Posts

கூகுள் கேட்ட கேள்விகள் - 2

கூகுள் கேட்ட கேள்விகள் - 2 Questions by Google - 2 (Ideas panel questions) 1. What would have happened to stock market if Harshad mehta did not get caught ? ஹர்ஷத் மேத்தா பிடிபடவில்லை என்றால் பங்குச்சந்தை என்னவாகியிருக்கும் ? சந்தை இன்னும் உயரங்களுக்குச் சென்றிருக்கும் . விழும் போது அடியும் பலமாக இருந்திருக்கும் . 2. Impact of mutual funds investment growth on equity markets performance ? பரஸ்பர நிதி முதலீடுகள் அதிகரித்து வருவது பங்குச் சந்தைக்கு எவ்விதம் உதவும் ? முன்பெல்லாம் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளைக் கொஞ்சமே கொஞ்சம் விற்றாலும் சந்தை சரிந்து விடும் . இப்போது சந்தை சரியாமல் எதிர்த்து நிற்கிறது . இதற்கு முழுமுதற்காரணம் நாளும் அதிகரித்து வரும் பரஸ்பர நிதி முதலீடுகள் மட்டுமே . சந்தையின் மதிப்பைத் தக்க வைக்க பரஸ்பர நிதி முதலீடுகள் பேருதவி புரிகின்றன . முதலீட்டாளர்களும் இதனால் வளமை அடைகின்றனர் . 3. I want to invest in stock market but I am not from commerce background where should I start from ? நான் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறேன் . ஆனால் வர்த்தகப் பின்புலம் ...

ஞான மொழிகள்

ஞான மொழிகள் Wisdom Quotes 1. We don't receive wisdom ; we must discover it for ourselves after a journey that no one can take us or spare us - Marcel Proust நாம் ஞானத்தைப் பெற முடியாது . அது நீண்ட நெடிய பயணத்தின் பின்னர் நாம் கண்டறிய வேண்டியது . அதனை யாரும் நம்மிடமிருந்து எடுக்கவோ அல்லது கொடுக்கவோ இயலாது . 2. The whole problem with the world is that fools and fanatics are always so certain of themselves , but wiser people so full of doubts - Bertrand Russell உலகத்துடனான பெரும் பிரச்னை என்னவென்றால் முட்டாள்களும் வெறியர்களும் தங்களைக் குறித்த நிச்சயம் கொண்டவர்களாகவும் புத்திசாலிகள் தங்களைக் குறித்த ஐயம் கொண்டவர்களாகவும் இருப்பது தான் .  3. Age doesn't always bring wisdom . Sometimes age comes alone . வயது , ஞானத்தை எப்போதும் கொண்டு வராது . சில சமயங்களில் வயது தனியே வரும் .  4. The wisest mind has something yet to learn - George Santayana புத்திசாலி மனதிற்கு கற்றுக் கொள்ள வேண்டியது ஏதேனும் எப்போதும் இருக்கும் .  5. Science is organized knowledge . Wisdom is organized life - ...

கனவு மொழிகள்

கனவு மொழிகள் Dream Quotes 1. The distance between your dream and reality is called action . உங்கள் கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட தூரம் செயல்பாடு என்பதாக அழைக்கப்படுகிறது . 2. It feels good to be lost in the right direction . சரியான திசையில் தொலைந்து செல்வது ஏற்புடையதே . 3.Sometimes the right path is not the easiest one . சில சமயங்களில் சரியான பாதை இலகுவானதாக இருக்காது . 4. Life is not about finding yourself . Life is about creating yourself - George Bernard Shaw உங்களைக் கண்டெடுப்பது வாழ்க்கையல்ல . வாழ்க்கை என்பது உங்களை நீங்களே உருவாக்குவதாகும் . 5. Your work is to discover your world and then with all your heart give yourself to it - Buddha உங்களுக்கான உலகத்தைக் கண்டுபிடியுங்கள் . பின்னர் மனமுவந்து அந்த உலகிற்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் . 6. Do not follow where the path may lead . Go instead where there is no path and leave a trail - Ralph Waldo Emerson கண்ணில் பட்ட பாதைகளில் எல்லாம் செல்லாதீர்கள் . மாறாக ஒரு தனிப்பட்ட பாதையை உங்களுக்காக உருவாக்கித் தடம் பதியுங்கள் . 7.Ne...

உயிர் வாழ்வு சாய்வு

உயிர் வாழ்வு சாய்வு Survivorship Bias பரஸ்பர நிதிகளை உதாரணமாகக் கொண்டு உயிர் வாழ்வு சாய்வு என்பதைப் புரிந்து கொள்ள முயலலாம் . பரஸ்பர நிதி நிறுவனங்கள் , வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களது நிதிகளை மட்டும் முன்னிறுத்தும் . பத்து நிதிகள் இருந்தால் ஐந்து நிதிகள் நட்சத்திர நிதிகள் என்பதாகக் கூறிக் கொள்ளும் . அவர்களது சரியாகச் செயல்படாத நிதிகள் சரிவரச் செயல்படும் நிதிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் . சில நிதிகள் மூடப்பட்டிருக்கும் . இதனையெல்லாம் நிறுவனம் தெரிவிக்காது . நிறுவனத்தின் உண்மையான செயல்பாட்டைக் கண்டறிய வேண்டுமென்றால் இத்தகைய இணைக்கப்பட்ட மற்றும் மூடப்பட்ட நிதிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் . அவ்வாறு கணக்கிடவில்லையென்றால் நாம் உயிர் வாழ்வு சாய்வுக்கு உள்ளாகியிருப்பதாக அர்த்தம் .  தனிப்பட்ட முதலீட்டாளர்களும் உயிர் வாழ்வு சாய்வின் பக்கம் சாய்ந்திருப்பார்கள் . என்னையே உதாரணமாகக் கொள்ளலாம் . பங்கு முதலீடுகள் குறித்து யார் எப்போது கேட்டாலும் என்னுடைய ICICI வங்கி வெற்றிக் கதையை முன்னிறுத்துவது தொன்றுதொட்டு எனது வழக்கமாக இருந்து வருகிறது . அது எவ்விதம் 100 மடங்கு முதலீட்டு...

பஃபெட் எங்ஙனம் பணக்காரர் ஆனார் ?

பஃபெட் எங்ஙனம் பணக்காரர் ஆனார் ? இந்தக் கேள்விக்குப் பதிலாக ஒரு தனிப்பட்ட புத்தகமே எழுதலாம் . இருந்தாலும் அவருடைய முதன்மையான முதலீட்டு ஆயுதமான Float என்பதை மட்டும் இந்தப் பதிவில் பார்க்கலாம் . வாரன் பஃபெட்டின் முதலீட்டு வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு இனிய திருப்பமாக (serendipity) Float என்கிற இந்தக் கருத்தாக்கத்தைச் சொல்லலாம் . Float என்பதைப் புரிந்து கொள்ள காப்பீட்டு நிறுவனங்களின் வியாபார அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது . காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடுதாரர்களிடமிருந்து முதலில் முனைமத் தொகையை (premium) வசூலிக்கும் . காப்பீட்டுக் காலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடக்காவிட்டால் இந்த முனைமத்தொகை இதர செலவுகள் போக நிறுவனத்திடம் தங்கும் . இழப்பு நேரிட்டால் நிறுவனம் உரிமைத்தொகையை (claims) வழங்க வேண்டும் . ஒரு காப்பீட்டு நிறுவனம் முறையாகக் காப்பீட்டை வழங்குமானால் உரிமைத்தொகையை மிகவும் குறைத்துக் கொள்ள முடியும் . வாகனக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம் . வாகன ஓட்டிகளின் விபத்து குறித்த புள்ளி விவரங்களை ஆராய்ந்து வாகனக் காப்பீடு வழங்குவதன் மூலமாக உரிமங்களைக் கணிசமாகக் குறைத்துக் கொ...

பணத்தோட்டம்

பணத்தோட்டம் பங்குச்சந்தை முதலீடுகளை ஒரு தோட்டமாகக் கற்பனை செய்து பார்க்கலாம் .  முதன்முதலாக ஒரு கன்றை (நிறுவனப் பங்கை)  ஊன்றி வைக்கிறீர்கள் . அது தான் வரும் வசந்த காலங்களில் பூத்துக் குலுங்கப் போகும் உங்கள் முதலீட்டுத் தோட்டத்திற்கான ஆணி வேராகும் . மா , பலா , கொய்யா போன்றவற்றை மட்டுமின்றி நீண்ட கால அளவில் பலன்களைத் தரும் தேக்கு (Asian Paints, HDFC , L & T ) முதலான மரங்களையும் வளர்த்து வருகிறீர்கள் .  ரப்பர் மரம் (Balkrishna Industries) காபி (CCL Products) பருத்தி (Ambika Cotton Mill) மசகு எண்ணெய் (Castrol) நெற்பயிர் (Chamanlal Setia Exports)  புகையிலைச் செடிகள் (ITC) திராட்சைக் கொடிகள் (GM Breweries) மட்டுமின்றி வித்தியாசமான சில விதை வகைகளையும் தூவி வைக்கிறீர்கள் (Nesco , Tata Elxsi)  சமவெளியில் மலரவே மலராது என்று சொல்லப்படும் மலர் வகைகள் கூட உங்கள் தோட்டத்தில் மலர்கின்றன .  தோட்டத்திற்குள் ஒரு தோட்டமாக Bajaj Holdings , Tata Investment Corporation முதலிய பங்குகளையும் மற்றும் பரஸ்பர நிதிகளையும் வைத்துப் பராமரிக்கலாம் .  30 வகையான மரங்களைக் கொண்ட தோ...

நிழற்சண்டை

நிழற்சண்டை பெறுதிகளுக்கு (Derivatives) விளக்கம் தேவை என்பதாக நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார் . பெறுதிகளை விரிவாக விளக்கத் தொடங்கினால் அந்த விளக்கத்திற்குள் நாமே காணாமல் போய் விடுவோம் . எனவே அவைகளைக் குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம் . தெரியாத ஒன்றைத் தெரிந்த ஒன்றைக் கொண்டு புரிந்து கொண்டால் சுலபமாக இருக்கும் . அந்த அடிப்படையில் தெரியாத பெறுதிகளைத் தெரிந்த பங்குகளைக் கொண்டு புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் . பெறுதிகளின்  முக்கியமான இரண்டு வகைகளான Futures மற்றும் Options குறித்துக் கொஞ்சம் நெருங்கிச் சென்று ஆராயலாம் . பங்குகளுக்குத் தன்னளவில் மதிப்பு உண்டு . அவை பங்காதாயங்களை வழங்கும் . முதலீட்டுப் பெருக்கம் அடையும் . சந்தை விலையை விடக் குறைவான விலையில் அவை உரிமைப் பங்குகளை வழங்கும் . இலவசப் பங்குகளை அளிக்கும் . பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பு என்று பணப்பலன்கள் பலவற்றையும் அளிக்கும் .  பெறுதிகளுக்குத் தன்னளவில் மதிப்பு கிடையாது . பெறுதிகளுக்கு ஏன் பெறுதிகள் என்ற பெயர் என்றால் பெறுதிகள் தங்களது மதிப்பை மற்றவைகளிலிருந்து பெறுவதால் அவை பெறுதிகள் என்று அழைக்கப்படுகின்றன . ...