படித்ததில் பிடித்தது - 2

படித்ததில் பிடித்தது - 2


1. Time is a resource that becomes increasingly scarce for everyone with each passing second .


நேரம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வினாடி செல்லச் செல்லவும் தனது மதிப்பில் அதிகரித்துக் கொண்டே வருவதான ஒரு அரிய வளமாகும் .


2. Negative knowledge (what doesn't work) is more robust than positive knowledge .


எதிர்ம அறிவு (எது வேலைக்கு ஆகாது) நேர்ம அறிவை விட விவேகமானது .


3.Each of us forever remains a work in progress - always evolving , ever changing . We're all rough drafts of the person we're still becoming .


நாம் ஒவ்வொருவரும் நாளும் பரிணமித்துக் கொண்டு , மாறிக் கொண்டு , நம்மை நாமே செப்பனிட்டுக் கொள்பவர்களாகவே இருக்கிறோம் . நாம் எதுவாக ஆகப்போகிறோமோ அது சார்ந்த தற்காலிகமான பிரதிகளே நாம் .


4. Freedom is like income that cannot be taxed .


சுதந்திரம் என்பது வரிக்கு உட்படாத வருமானமாகும் .


5. Investing is a liberal art that involves cross-pollination of ideas from multiple disciplines .


பல்வேறு துறைகளின் அயல் மகரந்தச் சேர்க்கையே முதலீடு என்பதான ஒரு கலை . 


6. The path of lasting wealth is deferred gratification , savings and compound interest . 


ஒரு போதும் தீராத செல்வ வளம் என்பது ஒத்தி வைக்கப்பட்ட மனநிறைவு , சேமிப்பு மற்றும் கூட்டுப் பெருக்கத்தினால் ஆகப்பெற்றது .


7. Be passionate about the business but dispassionate about the stock .


நிறுவனத்தின் மேல் உணர்ச்சியுடன் இருங்கள் . நிறுவனப் பங்குகளின் மேல் உணர்ச்சியற்று இருங்கள் .


8. Writing is a thinking exercise and it acts as a shield against the rusting of our mind . It is also a useful tool for retaining what we read and it deepens our understanding .


எழுதுதல் என்பதான சிந்தனைப் பயிற்சி மனது துருப்பிடிக்காமல் காக்கும் அருமருந்தாகும் . மேலும் அது நாம் படித்தவைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும் மற்றும் அதனைக் குறித்து ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுவதாகவும் இருக்கிறது .


9. Simplicity is the art of thoughtful reduction .


எளிமை என்பது சிந்தனையார்ந்த  களைதல் என்பதான ஒரு கலை .


10. One of the most satisfying moments in investing is when the world looks at a business the same way you did four or five years earlier .


நீங்கள் ஒரு வியாபாரத்தை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் எவ்விதம் பார்த்தீர்களோ அதே மாதிரி இவ்வுலகம் பார்ப்பதான அந்தத் கணமே முதலீட்டு வாழ்க்கையின் திருப்திகரமான ஒரு தருணமாகும் . 


(The Joys of Compounding - Gautam Baid)

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14