கூகுள் கேட்ட கேள்விகள் - 4
கூகுள் கேட்ட கேள்விகள் - 4
Questions by Google - 4
(Ideas Panel Questions)
1. Why Petronet LNG is going down in stock market from Rs.260 to 218 ?
Petronet LNG பங்கு ஏன் ரூபாய் 260 லிருந்து 218 க்கு வந்து விட்டது ?
சந்தையில் இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா !
2. How much secure share market investments ?
பங்குச்சந்தை முதலீடுகள் எந்த அளவு பாதுகாப்பானவை ?
குறுகிய காலத்தில் பாதுகாப்பற்றவை . நீண்ட காலத்தில் பாதுகாப்பானவை .
3. What will be the right time to enter the stock market again ?
பங்குச்சந்தையில் மீண்டும் முதலீட்டை மேற்கொள்வதற்கான சரியான தருணம் எது ?
கையில் காசு இருக்கும் தருணம் .
4. Best recurring deposit plans ?
நல்ல தொடர் வைப்புத் திட்டங்கள் ?
பங்கு சார்ந்த பரஸ்பர நிதி SIP க்கள் .
5. Does any financial services company offering forecasting services for quarterly results of companies ?
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை முன்னறிவிக்கும் நிதி சேவை நிறுவனங்கள் ஏதாகிலும் உள்ளதா ?
நிறுவனங்களுக்கே தத்தமது காலாண்டு முடிவுகளை முன் கணிக்கத் தெரியாது . அப்படியிருக்கும் போது மற்ற நிறுவனங்கள் எவ்வாறு இதனைக் கணிக்க முடியும் ?
6. Is laptop necessary for trading in stock market ?
மடிக்கணினி , பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு அவசியம் தேவையா ?
வர்த்தகத்திற்கு மடிக்கணினி அவசியம் தேவை . ஆனால் பங்குச்சந்தை வர்த்தகம் தேவையா ?
7. Who will decide the value of newly listed shares ?
புதிதாகப் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு யாரால் தீர்மானிக்கப்படுகிறது ?
அளிப்பு (supply) மற்றும் தேவை (demand) இதனைத் தீர்மானிக்கிறது .
8. Is betting at stock market is a healthy way out for earning money ?
பங்குச்சந்தையில் பந்தயம் கட்டுவது பணம் ஈட்டுவதற்கான ஒரு ஆரோக்கியமான வழிமுறையா ?
பங்குச்சந்தையில் பந்தயம் எல்லாம் கட்ட வேண்டாம் . வெறுமனே பங்கு பெற்றால் மட்டும் போதுமானது .
9. Is share market affect commodity market ?
பங்குச்சந்தை , பொருட்சந்தையைப் பாதிக்குமா ?
எல்லாச் சந்தையும் எல்லாச் சந்தையையும் பாதிக்கும் .
10.How to find the higher high low and lower high low in stock market ?
பங்குச்சந்தையில் , உயர்வு உயர்வு தாழ்வு மற்றும் தாழ்வு உயர்வு தாழ்வு போன்றவைகளை எவ்வாறு கண்டறிவது ?
தலை சுற்றுகிறது .
Comments
Post a Comment