உராய்வுச் செலவுகள்
உராய்வுச் செலவுகள் (Frictional Costs) ஒருவர் 10 இலட்சம் முதலீடு செய்து வியாபாரம் ஒன்றைச் செய்வதாகக் கொள்ளலாம் . அது எந்த வியாபாரமாக இருந்தாலும் சரி , அதற்கென்று சில தனிப்பட்ட உராய்வுச் செலவுகள் இருக்கும் . அது பொருளாக இருக்கும் பட்சத்தில் அதனை உங்கள் வியாபார ஸ்தலத்திற்கு கொண்டு வருவதற்கான செலவு மற்றும் அதனைக் கெடாமல் பாதுகாத்து வைப்பதற்கான செலவு போன்றவை உராய்வுச் செலவுகள் என்பதாக அழைக்கப்படுகிறது . ஒரு தேர்ந்த வியாபாரி என்ன செய்வார் ? கூடிய மட்டும் இந்த உராய்வுச் செலவுகளைக் குறைப்பதில் தான் அவருடைய முழு கவனமும் இருக்கும் . பங்குச் சந்தைக்கு வருவோம் . சிறுகச் சிறுக பங்குகளின் ஒரு தொகுப்பைக் கட்டுகிறீர்கள் . அந்த வியாபாரியைப் போல் உங்கள் முழு கவனமும் உராய்வுச் செலவுகளைக் குறைப்பதில் தான் குடி கொண்டிருக்க வேண்டும் . சரி , பங்குச்சந்தையைப் பொறுத்தவரை என்னென்ன உராய்வுச் செலவுகள் இருக்கின்றன என்று பார்க்கலாம் . முதலாவது மற்றும் முக்கியமானது தரகர் தரகு . நீங்கள் தின அடிப்படையில் பங்குகளை வாங்குவதும் விற்பதுமாக இருந்தால் தரகர் தரகு எகிறி விடும் . இரண்டாவதாக bid - ask spread . அதாவது பங்...