Posts

Showing posts from February, 2025

திறமை வளையம்

திறமை வளையம் Circle of Competence  ஒருவருக்கு நன்கு தெரிந்த, புரிந்த நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்வதான கருத்தாக்கம் முதலீட்டின் திறமை வளையம் (circle of competence) என்பதாக அழைக்கப்படுகிறது. திறமை வளையம் என்பதான இந்தக் கருத்தாக்கம் வாரன் பஃபெட் பரிந்துரைத்த முதலீட்டு உத்திகளில் முக்கியமான ஒன்றாகும்.  நீங்கள் ஒரு மருத்துவராக இருக்கும் பட்சத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் குறித்த உள்ளார்ந்த புரிதல் உங்களுக்கு இருக்கும். அத்தகைய நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்வது உங்களுக்கான ஒரு திறமை வளையமாக இருக்கும்.  முதலீட்டாளர்களுக்கு நிதி மற்றும் அது சார்ந்த துறைகளில் கூடுதல் புரிதல் இயற்கையாகவே இருக்கும். எனது பங்குத்தொகுப்பில் நிதி மற்றும் நிதி சார் துறைகள் 20 சதவீத இடத்தைப் பிடித்திருப்பது நான் திறமை வளையத்திற்குள்ளாக செயல்படுவதற்கான மறைமுகமான ஆதாரமாகும். அதற்காக மருத்துவர்கள் அவர்கள் துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றோ முதலீட்டாளர்கள் நிதி சார்ந்த துறைகளில் மட்டும் இயங்க ...

சந்தைத் திருத்தம் - கேள்வி பதில்

சந்தைத் திருத்தம் - கேள்வி பதில் Market Correction - Q & A கேள்வி: நாம் கரடிச்சந்தையில் தான் இருக்கிறோமா? பதில்: சந்தைக் குறியீடு 20 சதவீதம் அல்லது அதற்கும் மேலாகச் சரிந்தால் கரடிச்சந்தை தொடங்கி விட்டதாக அர்த்தம். சென்செக்ஸ் தற்போது அதன் உச்சபட்ச அளவான 85478 புள்ளியிலிருந்து கிட்டத்தட்ட 12 சதவீதம் சரிந்திருக்கிறது. எனவே இதனைக் கரடிச்சந்தை என்று கூறவியலாது. ஒரு திருத்தம் (correction) என்று கூறலாம். கேள்வி : சென்செக்ஸ் குறியீட்டின் இந்த 10000 புள்ளிகள் இழப்பை எப்படிப் பார்ப்பது? பதில்: சென்செக்ஸ் குறியீட்டின் இந்தத் திருத்தம் அதன் நீண்ட கால முன்னேற்றம் என்ற கணக்கில் மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.  கேள்வி: முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகள் சரிந்திருப்பது குறித்து? பதில்: முதலீட்டாளர்கள் பகுப்பாய்வை மேற்கொண்டு தரமான நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் இது ஒரு காகித இழப்பு (notional loss) மட்டுமே. அத்தகைய பங்குகள் மீண்டும் மதிப்பேற்றம் அடைந்து விடும். கேள்வி: என்ன தான் காகித இழப்பு என்று கூறிக்கொண்டாலும் dem...

பன்மடங்காளர்கள் - பத்து கட்டளைகள்

பன்மடங்காளர்கள் - பத்து கட்டளைகள் Multibaggers - Ten Commandments  1. You have to look for them பன்மடங்காளர்களைக் கைப்பற்ற நீங்கள் அவற்றை முதலில் மனக்கண்ணில் பார்க்க வேண்டும். அவற்றில் மனதைச் செலுத்த வேண்டும். பன்மடங்காளர் வேட்டை என்பது யானை வேட்டை மாதிரி. யானை வேட்டைக்குச் செல்லும் போது வழியில் தென்படும் குருவிகளைச் சுட்டுக் கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு தொடர்ந்து குருவிகளைச் சுட்டுக் கொண்டிருந்தால் குருவி வேட்டைக்கு நீங்கள் பழகி விடுவீர்கள். ஆயிரம் குருவிகள் கூட ஒரு யானைக்கு ஈடாகாது. மேலும் குருவி வேட்டையின் துப்பாக்கி சத்தத்தைக் கேட்டால் யானைகள் ஓடி ஒளிந்து கொள்ளும். பன்மடங்காளர் பங்குகள் உங்கள் கண்ணில் தென்படாது. Samvardhana Motherson International நிறுவனப்பங்கு ஒன்றின் விலை 125 ரூபாய். அதன் 52 வார உயர்ந்த பட்ச விலை 217 ரூபாய். அதன் 52 வார குறைந்த பட்ச விலை 107 ரூபாய். இது ஒரு பக்கம். ஆனால் Samvarthana Motherson International நிறுவனத்தின் பூர்வாசிரமப் பெயர் Motherson Sumi Systems. அது இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு Samvardhana Motherson International என்ற பெயரிலும், Mother...

வான்கா - எழுத்தோவியங்கள்

வான்கா - எழுத்தோவியங்கள் 1. I dream my painting and I paint my dream. எனது ஓவியங்களை நான் கனவு காண்கிறேன். பின்னர் இந்தக் கனவுகளை நான் ஓவியமாக்குகிறேன். 2. I put my heart and soul into my work and I have lost my mind in the process. எனது இதயத்தையும் ஆத்மாவையும் என் வேலையில் இடுகிறேன், இந்த வழிமுறையில் என் மனதை இழக்கிறேன். 3. The only time I feel alive is when I'm painting. ஓவியம் தீட்டும் போது மட்டுமே நான் உயிருடன் இருப்பதாக உணர்கிறேன். 4. I don't know anything with certainty, but seeing the stars makes me dream. எனக்கு எதுவும் உறுதியாகத் தெரியாது, ஆனால் நட்சத்திரங்களைப் பார்ப்பது என்னைக் கனவு காணத் தூண்டுவதாக இருக்கிறது. 5. If you hear a voice within you say, 'you cannot paint' then by all means paint. And that voice will be silenced. உங்களால் ஓவியம் தீட்ட முடியாது என்று உங்களுக்குள் ஒரு குரல் சொல்வதை உங்களால் கேட்க முடிந்தாலும் எவ்வாறாயினும் ஓவியம் தீட்டுங்கள். அந்தக் குரல் மௌனமாகி விடும். 6. Normality is a paved road: It’s comfortable to walk, but no flowers grow on...

தெரிந்து கொள்வோம் - 2

தெரிந்து கொள்வோம் - 2 1. Invisible Hand: ஆடம் ஸ்மித் சொன்ன காலத்தை வென்ற கருத்தாக்கம் இது. ஒரு சுதந்திர சந்தை (free market) ஒவ்வொரு நுகர்வோரும் தனக்கு என்ன வேண்டும் மற்றும் என்ன விலை கொடுத்து அதனை வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது. அதே மாதிரி ஒவ்வொரு விற்பனையாளரும் எதனை விற்பது மற்றும் என்ன விலைக்கு என்பதை முடிவு செய்வதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது. இவ்வாறாக தேவைப்பாடும் வழங்கலும் (demand and supply) பொருட்கள் மற்றும் விலை சார்ந்து சமநிலை ஒன்றை வந்தடைகின்றன. இது சமூகம் முழுமைக்கும் பயன் தருகிறது. மிகவும் முக்கியமாக இந்த செயல்பாடுகள் அனைத்தும் அரசாங்கம் உள்ளிட்ட எந்த அமைப்பும் ஆணையிடாமல் தன்னளவில் செய்யப்படுகின்றன. கட்புலனாகாத 'மாயக்கரம்' ஒன்று இதனைக் கட்டுப்படுத்துவதாகத் தோன்றுகிறது. ஒரு சின்ன உதாரணம் மூலமாக இதனைப் புரிந்து கொள்ளலாம். அடுமனை (Bakery) ஒன்றில் 20 ரூபாய் மதிப்புள்ள ரொட்டி அடுக்கு 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.  இன்னொரு அடுமனை இலாபத்திற்கு ஒரு வாய்ப்பு இருப்பதை உணர்ந்து 30 ரூபாய்க்கு ரொட்டி அடுக்கை விற்க முனைகிறது...