ஏதோ நினைவுகள் ...

ஏதோ நினைவுகள் ...

Memory Quotes


1. Life brings tears , smiles and memories . The tears dry , smiles fade but the memories last forever .

வாழ்க்கை , கண்ணீரையும் , புன்னகையையும் , நினைவுகளையும் கொடுக்கிறது . கண்ணீர் வற்றி விடலாம் , புன்னகை மங்கி விடலாம் , ஆனால் நினைவுகள் என்றென்றைக்குமாக இருக்கும் .


2. Memory is the diary we all carry about with us .

நினைவுகள் , நம்மைப் பற்றி நாம் ஏந்திச் செல்வதான ஒரு நாட்குறிப்பு .


3. I love those random memories that make me smile no matter what's going on in my life right now .

என் வாழ்க்கை இப்போது எப்படி இருந்தாலும் , சீரற்ற தற்செயலான அந்த நினைவுகள் என்னைப் புன்னகைக்க வைக்கின்றன . 


4. Sometimes you will never know the value of a moment until it becomes a memory .

சில நேரங்களில் ஒரு கணத்தின் மதிப்பை அது நினைவாக மலர்ந்த பின்னர் மட்டுமே நம்மால் உணர முடியும் .


5. Memories are the treasures that we keep locked deep within the storehouse of our souls , to keep our hearts warm when we are lonely .

ஞாபகங்கள் நம் ஆன்மாவின் களஞ்சியத்தில்  நாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கக் கூடிய பொக்கிஷங்களாகும் . தனிமையில் இருக்கும் போது நம் இதயத்திற்கு இதம் தரும் கணப்பு அடுப்பும் அவையே ஆகும் .


6. The best memories of our life can never be captured in pictures , they are always captured by heart .

வாழ்க்கையின் சிறந்த தருணங்களை இதயத்தால் மட்டுமே படம் பிடிக்க முடியும் . 


7. The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart .

உலகின் சிறந்த மற்றும் அழகிய விஷயங்களைப் பார்க்கவோ ஏன் தொடவோ முடியாது . அவைகளை இதயத்தால் மட்டுமே உணர முடியும் .


8. Time moves in one direction , memory in another .

நேரம் ஒரு திசையில் செல்கிறது . நினைவுகள் மறு திசையில் செல்கின்றன .


9. Humans not places make memories .

மாந்தர்கள் நினைவுகளை உருவாக்குகிறார்கள் , இடங்கள் அல்ல . 


10.Nothing is ever really lost to us as long as we remember it .

எதனையுமே நாம் உண்மையில் இழப்பதில்லை , அவற்றை நம் நினைவில் வைத்திருக்கும் வரை .


Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14