Posts

முதுமை மொழிகள்

முதுமை மொழிகள் Old Age Quotes 1 . Wrinkles should merely indicate where smiles have been - Mark Twain முகத்தின் சுருக்கங்கள் முன்னர் புன்னகை எங்கிருந்தது என்பதைக் குறிப்பிடும் அடையாளம் மட்டுமே . 2 . We don't grow older . We grow riper - Picasso நாம் வளர்ந்து முதிர்வதில்லை . நாம் வளர்ந்து கனிகிறோம் . 3 . Youth is the gift of nature but age is a work of art - Stanislaw Jersey Lec இளமை என்பது இயற்கையின் பரிசு . ஆனால் முதுமை என்பது கலையின் வேலைப்பாடு . 4 . The young man knows the rules and the old man knows the exceptions . இளையோர் விதிகளை அறிந்தவராயிருப்பர் . ஆனால் முதியோர் விதிவிலக்குகளை அறிந்திருப்பர் . 5 . Life's tragedy is that we get old soon and wise too late - Benjamin Franklin வாழ்க்கையின் சோகம் என்னவென்றால் நாம் சீக்கிரம் முதுமையடைந்து விடுகிறோம் . ஆனால் ஞானத்தைத் தாமதமாகவே அடைகிறோம் . 6 . Old age needs so little but needs that little so much - Margaret Wilour முதுமைக்கான தேவைகள் குறைவாகவே உள்ளன . இந்தக் குறைவான தேவைகளை முதுமை நிறைய எதிர்பார்க்கிறது . 7 . In...

நியாயமற்ற பிரபஞ்சம்

நியாயமற்ற பிரபஞ்சம் Unfair Universe How to get lucky புத்தகத்தில் Max Gunther அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கான 13 உத்திகளைப் பட்டியலிடுகிறார் . அதில் ஒரு உத்தியான நியாயமற்ற பிரபஞ்சத்தை ஏற்றுக் கொள்ளுதலின் (Accepting an Unfair Universe) மிகச் சுருக்கமான மொழிபெயர்ப்பு ...                *               *              * Rabbi Harold Kushner பொதுவாக ஒரு நல்ல மனிதர் . எல்லோரையும் போல சின்னஞ்சிறிய தவறுகளைச் செய்திருக்கிறார் என்றாலும் அவர் மாபெரும் தண்டனையைப் பெறுவதற்கான முகாந்திரம் எதுவுமில்லை . ஆனால் அவருடைய மகனுக்கு பிரபஞ்சம் ஆகப்பெரிய தண்டனை ஒன்றை வழங்குகிறது . அவருடைய மகன் மூன்று வயதில் Progeria என்று சொல்லப்படும் அதிவிரைவாக முதுமையடையும் நோயினால் பாதிக்கப்படுகிறான் . அந்த நோய்க்கு மருந்துகள் ஏதுமில்லை . அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று அடிக்கு மேல் வளர மாட்டார்கள் . முடி எதுவும் அவர்களுக...

சார்லி முஞ்சர் - மணி மொழிகள்

சார்லி முஞ்சர் - மணி மொழிகள் Charlie Munger Quotes 1. Almost all good businesses engage in pain today and gain tomorrow activities . ஏறக்குறைய எல்லா வியாபாரங்களும் இன்றைய நோவு மற்றும் நாளைய ஈவு நடவடிக்கைகளே . 2. All Intelligent investing is value investing - acquiring more than you are paying for . எல்லா புத்திசாலித்தனமான முதலீடுகளும் மதிப்பு முதலீடுகளே - நீங்கள் கொடுப்பதை விட அதிகம் பெறுவது . 3. People calculate too much and think too little ‌ . மனிதர்கள் மிக அதிகமாகக் கணக்கிடுகிறார்கள் . மிகக் குறைவாகச் சிந்திக்கிறார்கள் . 4. There's only one way to the top : Hard work . உச்சத்தை அடைய ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது . அது , கடின உழைப்பு . 5. The big money is not in the buying and selling . But in the waiting . பெரும் பணம் , வாங்குவதில் மற்றும் விற்பதில் இல்லை . அது காத்திருத்தலில் இருக்கிறது . 6. Always take the high road , it's far less crowded . நீண்ட நெடிய பாதையிலேயே எப்போதும் செல்லுங்கள் . அங்கு தான் கூட்டம் குறைவாக இருக்கும் . 7. Those who keep learning , will keep rising in ...

அதி நம்பிக்கை சாய்வு

அதி நம்பிக்கை சாய்வு Over Confidence Bias நம்மைக் குறித்த நம்பிக்கை நமக்குக் கட்டாயம் இருக்க வேண்டும் . ஆனால் அது அதி நம்பிக்கையாக இருக்கக் கூடாது . மற்ற இடங்களை விட பங்குச்சந்தையில் அதி நம்பிக்கைக்கு நாம் கொடுக்கக்கூடிய விலை மிகவும் அதிகம் . நம்முடைய திறமைகள் எதுவாக இருந்தாலும் பொதுவாக அதனை நாம் மிகை மதிப்பீடு செய்பவர்களாகவே இருக்கிறோம் . பரஸ்பர நிதி மேலாளர்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது . 74 சதவீதம் பேர் தாங்கள் சராசரிக்கும் மேல் என்பதாகவும் 26 சதவீதம் பேர் தாங்கள் சராசரி என்பதாகவும் பதில்  அளித்தார்கள் . உண்மை என்னவென்றால் பெரும்பாலான பரஸ்பர நிதிகள் பங்குச்சந்தை குறியீடுகளைக் கூட வெற்றி கொள்வதில்லை . சரி , அதை விடுங்கள் . யார் யாரெல்லாம் சொர்க்கத்திற்குப் போவார்கள் என்பதான ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது . ஹிட்லர் 10 சதவீதம் , பில் கிளிண்டன் 40 சதவீதம் , அன்னை தெரசா 60 சதவீதம் ... 80 சதவீதம் யார் தெரியுமா ? கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தங்களைத் தாங்களே தேர்வு செய்து கொண்டனர் . இது எப்படி இருக்கு ? பங்குச்சந்தை தினசரி மற்றும் குறுகிய கால அளவில் சீரற்...

Marcel Proust - மணி மொழிகள்

Marcel Proust - மணி மொழிகள் Marcel Proust Quotes 1. Love is space and time measured by the heart . இடமும் நேரமும் இதயத்தால் அளக்கப்படுவதே காதல் . 2. Remembrance of things past is not necessarily the remembrance of things as they were .  கடந்த காலத்தின் ஞாபகங்கள் , கடந்த காலத்தில் இருந்ததைப் போன்றே இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை . 3. Happiness is beneficial for the body , but in grief that develops the power of the mind . இன்பம் என்பது உடலுக்கு உபயோகமாக இருக்கலாம் . ஆனால் துன்பமே மனதை வலுவாக்குகிறது .  4. Let us leave pretty women to men with no imagination . அழகான பெண்களை கற்பனை வறட்சி கொண்டவர்களுக்கு விட்டு விடுவோம் . 5. My destination is no longer a place , rather a new way of seeing . நான் போக வேண்டியது ஒரு புதிய இடத்திற்கு அல்ல . மாறாக , புதிய முறையில் பார்ப்பது .  6. It is our imagination that is responsible for love not the other person .  யார் மீதும் நாம் காதல் கொள்வதில்லை . அவர்களைக் குறித்த நம் கற்பனையே அவர் மீதான காதலுக்கு வழி வகுக்கிறது . ...

சமிக்ஞைகளும் சத்தங்களும்

சமிக்ஞைகளும் சத்தங்களும் Signal Vs Noise பங்குகளின் 52 வாரக் குறைந்த பட்ச விலைக்கும் 52 வார அதிக பட்ச விலைக்கும் ஏன் இத்தனை மாறுபாடு ? எது அதன் உண்மையான விலை ? அல்லது அதன் உண்மையான மதிப்பு ? பங்குச்சந்தை ஒரு சிக்கலான தகவமைப்பு அமைப்பு (complex adaptive system) இதற்கு முதன்மையான காரணம் மனித உணர்ச்சிகள் முதலீடுகளுடன் முட்டி மோதுவது தான் . எலக்ட்ரான்களுக்கு உணர்ச்சிகள் இருந்தால் இயற்பியல் எவ்வளவு கடினமாக இருக்கும் என்று சற்றே யோசித்துப் பாருங்கள் என்பதாக அறிவியல் அறிஞர் ஒருவர் கூறியிருப்பது பங்குச் சந்தைக்கு மிகவும் பொருந்துவதாக இருக்கிறது . இத்தகைய சூழ்நிலையில் நமது கவனத்தை எதில் நிலை நிறுத்துவது ? பங்குகளின் விலையிலா ? அல்லது அதன் மதிப்பிலா ? விலையில் கவனத்தைக் குவித்தால் இலக்கு விலை என்ற மாயமானைத் துரத்தி நம் இலக்கைத் தவற விட்டு விடுவோம் . மதிப்பு என்பதும் ஒரு நகரும் இலக்கு . நிறுவனப் பங்கு ஒன்று அதன் முழு மதிப்பை எட்டி விட்டது அல்லது அதன் மதிப்பிற்கும் மேலாக வர்த்தகமாகிறது என்று அதன் பங்குகளை விற்று விட்டு பின்னர் அது அதனது மதிப்பிற்குக் கீழாக வர்த்தகமாகிறது என்று வாங்க முனைவதையும...

கதைக்கரு சொன்ன மற்றுமொரு கதை

கதைக்குரு சொன்ன மற்றுமொரு கதை ஒரு கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிந்த வண்ணம் இருந்தன . அவைகளின் சேட்டைகளுக்கு அளவேயில்லை . போவோர் வருவோரை மிரட்டி உணவைப் பறித்துச் செல்வது , வீட்டுக்குள் புகுந்து குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து கோககோலாவை எடுத்துக் குடிப்பது என்று அவைகளின் அழிம்புகள் தாங்கவியலாததாக இருந்தது . இந்த நிலையில் அந்தக் கிராமத்திற்குக் குரங்கு வியாபாரி ஒருவன் வருகை தந்திருந்தான் . குரங்கு ஒன்றுக்கு 500 ரூபாய் தருவதாகப் பேச்சு . அந்தக் கிராமத்தின் படித்த இளைஞர்கள் சிலர் உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic value) கணக்கீட்டைப் போட்டுப் பார்த்து , குரங்கு ஒன்றுக்கு ஏன் 500 ரூபாய் தருகிறீர்கள் என்று அந்த வியாபாரியிடம் வினவினர். அவன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அந்தக் குரங்குகளை இலாபம் வைத்து விற்று விடத் தீர்மானித்திருப்பதாகக் கூறிக் கொண்டான் . கிராமத்து ஜனங்கள் குரங்குகளைப் பிடித்து வியாபாரியிடம் கொடுத்து 500 ரூபாய் பெற்று டாஸ்மாக் சென்று குடியும் கும்மாளமுமாக இருந்தார்கள் . ஒரு கட்டத்தில் கிராமத்தில் பிடிப்பதற்குக் குரங்குகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டது . இந்த நிலை...