Posts

அது நகர்கிறது . அது நகர்வதில்லை .

அது நகர்கிறது . அது நகர்வதில்லை . அது நகர்கிறது . அது நகர்வதில்லை . அது தூரத்தில் இருக்கிறது . அது அருகில் இருக்கிறது . அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது . அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது - உபநிஷதம் பங்குகளை முதலீடு செய்வதற்கான ஒரு வழிமுறையாக 6 அளவுருக்களைக் கொண்ட  பங்குச் சலிப்பான் ( stock screen ) குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம் . அவை 1 . முதல் நீர்க்காமை Nil equity dilution / Minimum equity dilution 2. கடன் இல்லாமை Nil debt / Low debt 3. தரமான வளர்ச்சி Quality growth 4. அகழி Moat 5. நிறுவனர் பங்கு Skin in the game 6. அறம் Corporate governance ஆனால் இந்த 6 அளவுருக்களையும் ஒரு மதம் மாதிரி பின்பற்ற வேண்டும் என்கிற மாதிரி எதுவும் கிடையாது . இன்னும் சொல்லப்போனால் முதலீட்டு உத்திகளில் நெகிழ்வான தன்மையுடன் (flexibility) இருப்பது இன்னும் உறுதித் தன்மைக்கு இட்டுச் செல்வதாக இருக்கும் . எந்தெந்த சந்தர்ப்பங்களில் இந்த அளவுருக்களை விட்டு விலகலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் . 1. முதல் நீர்க்காமை . முதல் நீர்க்காமை என்பது ஒரு முக்கியமான அளவுரு . அத...

வேதாளம் சொன்ன கதை - 2

வேதாளம் சொன்ன கதை - 2 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கி , " மன்னா ! ஏழ் கடல்களின் ஆழத்தைக் கூட அளந்து விடலாம் , ஆனால் பெண்களுடைய மனதின் ஆழம் அளவிட முடியாதது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் . எனக்கென்னவோ பெண்களின் மனதை விட மனிதர்களின் பேராசை தான் அளவிட முடியாத ஆழ்கடலாகத் தோன்றுகிறது . முன்பொரு சமயம் செயற்கைத் தங்க ஆபரணங்களை விற்கும் ஒரு வணிகர் நீண்ட நாட்களாக விலை போகாமல் இருந்த ஆபரணங்களைத் தள்ளுபடியாகப் பாதி விலையில் விற்பனை செய்யும் படிக்கு தன் வேலையாளைப் பணித்தார் . அவனுக்குக் காது கொஞ்சம் மந்தம் . ஆளும் கொஞ்சம் மந்தம் . அவன் அந்த ஆபரணங்களுக்கு இரட்டிப்பு விலையைப் பட்டையில் குறித்து வைத்தான் . மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த நகைகள் அன்று மாலைக்குள் விற்றுத் தீர்ந்தன . இந்த வேலையாளுக்காவது காது கேட்காது . காது கேளாதவன் மாதிரி நடித்த இன்னொருவனின் கதையையும் கூறுகிறேன் கே...

பங்குச்சந்தை பதில்கள் - 5

பங்குச்சந்தை பதில்கள் - 5 கேள்வி : Turn around நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா ? பதில் : Turn around நிறுவனங்கள் குறித்து வாரன் பஃபெட் சொன்னது : Turn around seldom turns . திருப்பங்கள் அரிதாகவே திரும்பும் . நான் இந்த குழம்பிய குட்டைகளில் மீன் பிடிப்பதில்லை . கேள்வி : பட்டியல் இலாபம் (Listing gain) பெறும் நிறுவனங்கள் IPO ஒதுக்கீட்டில் கிடைப்பதில்லை . கிடைக்கும் ஒன்றிரண்டு நிறுவனங்களும் பட்டியல் இலாபம் பெறுவதாக இல்லை ? பதில் : வாழ்க்கையில் இரண்டு விதமான சோகங்கள் உண்டு . ஒன்று , விரும்பியது விலகிப் போவது .  இன்னொன்று விரும்பியது மிக நெருங்கி வந்து விடுவது என்று ஒரு அறிஞர் கூறியிருக்கிறார் . கேள்வி : பங்குகளை எப்போது வாங்கலாம் ? எப்போது விற்கலாம் ? பதில் : கையில் பணம் இருக்கும் போது பங்குகளை வாங்கலாம் . பணம் தேவைப்படும் போது பங்குகளை விற்கலாம் . இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆசிர்வாதமான ஒரு புறக்கணிப்பை (Benign neglect) மேற்கொள்ளலாம் . கேள்வி : இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் எவரேனும் இருக்கிறார்களா ? பதில் : ஒரேயொருவர் இருக்கிறார் . படிப்பது மட்டுமின்றி அவருட...

ஆத்தும குணம் - 3

ஆத்தும குணம் - 3 (Basic Instinct - 3) ( முன் குறிப்பு :  இந்தப் பதிவைத் தனியாகப் படித்தாலும் புரியும் . ஆனால் இது ஆத்தும குணம் பதிவுகளின் மூன்றாவது மற்றும் கடைசிப் பகுதி . ஆத்தும குணம் - 1 ஆத்தும குணம் - 2 முதலிரண்டு பதிவுகளைப் படித்து விட்டு இதனைப் படித்தால் சுவை பெருகும் ) ராஜா ராமன் ஒரு பங்குச்சந்தை ஊக வணிகன் . அவன் பங்குச்சந்தையில் செய்யாத வணிகம் எதுவும் இல்லை . ஆனால் அவன் தான் செயலாக இல்லை . அவன் IPO வில் ஒதுக்கீடு பெற்று இரண்டு மடங்கு விற்ற பங்குகளெல்லாம் இப்போது நூறு மடங்கு என்ற அளவுகளில் வர்த்தமாகிக் கொண்டிருக்கின்றன . F & O வில் பத்து நிலைப்பாடுகளில் பெற்ற இலாபம் பதினோராவது நிலைப்பாட்டில் முற்றிலுமாகக் கரைந்து விடுகிறது . Short ல் அவ்வப்போது கிடைக்கப்பெறும் இலாபம் short squeeze ல் மறைந்து விடுகிறது . ராஜா ராமன்  Strangle மற்றும் Straddles என்று சிக்கலான F & O வகைகளையும் முயன்று பார்த்து விட்டான் . வாழ்க்கை சிக்கலானது தான் மிச்சம் . இவ்விதமான வர்த்தகங்களின் உராய்வுச் செலவுகளில் அவன் இழந்ததே இலட்சங்களில் இருக்கும் . இந்தச் சந்தை வணிகங்களில் தோற்றதை விடக் கடவு...

சூது கவ்வும்

சூது கவ்வும் Speculation Quotes 1. The best way to throw the dice is to throw them away . பகடைக் காய்களைச் சிறந்த முறையில் வீசி எறிவது என்பது அவற்றை வெளியே வீசி எறிவதாகும் .  2. The most difficult task in speculation is not prediction but self-control . Successful trading is difficult and frustrating . You are the most important element in the equation for success - Linda Raschke ஊக வணிகத்தில் கடினமான காரியம் முன் கணிப்பல்ல அது சுய கட்டுப்பாடு . வெற்றிகரமான வியாபாரம் என்பது கடினமானது மற்றும் விரக்தி விளைவிப்பது . வெற்றிக்கான இந்த சமன்பாட்டில் உங்கள் பங்கு மிக முக்கியமானதாகும் . 3. Speculation is only a word covering the making of money out of the manipulation of prices instead of supplying goods and services - Henry Ford ஊக வணிகம் என்பது பொருட்களையோ அல்லது சேவைகளையோ உருவாக்காது பணத்தை மட்டும் உருவாக்குவதாகும் . 4. Intuitive powers played a central role in my scientific work , not wild speculation - Einstein என்னுடைய விஞ்ஞான வேலைகளில் உள்ளுணர்வு ஒரு பிரதான இடத்தை வகிப்பதாக இருக்கிறத...

நம்பிக்கை , பொறுமை

 நம்பிக்கை , பொறுமை [ முன் குறிப்பு : பங்குச்சந்தை குறித்த பதிவில் கவிதைக்கு என்ன இடம் இருக்கப்போகிறது என்று தான் நேற்று வரை நினைத்திருந்தேன். பங்குச்சந்தையில் வெற்றி பெற உளப்பாங்கு (temperament) என்பது ஒரு மிக முக்கியமான மென் சொத்து (soft asset) என்று வாரன் பஃபெட் கூறுகிறார். அந்த வகையில் ஜான் பர்ரோஸ் எழுதிய கீழ்க்காணும் கவிதை பங்குச்சந்தையில் வெற்றி பெற உதவும் மிக முக்கியமான மனப்பாங்கு பற்றிக் கூறுகிறது ] காத்திருக்கிறேன் " நிதானத்துடன் கைகட்டிக் காத்திருக்கிறேன் காற்றுக்கோ , அலைக்கோ , கடலுக்கோ கவலைப்படாமல் . காலத்தையோ கர்ம வினையையோ குறை கூறுவதில்லை . ஏனெனில் எனக்குண்டானது எனக்குக் கிடைத்தே தீரும் . நான் அவசரப்படமாட்டேன் ,  தாமதம் செய்வேன் . இந்த பரபரப்பினால் என்ன பயன் ? நான் பரந்த வெளியினூடே நிற்கிறேன் . என்னுடையது என்னை அடையாளம் கண்டு கொள்ளும் . நித்திரையில் , விழிப்பில் , இரவு அல்லது பகலில் நான் தேடும் நண்பர்கள் என்னைத் தேடி வருகிறார்கள் . என் உடைமையை எந்தக் காற்றும் அடித்துக்கொண்டு போக முடியாது . விதியின் போக்கையும் மாற்றிவிட முடியாது .  நான் தனியனாக நிற்பதால் என்ன ...

பங்குச்சந்தை விதிகள்

பங்குச்சந்தை விதிகள் 1. பங்கு முதலீட்டுத் திட்டங்களைச் சிறிய வயதிலேயே தொடங்கி விட வேண்டும் . வாரன் பஃபெட் பதினோரு வயதிலேயே அவரது முதலீட்டுப் பயணத்தைத் தொடங்கி விட்டார் . முதலீட்டுச் சமன்பாட்டில் வட்டி விகிதம் கூடக்கூட வருமானம் கூடுவது மாதிரி ஆண்டுகள் கூடக்கூட வருமானமும் மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகும் . வாரன் பஃபெட் உலகின் முதலாம் நிலை முதலீட்டாளராக இருப்பதற்கான முழு முதற்காரணம் அவருடைய 80 ஆண்டு முதலீட்டுக் காலம் மட்டுமே . 2. கூட்டு வட்டியை விரைவு படுத்த முயலக்கூடாது . நிறைய முதலீட்டுத் தவறுகளுக்கான அடிப்படையான காரணம் முதலீட்டின் மூலமான வருமானத்தை விரைவு படுத்த முயல்வது தான் . வருமானத்தை விரைவு படுத்த முயல்வதன் காரணமாக 50 சதவீதத்தை இழந்தால் அந்த இழப்பை சமன் செய்ய 100 சதவீதம் சம்பாதிக்க வேண்டும் . மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கான முக்கியமான விதி என்னவென்றால் ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட உயரம் மட்டுமே ஏறவேண்டும் . வானிலை சாதகமாக இருந்தாலும் சரி அல்லது பாதகமாக இருந்தாலும் சரி இந்த உயரத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கூடாது . வானிலை சாதகமாக இருக்கிறது என்பதற்காகக் குறிப்பிட்ட உயரத்த...