Marcel Proust - மணி மொழிகள்

Marcel Proust - மணி மொழிகள்

Marcel Proust Quotes


1. Love is space and time measured by the heart .

இடமும் நேரமும் இதயத்தால் அளக்கப்படுவதே காதல் .


2. Remembrance of things past is not necessarily the remembrance of things as they were . 

கடந்த காலத்தின் ஞாபகங்கள் , கடந்த காலத்தில் இருந்ததைப் போன்றே இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை .


3. Happiness is beneficial for the body , but in grief that develops the power of the mind .

இன்பம் என்பது உடலுக்கு உபயோகமாக இருக்கலாம் . ஆனால் துன்பமே மனதை வலுவாக்குகிறது . 


4. Let us leave pretty women to men with no imagination .

அழகான பெண்களை கற்பனை வறட்சி கொண்டவர்களுக்கு விட்டு விடுவோம் .


5. My destination is no longer a place , rather a new way of seeing .

நான் போக வேண்டியது ஒரு புதிய இடத்திற்கு அல்ல . மாறாக , புதிய முறையில் பார்ப்பது . 


6. It is our imagination that is responsible for love not the other person . 

யார் மீதும் நாம் காதல் கொள்வதில்லை . அவர்களைக் குறித்த நம் கற்பனையே அவர் மீதான காதலுக்கு வழி வகுக்கிறது . 


7. The charms of a passing woman are usually in direct relation to the speed of her passing .

கடந்து செல்லும் ஒரு பெண்ணின் வசீகரம் அவள் உங்களை எவ்வளவு விரைவாகக் கடந்து செல்கிறாள் என்பதில் இருக்கிறது . 


8. We are healed of a suffering only by experiencing it to the full . 

துன்பத்தை முழுவதும் அனுபவிப்பதன் மூலமாகவே நாம் துன்பத்திலிருந்து மீள்கிறோம் . 


9. A little dreaming is dangerous, the cure for it is not to dream less, but to dream more, to dream all the time.

கொஞ்சமாகக் கனவு காண்பது ஆபத்தானதாகும் . இதற்கான தீர்வு கனவு காணாமல் இருப்பதல்ல . மாறாக , அதிகமாகக் கனவு காண்பது , எந்நேரமும் கனவு காண்பது .


10. The true paradises are the paradises that we have lost . 

இழந்த சொர்க்கமே உண்மையான சொர்க்கம் . 

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14