Posts

அரிய வளம்

அரிய வளம் (Scarce Resource) நான் ... அதைப்பற்றி அப்புறம் ...  நீங்கள் பிறந்த நாளிலிருந்து உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கு துவங்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா ? அது மட்டுமல்ல , இந்தக் கணக்கில்  தினந்தோறும் 86400 ரூபாய் மதிப்புள்ள பணம் வரவு வைக்கப்படுகிறது.  நீங்கள் ஏழை பணக்காரன் என்பது முக்கியமில்லை. உங்கள் நிறம் கருப்பு சிவப்பு என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மதம் மொழி இனம் என்ற எந்தப் பாகுபாடும் காட்டப் படுவதில்லை. விடிந்து எழுந்தால் உங்கள் வங்கிக்கணக்கில் இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். ஆனால் ஒரேயொரு சின்னப் பிரச்னை. இந்தப் பணத்தை அன்றன்றைய தினம் நீங்கள் செலவழித்து விட வேண்டும். நீங்கள் இந்தப் பணத்தைச் செலவழித்தாலும் சரி செலவழிக்காவிட்டாலும் சரி அன்றைய இரவில் இது பூஜ்யமாகி விடும்.  இந்தப் பணத்தைச் செலவழிக்காமல் வைத்திருந்து வட்டி வருமானங்களை எதிர்பார்க்க முடியாது. Overdraft வசதியெல்லாம் கிடையாது. இந்தப் பணம் கொஞ்சம் மர்மமானது. இந்தப் பணத்தைப் புரிந்து தெளிந்து பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் அடையப் பெறும் உயரங்கள் அளவிட முடியாத அளவுகளில் இருக்கும். இ...

நான் ஏன் பங்குத் தொகுப்பைப் பகிர்வதில்லை ?

நான் ஏன் பங்குத் தொகுப்பைப் பகிர்வதில்லை ? உங்கள் விருப்பப் பங்குகள் (Favourite Stocks) குறித்து இந்தப் பதிவுகளில் ஊடும் பாவுமாக எழுதுகிறீர்கள் . உங்கள் பங்குத் தொகுப்பை (Stock Portfolio) அவ்வப்போது முழுமையாகப் பகிரலாமே ; அது பலருக்கும் பயன்படுவதாக இருக்குமே என்பதாக நண்பர் ஒருவரின் கேள்வி . இந்தப் பங்குத் தொகுப்பு பகிர்வு குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம் . பல்லாண்டுகளின் காலப் பன்மயமாக்கத்தில் ( Time Diversification ) இந்தப் பங்குத் தொகுப்பு உருவாக்கம் பெற்றிருக்கிறது . ஒரு நூறு மடங்காளர் (100 bagger ) சிற்சில ஐம்பது மடங்காளர்கள் , சில பத்து மடங்காளர்கள் , பல ஐந்து மடங்காளர்கள் , பற்பல இரண்டு மடங்காளர்கள் என்பதாக இந்தத் தொகுப்பு இருக்கிறது . சில பங்குகள் வாங்கிய விலைக்கே ஊசலாடிய வண்ணமாக இருக்கின்றன . இன்னும் சில வாங்கிய விலைக்கும் கீழே வர்த்தமாகிக் கொண்டிருக்கின்றன . நூறு மடங்காளர் பங்குகளிலிருந்து  கிடைக்கப்பெறும் பங்காதாயம் குறைந்த பட்சம் 20 % என்ற அளவில் இருக்கிறது . ஐம்பது மடங்காளர் என்றால் 10 % பத்து மடங்காளர் என்றால் 5 % என்ற வாக்கில் இது குறைந்த வண்ணமாக இருக்கிறது . பங்குத்...

ஜென் கதைகள் - 2

ஜென் கதைகள் - 2 1. புல்லின் நுனியில் பிரபஞ்சம் மதிப்பு முதலீட்டாளர்களின் கழகம் (Value Investors Club) ஒன்று ஒவ்வொரு வருடமும் முதலீட்டாளர் மாநாடு ஒன்றை நடத்துவது வழக்கம் . அந்த மாநாட்டின் முத்தாய்ப்பான நிகழ்வாக ஒரு முதலீட்டாளர் தனித்துவமான (unique) பங்கு ஒன்றைப் பரிந்துரை செய்வது வழக்கம் . ஒருமுறை வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த முதலீட்டாளர் ஒருவர் தன்னிகரற்ற பங்கு ஒன்றைப் பரிந்துரைத்தார் . அனைத்து முதலீட்டாளர்களும் இந்த நிறுவனப் பங்கை எவ்விதம் இனங் கண்டீர்கள் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர் . அது அவர்கள் நடத்தும் PMS (Portfolio Management Services) ல் இடம்பெற்ற பங்கேயன்றி வேறில்லை . அந்த முதிர்ந்த முதலீட்டாளர் தொடர்ந்து சொன்னது : நாம் இவ்வாறு தான் நம்  மகிழ்ச்சியைத் தேடி எங்கெங்கெல்லாமோ அலைந்தவாறு இருக்கிறோம் . ஆனால் நம் வீட்டு வாசற்படிக்கு அடியில் முளைத்திருக்கும் புல்லின் நுனியில் நம்மைச் சுற்றியுள்ள மொத்தப் பிரபஞ்சமும் தெரிவதைக் காண மறந்து விடுகிறோம் . 2 . வானவில்லைத் துரத்தினவன் ஜென் குருவிடம் முதலீட்டாளர் ஒருவர் மதிப்பு முதலீடு முழுவதையும் கற்றுத் தேர்ந்தார் . பின் குருவிடம் பி...

பங்குச்சந்தை பதில்கள் - 6

பங்குச்சந்தை பதில்கள் - 6 கேள்வி : இப்போது தான் பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறேன் . ஆனால் சந்தை போக்குக் காட்டிய வண்ணம் இருக்கிறது ? பதில் : உங்களை அறிய ஒரு அரிய வாய்ப்பு . கேள்வி : சந்தை எப்போது சாதகம் ஆகும் ? பதில் : சந்தை எப்போது சாதகம் என்பதான காலக்கணிப்பில் ஈடுபடாமல் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்வதான காலப் பன்மயமாக்கத்தை மேற்கொள்ளுங்கள் .  கேள்வி : சந்தை சரிந்து கொண்டே வருகிறதே ? பதில் : ஆம் . ஆனால் ஒவ்வொரு விற்பவருக்கும் ஒவ்வொரு வாங்குபவர் இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள் .  கேள்வி : ஏற்கெனவே வாங்கிய பங்குகள் பங்கமாகி விட்டன . இந்த நிலையில் தொடர்ந்த வாக்கிலான முதலீட்டை எங்ஙனம் மேற்கொள்வது ? பதில் : ப ங்குகளின் விலை என்பது வேறு . பங்குகளின் ( உள்ளார்ந்த ) மதிப்பு என்பது வேறு . விலையில் கவனத்தைச் சிதற விடாமல் மதிப்பில் கவனத்தைக் குவியுங்கள் .  கேள்வி : எதற்கெடுத்தாலும் சந்தை ஏன் சரிய வேண்டும் ? பதில் : சந்தை ஒரே சீராக 45 டிகிரி என்ற பாகையில் பயணிப்பதால் கிடைக்கப்பெறும் வருமானத்தை விட இறங்கி பின் ஏறிச் சென்றால் கூடுதல் வருமானம் கிடைக்க ஏது...

அது நகர்கிறது . அது நகர்வதில்லை .

அது நகர்கிறது . அது நகர்வதில்லை . அது நகர்கிறது . அது நகர்வதில்லை . அது தூரத்தில் இருக்கிறது . அது அருகில் இருக்கிறது . அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது . அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது - உபநிஷதம் பங்குகளை முதலீடு செய்வதற்கான ஒரு வழிமுறையாக 6 அளவுருக்களைக் கொண்ட  பங்குச் சலிப்பான் ( stock screen ) குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம் . அவை 1 . முதல் நீர்க்காமை Nil equity dilution / Minimum equity dilution 2. கடன் இல்லாமை Nil debt / Low debt 3. தரமான வளர்ச்சி Quality growth 4. அகழி Moat 5. நிறுவனர் பங்கு Skin in the game 6. அறம் Corporate governance ஆனால் இந்த 6 அளவுருக்களையும் ஒரு மதம் மாதிரி பின்பற்ற வேண்டும் என்கிற மாதிரி எதுவும் கிடையாது . இன்னும் சொல்லப்போனால் முதலீட்டு உத்திகளில் நெகிழ்வான தன்மையுடன் (flexibility) இருப்பது இன்னும் உறுதித் தன்மைக்கு இட்டுச் செல்வதாக இருக்கும் . எந்தெந்த சந்தர்ப்பங்களில் இந்த அளவுருக்களை விட்டு விலகலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் . 1. முதல் நீர்க்காமை . முதல் நீர்க்காமை என்பது ஒரு முக்கியமான அளவுரு . அத...

வேதாளம் சொன்ன கதை - 2

வேதாளம் சொன்ன கதை - 2 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கி , " மன்னா ! ஏழ் கடல்களின் ஆழத்தைக் கூட அளந்து விடலாம் , ஆனால் பெண்களுடைய மனதின் ஆழம் அளவிட முடியாதது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் . எனக்கென்னவோ பெண்களின் மனதை விட மனிதர்களின் பேராசை தான் அளவிட முடியாத ஆழ்கடலாகத் தோன்றுகிறது . முன்பொரு சமயம் செயற்கைத் தங்க ஆபரணங்களை விற்கும் ஒரு வணிகர் நீண்ட நாட்களாக விலை போகாமல் இருந்த ஆபரணங்களைத் தள்ளுபடியாகப் பாதி விலையில் விற்பனை செய்யும் படிக்கு தன் வேலையாளைப் பணித்தார் . அவனுக்குக் காது கொஞ்சம் மந்தம் . ஆளும் கொஞ்சம் மந்தம் . அவன் அந்த ஆபரணங்களுக்கு இரட்டிப்பு விலையைப் பட்டையில் குறித்து வைத்தான் . மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த நகைகள் அன்று மாலைக்குள் விற்றுத் தீர்ந்தன . இந்த வேலையாளுக்காவது காது கேட்காது . காது கேளாதவன் மாதிரி நடித்த இன்னொருவனின் கதையையும் கூறுகிறேன் கே...

பங்குச்சந்தை பதில்கள் - 5

பங்குச்சந்தை பதில்கள் - 5 கேள்வி : Turn around நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா ? பதில் : Turn around நிறுவனங்கள் குறித்து வாரன் பஃபெட் சொன்னது : Turn around seldom turns . திருப்பங்கள் அரிதாகவே திரும்பும் . நான் இந்த குழம்பிய குட்டைகளில் மீன் பிடிப்பதில்லை . கேள்வி : பட்டியல் இலாபம் (Listing gain) பெறும் நிறுவனங்கள் IPO ஒதுக்கீட்டில் கிடைப்பதில்லை . கிடைக்கும் ஒன்றிரண்டு நிறுவனங்களும் பட்டியல் இலாபம் பெறுவதாக இல்லை ? பதில் : வாழ்க்கையில் இரண்டு விதமான சோகங்கள் உண்டு . ஒன்று , விரும்பியது விலகிப் போவது .  இன்னொன்று விரும்பியது மிக நெருங்கி வந்து விடுவது என்று ஒரு அறிஞர் கூறியிருக்கிறார் . கேள்வி : பங்குகளை எப்போது வாங்கலாம் ? எப்போது விற்கலாம் ? பதில் : கையில் பணம் இருக்கும் போது பங்குகளை வாங்கலாம் . பணம் தேவைப்படும் போது பங்குகளை விற்கலாம் . இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆசிர்வாதமான ஒரு புறக்கணிப்பை (Benign neglect) மேற்கொள்ளலாம் . கேள்வி : இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் எவரேனும் இருக்கிறார்களா ? பதில் : ஒரேயொருவர் இருக்கிறார் . படிப்பது மட்டுமின்றி அவருட...