Posts

சைக்கிள் திருடர்கள் ஜாக்கிரதை

சைக்கிள் திருடர்கள் ஜாக்கிரதை . புரட்சி நடைபெறுவதற்கு முந்தைய ரஷ்யாவில் சைக்கிள் போன்ற வாகனங்களை விரைவாக விற்பதற்கு மோசடியான சில வழிமுறைகளை விற்பனையாளர்கள் கையாண்டனர் . உதாரணமாக நாளிதழ்களில் பின்வருமாறு விளம்பரம் கொடுப்பார்கள் .  ஒரு சைக்கிள் வெறும் 10 ரூபிள் (ரஷ்ய நாணயம்) மட்டுமே . 50 ரூபிள் மதிப்புள்ள சைக்கிள் 10 ரூபிளுக்கு . முந்துங்கள் . இச்சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே . இலவச விவரங்களுக்கு எங்களை அணுகவும் . விவரம் என்னவென்றால் , நிறுவனம் நான்கு சீட்டுக்களை (coupon) உங்களுக்குக் கொடுக்கும் . அந்த சீட்டுக்களை நீங்கள் நான்கு நபர்களிடம் தலா பத்து ரூபிளுக்கு விற்க வேண்டும் . பின்னர் உங்களுக்கான பத்து ரூபிளையும் சேர்த்து மொத்தம் ஐம்பது ரூபிள்களை நிறுவனத்திடம் கொடுத்து சைக்கிளைப் பெற்றுக் கொள்ளலாம் . பத்து ரூபிளுக்கு உங்களுக்கு சைக்கிள் கிடைப்பதென்னவோ உண்மை தான் . ஆனால் ... முதன்முதலில் இந்தத் திட்டத்தில் சேருபவருக்கு சீட்டுக்களை விற்பதில் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது . இந்தத் திட்டத்தில் ஆர்வமுடைய நான்கு பேரை மட்டும் அவர் இனங்கண்டால் போதுமானது . அந்த நால்வர் ஒவ்வொருவரும் ...

ஏதோ நினைவுகள் ...

ஏதோ நினைவுகள் ... Memory Quotes 1. Life brings tears , smiles and memories . The tears dry , smiles fade but the memories last forever . வாழ்க்கை , கண்ணீரையும் , புன்னகையையும் , நினைவுகளையும் கொடுக்கிறது . கண்ணீர் வற்றி விடலாம் , புன்னகை மங்கி விடலாம் , ஆனால் நினைவுகள் என்றென்றைக்குமாக இருக்கும் . 2. Memory is the diary we all carry about with us . நினைவுகள் , நம்மைப் பற்றி நாம் ஏந்திச் செல்வதான ஒரு நாட்குறிப்பு . 3. I love those random memories that make me smile no matter what's going on in my life right now . என் வாழ்க்கை இப்போது எப்படி இருந்தாலும் , சீரற்ற தற்செயலான அந்த நினைவுகள் என்னைப் புன்னகைக்க வைக்கின்றன .  4. Sometimes you will never know the value of a moment until it becomes a memory . சில நேரங்களில் ஒரு கணத்தின் மதிப்பை அது நினைவாக மலர்ந்த பின்னர் மட்டுமே நம்மால் உணர முடியும் . 5. Memories are the treasures that we keep locked deep within the storehouse of our souls , to keep our hearts warm when we are lonely . ஞாபகங்கள் நம் ஆன்மாவின் களஞ்சியத்தில்  நாம் பத்திரப...

முதுமை நகை மொழிகள்

முதுமை நகை மொழிகள் Funny Old Age Quotes 1. Middle age is when a guy starts turning of lights for economic rather than romantic reasons - Eli Cass நடுத்தர வயது : காதல் காரணங்களுக்காக அல்லாமல் பொருளாதாரக் காரணங்களுக்காக விளக்கை அணைக்கும் பருவம் . 2. Middle age is your smart phone rings and you hope it's not for you , it's just an advertisement or wrong number . உங்கள் திறன் பேசி ஒலிக்கும் போது அது எனக்கானதில்லை , ஏதாவது விளம்பரம் அல்லது தவறான அழைப்பு என்று நம்பிக்கை கொண்டால் நடுத்தர வயதை நீங்கள் எட்டி விட்டதாக அர்த்தம் . 3. Growing old is mandatory but growing up is optional - Walt Disney வளர்ந்து முதிர்தல் என்பது கட்டாயமானது . வளர்ந்து அறிதல் என்பது விருப்பத்திற்கு உட்பட்டது . 4. Time may be a great healer but it's a lousy beautician - Dorothy Parker காலம் என்பது எல்லாவற்றையும் குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவர் . ஆனால் அது ஒரு மோசமான ஒப்பனையாளர் . 5. At least you're not as old as you will be next year . குறைந்த பட்சம் அடுத்த ஆண்டை விட ஒரு ஆண்டு இளையவராகவே ந...

HDFC - ஒரு நினைவுக் குறிப்பு

HDFC - ஒரு நினைவுக் குறிப்பு HDFC நிறுவனம் இனி தனிப்பட்ட முறையில் செயல்படப் போவதில்லை . அது அதன் துணை நிறுவனமான HDFC வங்கியுடன் இணைக்கப்பட உள்ளது . இந்த இணைப்பின் பின்னர் சந்தை மதிப்பு (Market Capitalization) அடிப்படையில் அது உலகின் நான்காவது பெரிய வங்கியாக மாறும் . அதன் உத்தேச சந்தை மதிப்பு 157 பில்லியன் டாலர்கள் . இந்திய நாணய மதிப்பில் 13 இலட்சம் கோடி ரூபாய் . இந்த இணைப்புக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன . முதலாவது HDFC நிறுவனத்தின் பார்வையிலானது . வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்து கொண்டே வரும் இன்றைய சூழலில் வீட்டுக்கடன் வழங்குவதற்கான நிதியை குறைந்த வட்டி விகிதங்களில் நிறுவனத்தால் திரட்ட முடிவது மேலும் மேலும் கடினமாகிக் கொண்டே வருகிறது . வங்கியாக இருக்கும் பட்சத்தில் சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்குகள் மூலமாக குறைந்த வட்டி விகிதங்களில் நிதியைத் திரட்டிக் கொள்ளலாம் . இன்னொரு காரணம் HDFC வங்கியின் பார்வையிலானது . HDFC வங்கி , வீட்டுக்கடன் வழங்க முடியாத நிலையில் இருந்தது . ஏனென்றால் அதன் தாய் நிறுவனம் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமாக இருந்தது . இந்த இணைப்ப...

மூழ்கு செலவு மாயை

மூழ்கு செலவு மாயை Sunk cost fallacy தள்ளுபடி போக 7000 ரூபாய்க்கு புதிய மிக்ஸி ஒன்றை மனைவி வாங்கியிருந்தார் . அந்த மாடல் மிக்ஸியை வாங்கியதற்கான முக்கியமான காரணம் அதன் சிறிய ஜாடி . அடிக்கடி குறைந்த அளவில் உணவுப் பொருட்களை அரைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை . அதன் பொருட்டு சிறிய அளவுகளில் அரைக்கும் மிக்ஸியை வாங்கியாகி விட்டது . அந்த சிறிய ஜாடியைத் தலைகீழாகப் போட்டு அரைக்கும் வகையில் அந்த மிக்ஸி வடிவமைக்கப்பட்டிருந்தது . ஒவ்வொரு முறை அரைக்கும் போதும் மிக்ஸியின் அடிப்பகுதியில் பொருட்கள் ஒட்டிக் கொண்டு பாதி வீணாகி விடும் . அதைச் சுத்தம் செய்து பயன்படுத்துவது ஒரு கூடுதல் வேலையானது . பின்னர் விசாரித்த போது அந்த சிறிய ஜாடி உலர் பொருட்களை அரைப்பதற்கானது என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது . மற்றபடி அந்த மிக்ஸி 7000 ரூபாய்க்கு மதிப்பு முதலீடு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் . எங்கள் அன்றாடத் தேவைக்கு அது பொருந்தி வரவில்லை . மிக்ஸியில் அரைத்தல் என்பது தின அளவில் செய்வதான ஒரு வேலையாகும் . இதனை இவ்வாறு பயன்படுத்த பயன்படுத்த தினமும் மன அழுத்தம் ஏறிக்கொண்டே இருந்தது . வேறு மிக்ஸியை வாங்குவதற...

Ray Dalio - மணி மொழிகள்

Ray Dalio - மணி மொழிகள் Ray Dalio Quotes 1. He who lives by the crystal ball will eat shattered glass . பளிங்குக் கண்ணாடியின் வழியாக எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதன் உடைந்த துண்டுகள் மூலமாகக் காயம் அடையப் பெறுவார்கள் .  2. Choose your habits well . Habit is probably the most powerful tool in your brain's tool box . பழக்கங்களில் கவனம் கொள்ளுங்கள் . பழக்கங்கள் உங்கள் புத்தியின் மிக முக்கியமான கருவியாகும் .  3. To make money in the market , you have to think independently and be humble .  பங்குச்சந்தையில் பணம் ஈட்ட தனிப்பட்டு சிந்தியுங்கள் . மேலும் அடக்கம் கொள்ளுங்கள் .  4. There are two main drivers of asset class returns - inflation and growth . சொத்துக்களின் உயர்வுக்கான இரு முக்கியக் காரணிகள் - பணவீக்கம் மற்றும் வளர்ச்சி . 5. If you are not aggressive , you are not going to make money and if you are not defensive , you are not going to keep money .  அடித்து ஆடும் ஆட்டம் ஆடாமல் பணத்தை ஈட்ட முடியாது . தற்காப்பு ஆட்டம் ஆடாமல் பணத்தைக் காக்...

சந்தை (வாழ்க்கை) மொழிகள்

சந்தை (வாழ்க்கை) மொழிகள் 1.Those who cannot remember the past are condemned to repeat it . கடந்த காலத் தவறுகளை நினைவு கூராதவர்கள் அதனை மீண்டும் செய்யும் படி தண்டிக்கப்படுவார்கள் . பங்குச்சந்தையில் அவ்வப்போது குமிழிகள் [bubbles] தோன்றி மறைந்த வண்ணமாகவே இருக்கும் . Tulip bubble, South sea bubble, Mississippi bubble, Railway bubble, The Florida real estate bubble, Dot com bubble, Sub prime bubble என்று பங்குச்சந்தைக் குமிழிகளின் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது . இந்த வரலாறு குறித்த ஒரு தெளிவு நம்மிடம் இருந்தால் இனிமேல் பங்குச்சந்தையில் வரவிருக்கும் குமிழிகளில் நாம் பங்கு பெறாமலும் மேலும் அந்தக் குமிழி வெடிப்பை நமக்குச் சாதகமாக எவ்விதம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறியப் பெறலாம் . இவ்வாறு மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வது நாம் தவறு செய்து கற்றுக் கொள்வதை விட விலை மலிவான மதிப்பு முதலீடாகும் . எல்லாம் சரி , பங்குச்சந்தையில் அடிக்கடி ஏன் குமிழிகள் உண்டாவதும் வெடித்துச் சிதறுவதுமாக இருக்கின்றன ? பங்குச்சந்தை மட்டுமல்ல , எல்லாச் சந்தைகளும் மனித உணர்வுகளால் நெய்யப்பட்டவை...