காலக்கணிப்பு மொழிகள்
காலக்கணிப்பு மொழிகள்
Timing Quotes
1. If somebody tells you to get out of the market , before you do , remind them to tell you when to get back in - John Bogle
சந்தையை விட்டு யாராவது உங்களை வெளியேறச் சொன்னால் நீங்கள் வெளியேறுவதற்கு முன் திரும்ப எப்போது உள்ளே வரவேண்டும் என்று நினைவூட்டச் சொல்லுங்கள் .
2. What one buys in the stock market is much more important than when he buys it .
பங்குச்சந்தையில் என்ன வாங்குகிறோம் என்பது , எப்போது வாங்குகிறோம் என்பதை விட முக்கியமானது .
3. The best time to invest was yesterday . The next best time is today .
முதலீட்டிற்கான சிறந்த நேரம் நேற்றாக இருந்தது . அடுத்த சிறந்த நேரம் இன்று .
4. Avoiding downside can severely limit your upside .
இறங்குமுகத்தைத் தவிர்ப்பது ஏறுமுகத்தைப் பாதிக்கும் .
5. Time in the market is more important than timing the market .
சந்தையில் உள்ள காலம் , சந்தைக் காலக்கணிப்பை விட முக்கியமானது .
6. If you want to make money in the stock market , never be out of the stock market- Jim Jorgensen
பங்குச்சந்தையில் நீங்கள் பணம் பண்ண வேண்டுமென்றால் பங்குச்சந்தையை விட்டு வெளியில் இருக்காதீர்கள் .
7. The best time to buy is when you have money . The best time to sell when you need the money .
பணம் இருக்கும் நேரமே பங்குகளை வாங்க வேண்டிய தருணமாகும் . பணம் தேவைப்படும் நேரமே பங்குகளை விற்க வேண்டிய தருணமாகும் .
8. Far more money has been lost by investors trying to anticipate corrections , than lost in the corrections themselves - Peter Lynch
முதலீட்டாளர்களின் சந்தைத் திருத்தங்களை எதிர்நோக்கிய செயல்பாடுகள் சந்தைத் திருத்தங்களை விட அதிக நஷ்டத்திற்கு அவர்களை ஆளாக்குகின்றன .
9. The idea that a bell rings to signal when to get into or out of the stock market is simply not credible . After nearly fifty years in this business , I don’t know anybody who has done it successfully and consistently . I don’t even know anybody who knows anybody who has done it successfully and consistently - John Bogle
சந்தைக்குள் எப்போது வரவேண்டும் எப்போது வெளியேற வேண்டும் என்று யாராவது மணி அடித்து ஒலி எழுப்புவார்கள் என்ற கருத்து ஏற்கத்தக்கதாக எப்போதும் இருக்க முடியாது . என் ஐம்பது வருட வியாபார அனுபவத்தில் இம்மாதிரி சரியாகவும் தொடர்ந்தும் எச்சரித்த யாரையும் எனக்குத் தெரியாது . இம்மாதிரி சரியாகவும் தொடர்ச்சியாகவும் எச்சரித்த யாரையும் அறிந்த யாரையும் எனக்குத் தெரியாது .
10. Though tempting , trying to time the market is a loser’s game . $10,000 continuously invested in the market over the past 20 years grew to $63,636 . If you missed just the best 30 days , your investment was reduced to $11,484 - Christopher Davis
கவர்ச்சியூட்டுவதாக இருந்தாலும் சந்தையைக் காலக்கணிப்புக்கு உட்படுத்துவது தோல்வியாளர்களின் ஒரு விளையாட்டாகும் . 10000 டாலர்களைத் தொடர்ந்து சந்தையில் வைத்திருந்தால் 20 ஆண்டுகளில் அது 63636 டாலர்களாக வளர்ந்திருக்கும் . ஆனால் சந்தையின் 30 சிறந்த நாட்களைத் தவற விட்டால் அது 11484 டாலர்களாகக் குறைந்து விடும் .
Comments
Post a Comment