Posts

படித்ததில் பிடித்தது - 2

படித்ததில் பிடித்தது - 2 1. Time is a resource that becomes increasingly scarce for everyone with each passing second . நேரம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வினாடி செல்லச் செல்லவும் தனது மதிப்பில் அதிகரித்துக் கொண்டே வருவதான ஒரு அரிய வளமாகும் . 2. Negative knowledge (what doesn't work) is more robust than positive knowledge . எதிர்ம அறிவு (எது வேலைக்கு ஆகாது) நேர்ம அறிவை விட விவேகமானது . 3.Each of us forever remains a work in progress - always evolving , ever changing . We're all rough drafts of the person we're still becoming . நாம் ஒவ்வொருவரும் நாளும் பரிணமித்துக் கொண்டு , மாறிக் கொண்டு , நம்மை நாமே செப்பனிட்டுக் கொள்பவர்களாகவே இருக்கிறோம் . நாம் எதுவாக ஆகப்போகிறோமோ அது சார்ந்த தற்காலிகமான பிரதிகளே நாம் . 4. Freedom is like income that cannot be taxed . சுதந்திரம் என்பது வரிக்கு உட்படாத வருமானமாகும் . 5. Investing is a liberal art that involves cross-pollination of ideas from multiple disciplines . பல்வேறு துறைகளின் அயல் மகரந்தச் சேர்க்கையே முதலீடு என்பதான ஒரு கலை .  6. ...

பின்னோக்கு சாய்வு

பின்னோக்கு சாய்வு Hindsight Bias ஒரு நிகழ்வு நடந்த பின்னர் அது தவிர்க்க முடியாதது போல் தோன்றும் . ஆனால் அந்த நிகழ்வு நடப்பதற்கு முன்னர் அதனை அறிய முடியாது . நிகழ்வு ஒன்று நடப்பதற்கு முன்னரே அதனை அறிந்ததாக நினைத்துக் கொள்வது , அது சார்ந்த முடிவுகளை எடுப்பது , அதனால் இலாபம் பெற்றால் மனமகிழ்ச்சி அடைவது , நஷ்டம் அடைந்தால் துன்புறுவது பின்னோக்கு சாய்வு என்பதாக அழைக்கப்படுகிறது . தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் . முடிவுகள் வெளி வந்த பின்னர் அது தவிர்க்க முடியாதது போல் தோன்றும் . ஆனால் வெளி வருவதற்கு முன்னர் அதனை அறிய முடியாது . முடிவு வெளி வருவதற்கு முன்னரே அதை நாம் அறிந்ததாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது பின்னோக்கு சாய்வு . 2000 ஆவது ஆண்டு பங்குச்சந்தையில் வெடித்த தகவல் தொழில்நுட்பக் குமிழியை உதாரணமாகக் கொண்டு இந்தப் பின்னோக்கு சாய்வைப் புரிந்து கொள்ள முயலலாம் . இன்ஃபோசிஸ் முதலான நிறுவனங்களின் வருமானம் மீமிகைப் பெருக்கத்தில் வளர்ந்து வந்த காலகட்டம் அது . சந்தை அதற்கு மூன்று இலக்க விலை - வருவாய் விகிதங்களை அளித்து அழகு பார்த்தது . Base effect என்பதாக ஒரு கருத்தாக்கம் இருக்கிறது . ...

கூகுள் கேட்ட கேள்விகள் - 4

கூகுள் கேட்ட கேள்விகள் - 4 Questions by Google - 4 (Ideas Panel Questions) 1. Why Petronet LNG is going down in stock market from Rs.260 to 218 ? Petronet LNG பங்கு ஏன் ரூபாய் 260 லிருந்து 218 க்கு வந்து விட்டது ? சந்தையில் இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா ! 2. How much secure share market investments ? பங்குச்சந்தை முதலீடுகள் எந்த அளவு பாதுகாப்பானவை ? குறுகிய காலத்தில் பாதுகாப்பற்றவை . நீண்ட காலத்தில் பாதுகாப்பானவை . 3. What will be the right time to enter the stock market again ? பங்குச்சந்தையில் மீண்டும் முதலீட்டை மேற்கொள்வதற்கான சரியான தருணம் எது ? கையில் காசு இருக்கும் தருணம் . 4. Best recurring deposit plans ? நல்ல தொடர் வைப்புத் திட்டங்கள் ? பங்கு சார்ந்த பரஸ்பர நிதி SIP க்கள் . 5. Does any financial services company offering forecasting services for quarterly results of companies ? நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை முன்னறிவிக்கும் நிதி சேவை நிறுவனங்கள் ஏதாகிலும் உள்ளதா ? நிறுவனங்களுக்கே தத்தமது காலாண்டு முடிவுகளை முன் கணிக்கத் தெரியாது . அப்படியிருக்கும் போது மற்ற நிறு...

Henry David Thoreau - மணி மொழிகள்

Henry David Thoreau - மணி மொழிகள் Henry David Thoreau - Quotes 1. If you have built castles in the air , your work need not be lost ; that is where they should be . Now put the foundations under them . ஆகாயத்தில் நீங்கள் கோட்டை கட்டினால் உங்கள் வேலை வீண்போகாது . அவைகள் அங்கு தான் இருக்க வேண்டும் . இப்போது அஸ்திவாரத்தை அவைகளுக்குக் கீழே கட்டுங்கள் . 2. It is not enough to be industrious ; so are the ants . What are you industrious about ? சுறுசுறுப்பாக இருப்பது தவறில்லை . எறும்புகள் கூட எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கின்றன . ஆனால் எதன் பொருட்டு நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் ? 3. What I began by reading I must finish by acting . படிப்பதன் மூலமாக எதனை நான் தொடங்குகிறேனோ செயல்பாட்டின் மூலமாக அதனை நான் முடிக்கிறேன் . 4. Men have become the tools of their tools . மனிதன் நாளடைவில் தன் கருவியின் கருவியாக மாறி விடுகிறான் . 5. What we call knowledge is often our positive ignorance . Ignorance is our negative knowledge . அறிவு என்பது நேர்ம அறியாமை . அறியாமை என்பது எதிர்ம அறிவு . 6. If you c...

சைக்கிள் திருடர்கள் ஜாக்கிரதை

சைக்கிள் திருடர்கள் ஜாக்கிரதை . புரட்சி நடைபெறுவதற்கு முந்தைய ரஷ்யாவில் சைக்கிள் போன்ற வாகனங்களை விரைவாக விற்பதற்கு மோசடியான சில வழிமுறைகளை விற்பனையாளர்கள் கையாண்டனர் . உதாரணமாக நாளிதழ்களில் பின்வருமாறு விளம்பரம் கொடுப்பார்கள் .  ஒரு சைக்கிள் வெறும் 10 ரூபிள் (ரஷ்ய நாணயம்) மட்டுமே . 50 ரூபிள் மதிப்புள்ள சைக்கிள் 10 ரூபிளுக்கு . முந்துங்கள் . இச்சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே . இலவச விவரங்களுக்கு எங்களை அணுகவும் . விவரம் என்னவென்றால் , நிறுவனம் நான்கு சீட்டுக்களை (coupon) உங்களுக்குக் கொடுக்கும் . அந்த சீட்டுக்களை நீங்கள் நான்கு நபர்களிடம் தலா பத்து ரூபிளுக்கு விற்க வேண்டும் . பின்னர் உங்களுக்கான பத்து ரூபிளையும் சேர்த்து மொத்தம் ஐம்பது ரூபிள்களை நிறுவனத்திடம் கொடுத்து சைக்கிளைப் பெற்றுக் கொள்ளலாம் . பத்து ரூபிளுக்கு உங்களுக்கு சைக்கிள் கிடைப்பதென்னவோ உண்மை தான் . ஆனால் ... முதன்முதலில் இந்தத் திட்டத்தில் சேருபவருக்கு சீட்டுக்களை விற்பதில் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது . இந்தத் திட்டத்தில் ஆர்வமுடைய நான்கு பேரை மட்டும் அவர் இனங்கண்டால் போதுமானது . அந்த நால்வர் ஒவ்வொருவரும் ...

ஏதோ நினைவுகள் ...

ஏதோ நினைவுகள் ... Memory Quotes 1. Life brings tears , smiles and memories . The tears dry , smiles fade but the memories last forever . வாழ்க்கை , கண்ணீரையும் , புன்னகையையும் , நினைவுகளையும் கொடுக்கிறது . கண்ணீர் வற்றி விடலாம் , புன்னகை மங்கி விடலாம் , ஆனால் நினைவுகள் என்றென்றைக்குமாக இருக்கும் . 2. Memory is the diary we all carry about with us . நினைவுகள் , நம்மைப் பற்றி நாம் ஏந்திச் செல்வதான ஒரு நாட்குறிப்பு . 3. I love those random memories that make me smile no matter what's going on in my life right now . என் வாழ்க்கை இப்போது எப்படி இருந்தாலும் , சீரற்ற தற்செயலான அந்த நினைவுகள் என்னைப் புன்னகைக்க வைக்கின்றன .  4. Sometimes you will never know the value of a moment until it becomes a memory . சில நேரங்களில் ஒரு கணத்தின் மதிப்பை அது நினைவாக மலர்ந்த பின்னர் மட்டுமே நம்மால் உணர முடியும் . 5. Memories are the treasures that we keep locked deep within the storehouse of our souls , to keep our hearts warm when we are lonely . ஞாபகங்கள் நம் ஆன்மாவின் களஞ்சியத்தில்  நாம் பத்திரப...

முதுமை நகை மொழிகள்

முதுமை நகை மொழிகள் Funny Old Age Quotes 1. Middle age is when a guy starts turning of lights for economic rather than romantic reasons - Eli Cass நடுத்தர வயது : காதல் காரணங்களுக்காக அல்லாமல் பொருளாதாரக் காரணங்களுக்காக விளக்கை அணைக்கும் பருவம் . 2. Middle age is your smart phone rings and you hope it's not for you , it's just an advertisement or wrong number . உங்கள் திறன் பேசி ஒலிக்கும் போது அது எனக்கானதில்லை , ஏதாவது விளம்பரம் அல்லது தவறான அழைப்பு என்று நம்பிக்கை கொண்டால் நடுத்தர வயதை நீங்கள் எட்டி விட்டதாக அர்த்தம் . 3. Growing old is mandatory but growing up is optional - Walt Disney வளர்ந்து முதிர்தல் என்பது கட்டாயமானது . வளர்ந்து அறிதல் என்பது விருப்பத்திற்கு உட்பட்டது . 4. Time may be a great healer but it's a lousy beautician - Dorothy Parker காலம் என்பது எல்லாவற்றையும் குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவர் . ஆனால் அது ஒரு மோசமான ஒப்பனையாளர் . 5. At least you're not as old as you will be next year . குறைந்த பட்சம் அடுத்த ஆண்டை விட ஒரு ஆண்டு இளையவராகவே ந...