Ray Dalio - மணி மொழிகள்
Ray Dalio - மணி மொழிகள்
Ray Dalio Quotes
1. He who lives by the crystal ball will eat shattered glass .
பளிங்குக் கண்ணாடியின் வழியாக எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதன் உடைந்த துண்டுகள் மூலமாகக் காயம் அடையப் பெறுவார்கள் .
2. Choose your habits well . Habit is probably the most powerful tool in your brain's tool box .
பழக்கங்களில் கவனம் கொள்ளுங்கள் . பழக்கங்கள் உங்கள் புத்தியின் மிக முக்கியமான கருவியாகும் .
3. To make money in the market , you have to think independently and be humble .
பங்குச்சந்தையில் பணம் ஈட்ட தனிப்பட்டு சிந்தியுங்கள் . மேலும் அடக்கம் கொள்ளுங்கள் .
4. There are two main drivers of asset class returns - inflation and growth .
சொத்துக்களின் உயர்வுக்கான இரு முக்கியக் காரணிகள் - பணவீக்கம் மற்றும் வளர்ச்சி .
5. If you are not aggressive , you are not going to make money and if you are not defensive , you are not going to keep money .
அடித்து ஆடும் ஆட்டம் ஆடாமல் பணத்தை ஈட்ட முடியாது . தற்காப்பு ஆட்டம் ஆடாமல் பணத்தைக் காக்க முடியாது .
6. If you don't own gold , you know neither history nor economics .
தங்கம் உங்களிடம் இல்லையென்றால் வரலாறும் உங்களுக்குத் தெரியாது , பொருளாதாரமும் தெரியாது என்பதாக அர்த்தம் .
7. It's more important to do big things well than to do the small things perfectly .
பெரிய விஷயங்களைச் செம்மையாகச் செய்தல் சிறிய விஷயங்களைப் பூரணமாகச் செய்வதைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது .
8. Remember that most people are happiest when they are improving and doing the things that suit them naturally and help them advance .
பெரும்பாலோனோர் எப்போது மனமகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இயற்கையாக வரப்பெற்றதைச் செய்வது மற்றும் அதனைச் செம்மைப்படுத்துவது மேலும் அதன் வழி முன்னேறிச் செல்வதின் போது .
9. The biggest mistake investors made is to believe that what happened in the recent past is likely to persist .
சமீபத்தில் என்ன நடந்ததோ அது சாஸ்வதமாகத் தொடரும் என்று முதலீட்டாளர்கள் நினைப்பது ஒரு மாபெரும் தவறு .
10.The important thing in your strategic asset allocation mix is assume that you don't know what the future is going to hold .
கேந்திரமான சொத்து ஒதுக்கீட்டுத் திட்டங்களில் எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமின்மை முக்கிய இடத்தை வகிக்கிறது .
Comments
Post a Comment