யாராவது அபாயமே இல்லாத வெகுமதி முதலீடுகள் என்று மாற்றிச் சொன்னால் அது ஏமாற்றுத் திட்டம் என்று அறிந்து கொள்ளுங்கள் . அத்தகையவர்களைக் கண்டால் அருகாமை சந்துகளில் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள் . கேள்வி : பயிற்சியே தேவைப்பட...

Ben Carlson - சொ(ற்)குவை

Ben Carlson - சொ(பொ) ற்குவை  1. The stock market is the only place where anyone can invest in human ingenuity . மனிதத்தின் கூர்மதியில் யாவரும் முதலீடு செய்யக் கூடியதான ஒரே இடம் பங்குச்சந்தை . 2. The stock market is fueled by differences in opinions , goals , time horizons and personalities over the short term and fundamentals over the long term . பங்குச்சந்தை குறுகிய கால அளவில் முதலீட்டாளர்களின் பார்வைகள் , இலக்குகள் , நேர எல்லைகள் மற்றும் ஆளுமைகள் போன்றவற்றின் வேறுபாடுகளால் தூண்டப்படுகிறது . நீண்ட கால அளவில் அடிப்படைகளால் அமைவதாக உள்ளது . 3. The stock market is the only business where the product goes on sale and all of the customers run out of the store . பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்கப்படும் போது வாடிக்கையாளர்கள் கடையை விட்டு வெளியே ஓடுவதான ஒரே வியாபாரம் பங்குச்சந்தை . 4. Saving , Investing and getting your personal finances in order are always more of an exercise in psychology than math . சேமித்தல் , முதலிடுதல் மற்றும் தனி நபர் நிதி நிர்வாகம் போன்றவை கணிதத்தை விட உளவியலைச் ச...