குருவே சரணம்
குருவே சரணம்
1. When the student is ready , the teacher will appear .
மாணாக்கர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்முன்னே காட்சி தருவார் .
2. Teachers open the door , but you must enter by yourself - Chinese proverb
ஆசிரியர்களால் கதவைத் திறக்க மட்டுமே முடியும் , நீங்கள் தான் உங்களைக் கொண்டு உள் நுழைய வேண்டும் .
3. I cannot teach anybody anything , I can only make them think - Socrates
நான் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது , என்னால் அவர்களைச் சிந்திக்க வைக்க மட்டுமே முடியும் .
4. The person who learns the most in any classroom is the teacher - James Clear
வகுப்பறை ஒன்றில் அதிகம் கற்பது ஆசிரியரே .
5. Good teachers in any field , do far more than convey information ; they pass along something of themselves - Peter Buffett
எந்தத் துறையைச் சார்ந்த நல்லாசிரியர்களும் வெறுமனே தகவல்களைத் தெரிவிப்பதோடு நின்று விடுவதில்லை ; அவர்களின் ஏதோ ஒரு பகுதியையும் தருகிறார்கள் .
6. When one teaches two learn - Robert Heinlein
ஒருவர் கற்பிக்கும் போது இருவர் கற்பிக்கப்படுகிறார்கள் .
7. Teaching is the one profession that creats all other professions .
கற்பித்தல் என்ற துறை மற்ற அனைத்துத் துறைகளையும் உருவாக்குகிறது .
8. Teaching is a great way to keep learning - Matthea Harvey
கற்பித்தல் என்பது கற்பதற்கான சிறந்த ஒரு வழிமுறையாகும் .
9. It is not what is poured but what is planted that counts - E P Bertin
நீங்கள் எதனை ஊற்றுகிறீர்கள் என்பது முக்கியத்துவம் பெறுவதில்லை . எதனை ஊன்றுகிறீர்கள் என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது .
10. The mediocre teacher tells . The good teacher explains . The superior teacher demonstrates . The great teacher inspires ― William Arthur Ward
சாதாரணமான ஆசிரியர்கள் ஒன்றைக் குறித்துக் கூறுகிறார்கள் . நல்லாசிரியர்கள் அதனை விவரிக்கிறார்கள் . மேலான ஆசிரியர்கள் செய்முறை விளக்கம் தருகிறார்கள் . மகத்தான ஆசிரியர்கள் அகத்தூண்டல் அளிக்கிறார்கள் .
Comments
Post a Comment