Posts

காலக்கணிப்பு மொழிகள்

காலக்கணிப்பு மொழிகள் Timing Quotes  1. If somebody tells you to get out of the market , before you do , remind them to tell you when to get back in - John Bogle  சந்தையை விட்டு யாராவது உங்களை வெளியேறச் சொன்னால் நீங்கள் வெளியேறுவதற்கு முன் திரும்ப எப்போது உள்ளே வரவேண்டும் என்று நினைவூட்டச் சொல்லுங்கள் . 2. What one buys in the stock market is much more important than when he buys it . பங்குச்சந்தையில் என்ன வாங்குகிறோம் என்பது , எப்போது வாங்குகிறோம் என்பதை விட முக்கியமானது . 3. The best time to invest was yesterday . The next best time is today . முதலீட்டிற்கான சிறந்த நேரம் நேற்றாக இருந்தது . அடுத்த சிறந்த நேரம் இன்று . 4. Avoiding downside can severely limit your upside . இறங்குமுகத்தைத் தவிர்ப்பது ஏறுமுகத்தைப் பாதிக்கும் . 5. Time in the market is more important than timing the market . சந்தையில் உள்ள காலம் , சந்தைக் காலக்கணிப்பை விட முக்கியமானது . 6. If you want to make money in the stock market , never be out of the stock market- Jim Jorgensen பங்குச்சந்தையில் நீங்கள் பணம் ப...

பெறுதிகள் ஏன் தேவை ?

பெறுதிகள் (Derivatives) ஏன் தேவை ? நண்பர் ஒருவரின் கேள்வி . Call option மற்றும் Put option போன்ற பெறுதிகள் (derivatives) கொத்துக் கொத்தாகக் கொல்லும் ஆயுதங்கள் (weapons of mass destruction) என்று பஃபெட் கூறுகிறார் . சமீபத்திய Sebi ஆய்வறிக்கை ஒன்று  பத்துக்கு ஒன்பது பெறுதி (F&O) வர்த்தகர்கள் நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர் என்று கூறுகிறது . எனில் அரசாங்கம் அவைகளைத் தடை செய்தால் என்ன ? நியாயமான கேள்வி . ஆனால் பெறுதிகளுக்கு ஒரு நியாயம் இருக்கிறது .  நீங்கள் பத்து இலட்சம் பெறுமானமுள்ள ஒரு பங்குத் தொகுப்பை (portfolio) வைத்திருப்பதாகக் கொள்ளலாம் . பங்குச்சந்தை உயர் அளவிலான PE க்களில் வர்த்தமாவதாகவும் கொள்ளலாம் . குறுகிய கால அளவில் பங்குச்சந்தைப் புள்ளிகள் குறையும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் . இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்கள் பங்குத் தொகுப்பின் மதிப்பைக் காக்கும் பொருட்டு put option எடுத்துக் கொள்ளலாம் . இது பொதுவாக short என்பதாக அழைக்கப்படுகிறது . இன்னொரு சூழ்நிலை . பங்குச்சந்தை தரை தட்டி விட்டது . இனி கீழே செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு . மேலே செல்வதற்கான வாய்ப்புகள் அதி...

பயணமே பரிசு

பயணமே பரிசு  1. Some beautiful paths can't be discovered without getting lost - Erol Ozan தொலைந்து போகாமல் சில அழகான பாதைகளை நம்மால் கண்டுணர முடியாது . 2. Does the walker choose the path or the path choose the walker ? - Garth Nix நடப்பவர் பாதையைத் தேர்ந்தெடுக்கிறாரா அல்லது பாதை நடப்பவரைத் தேர்ந்தெடுக்கிறதா ? 3. A path is made by walking on it . நடப்பதன் மூலம் ஒரு பாதை உருவாகிறது . 4. The only impossible journey is the one you never begin - Tony Robbins உங்களால் ஒருபோதும் தொடங்கப்படாத பயணம் மட்டுமே சாத்தியமற்றது . 5. I know I'm on the right path because things stopped being easy .  நான் சரியான பாதையில் செல்கிறேன் என்று எனக்குத் தெரியும் , ஏனென்றால் விஷயங்கள் எளிதாக இருப்பது நின்று விட்டது . 6. Don't expect everyone to understand your journey , especially if they've never had to walk your path . உங்கள் பயணத்தை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள் , குறிப்பாக அவர்கள் உங்கள் பாதையில் ஒருபோதும் நடக்கவில்லையென்றால் அவர்களால் அதனைப் புரிந்து கொள்ளவே முடியாத...

பங்குச்சந்தை பதில்கள் - 10

பங்குச்சந்தை பதில்கள் - 10 கேள்வி : தேர்தல் முடிவுகள் சந்தைக்குச் சாதகமாக இல்லை . கூட்டாட்சி சரிப்பட்டு வருமா ? சந்தை இனி என்னவாகும் ? பதில் : 1977 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள் ... வாரன் பஃபெட்டின் வார்த்தைகளில் ... நீண்ட மற்றும் விலை அதிகமான வியட்நாம் யுத்தம் , சம்பளம் மற்றும் விலை கட்டுப்பாடுகள் , எண்ணைய் அதிர்ச்சிகள் , ஜனாதிபதி ஒருவரின் இராஜினாமா , சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் சந்தையின் பெரிய அளவிலான தின நகர்வுகள் ... இவ்வளவின் பின்னரும் அமெரிக்கப் பங்குச்சந்தை அதன் வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்தது ... Dow Jones குறியீடு 894.37 புள்ளியிலிருந்து 15009.52 புள்ளி என்ற அளவை எட்டியது . கேள்வி : ஊர் பேர் தெரியாத நிறுவனங்கள் எல்லாம் இலவசப் பங்கு வெளியீட்டையும் பங்குப் பிரிப்பையும் மேற்கொள்கின்றனவே ? பதில் : வாங்குபவர் கவனம் ! சமீபத்தில் இலவசப்பங்குகளை வழங்கிய இத்தகைய நிறுவனங்களிடம் பொதுவாக ஒரு தன்மை காணப்படுகிறது . இந்த நிறுவனங்களிடம் இருப்பு மற்றும் உபரிப்பணம் ஒரு மடங்கு கூட இல்லை . எதற்காக இலவசப்பங்கு ? பங்கின் விலை இரட்டை இலக்...

சுரங்கப் பார்வை

சுரங்கப் பார்வை Tunnel Vision சுரங்கப் பார்வை என்பது உங்கள் கண் முன்னால் தெரிவதை மட்டும் பார்ப்பது . Peripheral Vision என்று அழைக்கப்படும் அதற்கு மேலே , கீழே மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்சிகள் உங்கள் கண்களுக்குப் புலனாகாது . முன்னொரு காலத்தில் பூமி இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்பதான ஒரு பார்வை தான் இருந்தது . அப்புறம் சூரியன் தான் மையம் என்றும் பூமி உள்ளிட்ட கிரகங்கள் அதனைச் சுற்றி வருவதான ஒரு பார்வை . இப்போது milky way என்பதாக அழைக்கப்படும் நமது பால்வீதியில் (Galaxy) மட்டும் 200 பில்லியன் (200 வுடன் 9 பூஜ்யங்களைப் பெருக்கிக் கொள்ளவும்) ஏன் அதற்கும் மேலான சூரியனை ஒத்த நட்சத்திரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள் . அதே மாதிரி நம்முடைய பால்வீதியைப் போல் இரண்டு டிரில்லியன் (2 போட்டு 12 பூஜ்யங்கள்) ஏன் அதற்கும் மேலான வீதிகள் இருப்பதாக ஒரு கணக்கு . ஆக , இந்தப் பூமி பிரபஞ்சத்தின் மையம் இல்லை . இன்னும் சொல்லப்போனால் பிரபஞ்சத்திற்கு மையம் என்பதே கிடையாது . ஒரு மிகப்பெரிய மைதானத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் . உங்கள் கண்ணிற்கெட்டிய தூரம் வரை மைதானம் தான் . அப்போது நீங்கள் எங்கே நின...

ஜென் கதைகள் - 4

ஜென் கதைகள் - 4 1 . செய்முறை வர்த்தகம் . Algo trading என்பதான செய்முறை வர்த்தகம் குறித்து விளக்கமாகக் கூறுமாறு பங்குக் குருவிடம் சிஷ்யர்கள் கேட்டுக் கொண்டனர் . செய்முறை வர்த்தகம் என்பது கணிணி நிரல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வர்த்தக முறையாகும் . எந்த ஒரு வர்த்தக முறையும் மனித சிந்தனைக்கு மாற்றாக இருக்குமானால் அது அறவே ஒதுக்கப்பட வேண்டியதும் களையப்பட வேண்டியதுமாகும் . ஒரு முறை பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண்மணி ஒருவர் ஒரு கிலோ ரவை வாங்கினார் . அங்கிருந்த விற்பனையாளர் எலிப் பாஷாணம் ஒன்றை வாங்குமாறு வலியுறுத்தினார் . பிரச்னை , மேலாளர் வரை சென்றது . மேலாளர் , 100 கிலோ ரவை விற்றால் ஒரு எலிப் பாஷாணம் விற்கும் என்பது நிறுவன கணிணி நிரலின் கணக்கு . எங்கள் பதிவேட்டின் படி நீங்கள் வாங்கிய ஒரு கிலோவுடன் ரவை நூறு கிலோ என்ற கணக்கை எட்டி விட்டது . நீங்கள் எலிப் பாஷாணத்தை வாங்கியே தீர வேண்டும் என்று கூறினார் . மேலும் எங்கள் கணிணி நிரல் பொய் சொல்லாது என்றும் கூறிக் கொண்டார் . சிறு வயதில் நகர்ந்து செல்லும் மேகக் கூட்டங்களில் விதம் விதமான உருவங்களைப் பார்த்து விளையாடும் விளையாட்டை பெரியவர்கள் ஆன பின்ன...

தலைகீழ் விகிதங்கள் - 3

தலைகீழ் விகிதங்கள் - 3 (i) 140 < 10 (ii) 1 + 29 = 40 (iii) 2 - 1 = 2 (iv) 2 - 1 = 0 மேலே உள்ள சமன்பாடுகள் இடுகைப் பிழைகள் இல்லை . பங்குச்சந்தையில் தினசரி நாம் இத்தகைய கணக்குகளை எதிர் கொள்ளலாம் . ஒவ்வொரு கணக்கையும் உதாரணம் ஒன்றுடன் பார்க்கலாம் . (i) 140 < 10 Infosys பங்கு ஒன்றின் விலை 2008 ஆம் ஆண்டில் 140 ரூபாய் என்ற விலையில் (இலவசப்பங்கு மற்றும் பங்குப்பிரிப்பைக் கணக்கில் கொண்டது) வர்த்தகமானது . இதே 2008 ஆம் ஆண்டு Avon Corporation விரிவாக்கத்தின் பொருட்டு நிதி திரட்ட பங்குச்சந்தைக்கு வந்தது . முதல் பொது வெளியீட்டில் 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கு , முக மதிப்பு விலையிலேயே வெளியிடப்பட்டது . பத்து Infosys பங்குகளை வாங்குவதற்குப் பதிலாக Avon நிறுவனத்தின் 140 பங்குகளை வாங்கி விடலாம் . நிறுவனம் ஒரேயொரு ரூபாய் பங்காதாயம் வழங்கினால் 140 பங்குகளுக்கு 140 ரூபாய் கிடைக்கும் . பங்குகளை இவ்வாறு முக மதிப்பில் வாங்கினால் பங்காதாயமும் பங்கு ஈட்டு விகிதமும் சமம் . 2024 ஆம் ஆண்டுக்கு வாருங்கள் . Infosys பங்கு தற்போது 1420 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது . 2008 ஆம் ஆண்டு வாங்கிய 10 Infosys பங்குகள் ...