Posts

Marcel Proust - மணி மொழிகள்

Marcel Proust - மணி மொழிகள் Marcel Proust Quotes 1. Love is space and time measured by the heart . இடமும் நேரமும் இதயத்தால் அளக்கப்படுவதே காதல் . 2. Remembrance of things past is not necessarily the remembrance of things as they were .  கடந்த காலத்தின் ஞாபகங்கள் , கடந்த காலத்தில் இருந்ததைப் போன்றே இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை . 3. Happiness is beneficial for the body , but in grief that develops the power of the mind . இன்பம் என்பது உடலுக்கு உபயோகமாக இருக்கலாம் . ஆனால் துன்பமே மனதை வலுவாக்குகிறது .  4. Let us leave pretty women to men with no imagination . அழகான பெண்களை கற்பனை வறட்சி கொண்டவர்களுக்கு விட்டு விடுவோம் . 5. My destination is no longer a place , rather a new way of seeing . நான் போக வேண்டியது ஒரு புதிய இடத்திற்கு அல்ல . மாறாக , புதிய முறையில் பார்ப்பது .  6. It is our imagination that is responsible for love not the other person .  யார் மீதும் நாம் காதல் கொள்வதில்லை . அவர்களைக் குறித்த நம் கற்பனையே அவர் மீதான காதலுக்கு வழி வகுக்கிறது . ...

சமிக்ஞைகளும் சத்தங்களும்

சமிக்ஞைகளும் சத்தங்களும் Signal Vs Noise பங்குகளின் 52 வாரக் குறைந்த பட்ச விலைக்கும் 52 வார அதிக பட்ச விலைக்கும் ஏன் இத்தனை மாறுபாடு ? எது அதன் உண்மையான விலை ? அல்லது அதன் உண்மையான மதிப்பு ? பங்குச்சந்தை ஒரு சிக்கலான தகவமைப்பு அமைப்பு (complex adaptive system) இதற்கு முதன்மையான காரணம் மனித உணர்ச்சிகள் முதலீடுகளுடன் முட்டி மோதுவது தான் . எலக்ட்ரான்களுக்கு உணர்ச்சிகள் இருந்தால் இயற்பியல் எவ்வளவு கடினமாக இருக்கும் என்று சற்றே யோசித்துப் பாருங்கள் என்பதாக அறிவியல் அறிஞர் ஒருவர் கூறியிருப்பது பங்குச் சந்தைக்கு மிகவும் பொருந்துவதாக இருக்கிறது . இத்தகைய சூழ்நிலையில் நமது கவனத்தை எதில் நிலை நிறுத்துவது ? பங்குகளின் விலையிலா ? அல்லது அதன் மதிப்பிலா ? விலையில் கவனத்தைக் குவித்தால் இலக்கு விலை என்ற மாயமானைத் துரத்தி நம் இலக்கைத் தவற விட்டு விடுவோம் . மதிப்பு என்பதும் ஒரு நகரும் இலக்கு . நிறுவனப் பங்கு ஒன்று அதன் முழு மதிப்பை எட்டி விட்டது அல்லது அதன் மதிப்பிற்கும் மேலாக வர்த்தகமாகிறது என்று அதன் பங்குகளை விற்று விட்டு பின்னர் அது அதனது மதிப்பிற்குக் கீழாக வர்த்தகமாகிறது என்று வாங்க முனைவதையும...

கதைக்கரு சொன்ன மற்றுமொரு கதை

கதைக்குரு சொன்ன மற்றுமொரு கதை ஒரு கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிந்த வண்ணம் இருந்தன . அவைகளின் சேட்டைகளுக்கு அளவேயில்லை . போவோர் வருவோரை மிரட்டி உணவைப் பறித்துச் செல்வது , வீட்டுக்குள் புகுந்து குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து கோககோலாவை எடுத்துக் குடிப்பது என்று அவைகளின் அழிம்புகள் தாங்கவியலாததாக இருந்தது . இந்த நிலையில் அந்தக் கிராமத்திற்குக் குரங்கு வியாபாரி ஒருவன் வருகை தந்திருந்தான் . குரங்கு ஒன்றுக்கு 500 ரூபாய் தருவதாகப் பேச்சு . அந்தக் கிராமத்தின் படித்த இளைஞர்கள் சிலர் உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic value) கணக்கீட்டைப் போட்டுப் பார்த்து , குரங்கு ஒன்றுக்கு ஏன் 500 ரூபாய் தருகிறீர்கள் என்று அந்த வியாபாரியிடம் வினவினர். அவன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அந்தக் குரங்குகளை இலாபம் வைத்து விற்று விடத் தீர்மானித்திருப்பதாகக் கூறிக் கொண்டான் . கிராமத்து ஜனங்கள் குரங்குகளைப் பிடித்து வியாபாரியிடம் கொடுத்து 500 ரூபாய் பெற்று டாஸ்மாக் சென்று குடியும் கும்மாளமுமாக இருந்தார்கள் . ஒரு கட்டத்தில் கிராமத்தில் பிடிப்பதற்குக் குரங்குகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டது . இந்த நிலை...

இலவசப்பங்குகளை ஏன் விற்கக்கூடாது ?

இலவசப்பங்குகளை ஏன் விற்கக்கூடாது ? ஒரு நிறுவனம் அவ்வப்போது இலவசப்பங்குகளை அளிக்கிறது . இலவசப்பங்குகளை மட்டும் விற்று விட்டு நாம் முதலில் வாங்கிய பங்குகளை மட்டும் வைத்திருப்பது சரி தானே ? So, we can eat the cake and have it ... ஒரேயொரு சின்னப் பிரச்னை இருக்கிறது . மும்பை பங்குச்சந்தையில் மட்டும் வர்த்தகமாகும் Anuh Pharma (BSE Code : 506260) நிறுவனப் பங்கை உதாரணமாகக் கொண்டு உங்கள் கேள்விக்கான பதிலைப் பெறலாம் . Anuh Pharma நிறுவனத்தின் இலவசப்பங்குப் பட்டியல் : 1994 - 3:1 1999 - 1:1 2006 - 1:1 2010 - 2:1 2015 - 2:1 2020 - 1:1 1993 ஆம் ஆண்டு 100 பங்குகளை வாங்கி இன்றளவும் வைத்திருப்பவரிடம்  வருட வாரியாக எத்தனை இலவசப்பங்குகள் சேர்ந்திருக்கும் என்பதற்கான பட்டியல் : 1994 - 400 பங்குகள் 1999 - 800 2006 - 1600 2010 - 4800 2015 - 14400 2020 - 28800 இந்தப் பட்டியலில் நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது 1999 ல் நிறுவனம் வழங்கிய 1:1 இலவசப்பங்குகளின் எண்ணிக்கையும் 2020 ல் வழங்கிய 1:1 இலவசப்பங்குகளின் எண்ணிக்கையும் ஒன்றல்ல . 1999 ல் 1:1 இலவச விகிதம் 400 பங்குகளை வழங்கியிருக்கிறத...

Naval Ravikant - மணி மொழிகள்

Naval Ravikant - மணி மொழிகள் Naval Ravikant Quotes 1. A fit body , a calm mind , a house full of love . These things cannot be bought - they must be earned . ஆரோக்கியமான தேகம் , அமைதியான மனம் , அன்பான இல்லம் . இவைகளை உடனடியாக விலைக்கு வாங்க முடியாது . காலப்போக்கில் சம்பாதிக்க வேண்டும் . 2. You make your own luck if you stay at it long enough . நீண்ட காலம் , ஒன்றில் நிலைத்திருந்தால் உங்களுக்கான அதிர்ஷ்டத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம் . 3. Earn with your mind , not your time . புத்தியைக் கொண்டு வருமானம் ஈட்டுங்கள் . நேரத்தைக் கொண்டு அல்ல . 4. All the benefits in life come from compound interest - money , relationship , habits . பணம் , உறவுகள் , பழக்கவழக்கங்கள் என்று வாழ்க்கையின் அனைத்து அனுகூலங்களும் கூட்டுப் பெருக்கத்தின் மூலமாகவே வரம் பெறுகின்றன . 5. The people who succeed are irrationality passionate about something . வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்கள் எதன் மீதாவது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட காதல் கொள்பவர்களாக இருக்கிறார்கள் .  6. The smartest people can explain things...

கூகுள் கேட்ட கேள்விகள் - 3

கூகுள் கேட்ட கேள்விகள் - 3 Questions by Google - 3 (Ideas Panel Questions) 1. How to earn money in this volatile market ? இந்த ஏறியிறங்கும் சந்தையில் எவ்வாறு பணம் ஈட்டுவது ? அது ஏறும் சந்தையாக இருந்தாலும் சரி அல்லது இறங்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட பட்டையில் உழலும் சந்தையாக இருந்தாலும் சரி மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் அவ்வப்போது எழுந்த வண்ணமே இருக்கும் . இந்த வாய்ப்புகளை இனங்கண்டு முதலீடு செய்து அடங்கி அமர்வது தான் ஒரேயொரு சரியான வழி . 2. What happens when 50 percent of Indian population started investing in stock market ? இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் ? தற்போது இந்திய மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . இந்த 3 சதவீதம் 6 சதவீதம் என்று இரட்டிப்பானாலே அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் . 3. Past pandemics and their effect in stock market ? பழைய பெருந்தொற்றுகள் பங்குச்சந்தையை எங்ஙனம் பாதித்தன ? பெருந்தொற்றுக் காலங்களில் சந்...

பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வது எப்படி ?

பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வது எப்படி ? (பதில் சொல்வதற்கு முன் ஒரு சிறிய முன் குறிப்பு : கூறியது கூறல் என்பதாக இந்தப் பதிவை எடுத்துக் கொள்ள வேண்டாம் . ஏற்கெனவே படித்த பாடங்களை ஒருமுறை திருப்பிப் பார்த்ததாகக் கொள்ளவும்) மாதம் உங்களால் எவ்வளவு பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும் என்பதை முதலில் தீர்மானிக்கவும் . அது 5000 ரூபாயாகவும் இருக்கலாம் . 50000 ரூபாயாகவும் இருக்கலாம் . ஆனால் இந்தப் பணத்தை நீங்கள் தொடர்ந்த வாக்கில் முதலீடு செய்ய வேண்டும் . முதலில் 50000 என்று தொடங்கி விட்டு நாளடைவில் அதனை 5000 என்று குறைக்காமல் மாதம் 3000 என்ற வாக்கில் தொடர்ந்து முதலீடு செய்வது இன்னும் நல்லது . மாதம் 20000 ரூபாய் முதலீடு செய்ய முடியுமென்றால் அதனை 5000 என்று வாரக்கணக்கில் நான்கு முறையாக முதலீடு செய்வது இன்னும் நல்லது . பங்குச்சந்தையின் ஆதார குணம் என்னவென்றால் அது ஏறி இறங்கும் தன்மை படைத்தது . இந்த ஏறி இறங்கும் தன்மையை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும் ஒரு உத்தியே time diversification என்று சொல்லப்படும் இந்தத் தொடர்ந்த வாக்கிலான முதலீடு . இவ்வாறு முதலீடு செய்தால் பங்க...